சிந்திக்க கூடியது ...!!!
Fri Mar 08, 2013 11:23 pm
ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,' 'ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.
மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.
அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.
வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.
அனால் எலித்தொல்லை குறையவில்லை.
இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில் தெரிய வந்தது, பணம் கிடைக்குமே
என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.....
#இந்தக் கதையில் வரும் அரசர் தான் பொதுமக்களாகிய நாம்.
சில ஊழல்
அரசியல்வாதிகள் தான் பொதுமக்கள்.
எலிகளை(ஊழல்,லஞ்சம்) அழிப்பார்கள் என்று நம்பி ஓட்டுப் போடுகிறோம் ஆனால் அவர்கள் அதை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.....!!
- யாரோ
Permissions in this forum:
You cannot reply to topics in this forum