வீட்டுக் கடன் குறித்த சந்தேகங்களுக்கு
Fri Jul 10, 2015 2:41 pm
நாணயம் விகடன் ட்விட்டர் கேள்வி - பதில்!
வீட்டுக் கடன் குறித்த சந்தேகங்களுக்கு நாணயம் விகடன் ட்விட்டரில் பதிலளிக்கிறார் பஞ்சாப் நேஷனல் பேங்கின் போரூர் கிளை மேலாளர் கிருஷ்ணன்.
1. என் வயது 47. வருட வருமானம் ரூ. 1 5 லட்சம். தற்போதைய வீட்டுக் கடன் பாக்கி ரூ. 7 லட்சம். மொத்தமாக கட்டிவிட்டால், அடுத்து வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்?
உங்களின் வயது மற்றும் வருமானத்தைக் கணக்கிட்டு பார்க்கும்போது, அதிகபட்சம் ரூ.80 லட்சம் வரைக்கும் கடன் பெறலாம். ஆனால், இந்தக் கடன் தொகை நீங்கள் வாங்க இருக்கும் வீட்டின் மதிப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
2.என் வீட்டுக் கடன் வட்டி 11.5% ஆக உள்ளது. தற்போதைய குறைந்த வட்டி விகிதமான 9.7% க்கு மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அப்படி செய்வது நல்லதா?
வீட்டுக் கடனை அதிக வட்டியிலிருந்து குறைந்த வட்டி விகிதத்துக்கு மாற்றிக்கொள்வதற்கு வீட்டுக் கடன் தவணையை முறையாகச் செலுத்தி வந்திருக்க வேண்டும். நிலுவைத் தொகை இருக்கக் கூடாது. மேற்படி, வங்கியிலிருந்து கடன் வழங்கிய சான்று (Loan sanction letter), அடமானம் வைக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்கள், ஸ்டேட்மென்ட் ஆஃப் அக்கவுன்ட், முன்கூட்டியே கடன் முடிப்பதற்கான கடிதம் மற்றும் உங்களது சமீபத்திய வருமானப் படிவம் ஆகியவற்றுடன் வட்டி குறைவாக உள்ள வங்கியை அணுகவும்.
வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவது, வட்டி விகிதத்தில் ஒரு சதவிகிதத்துக்கு அதிகமாக வேறுபாடு இருக்கும்பட்சத்தில் மற்றும் கடன் தொகை ரூ.25 லட்சம், அதற்கு மேலும், திரும்பச் செலுத்தும் காலம் ஐந்து வருடங்களுக்கு அதிகமாக இருந்தால் மாற்றிக் கொள்வது லாபமே.
3. என் வயது 45. மாத சம்பளம் ரூ 25,000. எனக்கு வீட்டுக் கடன் எத்தனை லட்சம் கிடைக்கும்?
உங்களின் வயது மற்றும் வருமானத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, அதிகபட்சம் ரூ.12.50 லட்சம் வரைக்கும் கடன் பெறலாம். ஆனால், இந்தக் கடன் தொகை நீங்கள் வாங்க இருக்கும் வீட்டின் மதிப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

4. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
வீட்டுக் கடன் வாங்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவைப்படும்:
* முழுமையகப் பூர்த்திச் செய்யப்பட்ட வங்கிக் கடன் படிவம் (புகைப்படத்துடன்)
* புகைப்படச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை)
* முகவரிச் சான்று (ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வீட்டு வாடகை ஒப்பந்தம், காஸ் பில் போன்றவை)
* வருமானச் சான்று
* கடந்த மூன்று மாதங்களுக்கான வருமான படிவம்
* கடந்த மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்தியதற்கான நகல்
* வருமானம் வரவு வைக்கப்படும் வங்கிக் கணக்கின் ஸ்டேட்மென்ட் (கடந்த ஆறு மாதங்களுக்கானது)
* உங்களது மனைவி மற்றும் பிள்ளைகள் பணி புரிந்தால் அவர்களது வருமானச் சான்று
* பான் கார்டு நகல்
* வாங்க இருக்கும் வீட்டின் மூலப் பத்திரத்தின் நகல், வீடு கட்டியதற்கு/கட்டுவதற்கான கட்டட அனுமதி/திட்ட அனுமதி நகல், விற்பனை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் சிவில் இன்ஜினீயரிடம் பெறப்பட்ட வீடு கட்டுவதற்கான மதிப்பீட்டு விவரம்
மேற்கண்ட ஆவணங்களுடன் வங்கியை அணுகி வீட்டுக் கடன் பெறலாம்.
5. வீட்டுக் கடன் வட்டியில் ஃபிக்ஸட், ஃப்ளோட்டிங், எந்த வட்டி விகிதம் லாபகரமாக இருக்கும்?
வீட்டுக் கடன் வட்டியில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதமே லாபகரமாக இருக்கும். காரணம் ஃபிக்ஸட் வட்டி விகிதம் என்பது தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு நிலையானதாக இருக்கும். மேலும், 0.50% ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைவிட அதிகமாகவும் இருக்கும். எனவே, ஐந்து வருடங்களுக்குள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதாக இருந்தால், ஃபிக்ஸட் வட்டி விகிதமே உகந்தது.
6. என் அப்பா பெயரில் [size=13]மனை இருக்கிறது. அவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். என் அப்பாவின் இடத்தில் வீடு கட்ட எனக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா?
உங்களுக்கு வீடு கட்டுவதற்கு வீட்டுக் கடன் நிச்சயம் கிடைக்கும். இதற்காக, நீங்களும் உங்கள் அப்பாவும் சேர்ந்து கடன் பெற வேண்டும். உங்கள் அப்பா கடனாளராகவும், நீங்கள் இணைக் கடனாளராகவும் அனுமதித்து கடன் வழங்கப்படும்.
