“சிந்திக்க வேண்டுகிறேன்..”
Wed Apr 30, 2014 6:21 pm
வருடா வருடம் அட்சயதிருதி வருகிறது...நாமும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் - “சிந்திக்க வேண்டுகிறேன்..” - எனற கவிதை நூலில் இருந்து ஒரு கவிதை - “அட்சயதிருதி”
"கணவனுக்குத் தெரியாமல்
சில்லறை சேர்த்து
உண்டியல் நிறையுமுன்னே
மென்மையாய்
அதை உடைத்து...
ஒரு கிராம்
தங்கக் காசுக்குப்
பணம் தேற்றி...
நடக்க இடமில்லா
தியாகராய நகர் வீதியில்
மக்கள் வெள்ளத்தில் நீந்தி
நகைக்கடை வாயிலில்
நுழையும் கூட்டத்தில்
வரிசையில் நின்று
வேர்த்து விறுவிறுத்து
முட்டி மோதி மிதிபட்டு
உள்ளே நுழைந்து
பெரு முயற்சியில்
ஒரு கிராம் நகை வாங்கி
வெற்றிப் புன்னகையுடன்
வீடு திரும்பியவள்...
அதிர்வடைகிறாள்..
கழுத்தில் இருந்த
இரண்டு பவுன்
சங்கிலியைக் காணோம்...."
"கணவனுக்குத் தெரியாமல்
சில்லறை சேர்த்து
உண்டியல் நிறையுமுன்னே
மென்மையாய்
அதை உடைத்து...
ஒரு கிராம்
தங்கக் காசுக்குப்
பணம் தேற்றி...
நடக்க இடமில்லா
தியாகராய நகர் வீதியில்
மக்கள் வெள்ளத்தில் நீந்தி
நகைக்கடை வாயிலில்
நுழையும் கூட்டத்தில்
வரிசையில் நின்று
வேர்த்து விறுவிறுத்து
முட்டி மோதி மிதிபட்டு
உள்ளே நுழைந்து
பெரு முயற்சியில்
ஒரு கிராம் நகை வாங்கி
வெற்றிப் புன்னகையுடன்
வீடு திரும்பியவள்...
அதிர்வடைகிறாள்..
கழுத்தில் இருந்த
இரண்டு பவுன்
சங்கிலியைக் காணோம்...."
Permissions in this forum:
You cannot reply to topics in this forum