7. சின்னதாக மளிகைக் கடை நடத்தும் எனக்கு மாதம் ரூ. 50,000 வருமானம் வருகிறது. எனக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா? என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்?
உங்களுக்கு நிச்சயமாக வீட்டுக் கடன் கிடைக்கும். உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை என்பதால் தோராயமாக 40 என்று கணக்கிட்டு, உங்கள் மாத வருமானத்துக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் கிடைக்கும். நீங்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்...
* முழுமையகப் பூர்த்திச் செய்யப்பட்ட வங்கிக் கடன் படிவம் (புகைப்படத்துடன்)
* புகைப்படச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை)
* முகவரிச் சான்று (ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வீட்டு வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் போன்றவை)
* வருமானச் சான்று
* கடந்த மூன்று வருடங்களாக வருமான வரி செலுத்தியதற்கான நகல்
* வங்கிக் கணக்கின் ஸ்டேட்மென்ட் (கடந்த ஆறு மாதங்களுக்கானது)
* உங்களது மனைவி மற்றும் பிள்ளைகள் பணிபுரிந்தால் அவர்களது வருமானச் சான்று
* பான் கார்டு நகல்
* வாங்க இருக்கும் வீட்டின் மூலப் பத்திரத்தின் நகல், வீடு கட்டியதற்கு/கட்டுவதற்கான கட்டட அனுமதி/திட்ட அனுமதி நகல், விற்பனை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் சிவில் இன்ஜினீயரிடம் பெறப்பட்ட வீடு கட்டுவதற்கான மதிப்பீட்டு விவரம் [/size]

8. மனை வாங்க மட்டும் தனியே கடன் கிடைக்குமா? குறைந்தது எத்தனை சதுர அடி மனை இருக்க வேண்டும்?
காலி மனை வாங்க மட்டும் தனியே நிச்சயமாக கடன் கிடைக்கும். இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. வாங்க இருக்கும் மனையின் லே-அவுட் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களான DTCP / CMDA (சென்னையாக இருந்தால்)/ நகராட்சி/ மாநகராட்சி/ பஞ்சாயத்து அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். வாங்க இருக்கும் காலி மனையின் மதிப்பில் 60% மட்டுமே கடன் கிடைக்கும். காலி மனை வாங்குவதற்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமே வசூலிக்கப்படுகிறது. காலி மனை வாங்கிய தேதியிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் வீடு கட்ட வேண்டும் தவறினால் அதிகப்படியான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
பொதுவாக கட்டட/திட்ட அனுமதி 800 சதுர அடிக்கு குறைவாக வழங்கப்படுவதில்லை, எனவே, வங்கிக் கடனும் வழங்கப்பட மாட்டாது.
9. பழைய வீடு வாங்க [size=13]வங்கிகளில் வீட்டுக் கடன் தருவார்களா? அதற்கு ஏதாவது நிபந்தனைகள் இருக்கின்றனவா?[/size]
பழைய வீடு வாங்க நிச்சயமாக வீட்டுக் கடன் வழங்கப்படும். பழைய வீட்டிற்கான கட்டட/திட்ட அனுமதி வாங்கியிருக்க வேண்டியது அவசியம். பழைய வீட்டின் மதிப்பில் 75% வரை கடன் வழங்கப்படும். வாங்க இருக்கும் வீட்டின் மீதமுள்ள ஆயுட்காலம் (Expected Residual Life) பொறுத்து கடன் தவணை நிர்ணயிக்கப்படும். உதாரணத்துக்கு, நீங்கள் வாங்கும் வீட்டின் மீதமுள்ள ஆயுட்காலம் 10 வருடங்களாக இருந்தால் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான தவணைக் காலமும் 10 ஆண்டுகளே நிர்ணயிக்கப்படும்.
10. பொதுவாக வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் எவ்வளவு காலத்துக்கு ஒருமுறை அதிகரிக்கும்?
வீட்டுக் கடனுக்கான வட்டியை அதிகரிப்பதும் குறைப்பதும் அந்தந்த வங்கியின் நடைமுறைக்கு உட்பட்டது. இதுதவிர, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் மத்திய அரசின் கட்டளைகளுக்கு இணங்கவும் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்கின்றன. எனவே, எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
11. எப்போதும் ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி அதிகமாகவும், புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி குறைவாகவும் இருப்பது ஏன்?
இந்த நடைமுறை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஏனெனில், கடன் வழங்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கிகள் மணி மார்க்கெட்டில் வாங்கிய கடன் வட்டியைப் பொறுத்தது. சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அனைத்து வீட்டுக் கடன்களுக்கும்/ ஏற்கெனவே வாங்கிய வீட்டுக் கடன் மற்றும் புதிதாக வாங்கும் வீட்டுக் கடன் ஆகிய இரண்டுக்கும் ஒரேவிதமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன. உதாரணமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 1.6.15-ம் தேதி முதல் 10% வட்டியே வசூலிக்கப்படுகிறது.
12. நான் வேலை பார்க்கும் கம்பெனி மிகப் பெரியது. எனக்கு கடன், வீட்டின் மதிப்பில் சுமார் 50%தான் வேண்டும் என்றால், வட்டியில் சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?
பொதுவாக வட்டியில் சலுகை வழங்குவதில்லை. ஒரே நிறுவனத்திலிருந்து அதிக நபர்கள் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பித்தால் சில சலுகைகள் வங்கியின் நிபந்தைகளுக்கு உட்பட்டு வழங்கப்படலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum