தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:20 am
எல்லோருக்கும் வாழ்க்கையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவும் ஆசையும் இருக்கும். அதற்குப் பெரும்பாலானவர்கள் வீட்டுக் கடனையே நம்பியிருப்பார்கள். அது குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துகொண்டே இருக்கும். அவற்றில் சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்களும்:

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?


விண்ணப்பதாரரின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று, மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்), தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி), விற்பனைப் பத்திரத்தின் நகல், சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்), உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல், கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்) ஆகிய ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும்.

நமக்கான வீட்டுக் கடன் வாங்குவதற்கான தகுதியை வங்கி எப்படித் தீர்மானிக்கும்?


திருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும். அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக, மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்கிடும். கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் பட்சத்தில் அவர்களின் வீட்டுக் கடன் தகுதி அதிகமாக இருக்கும்.

மாறும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் (Floating Rate Home Loans) என்றால் என்ன?


ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவது அல்லது குறைக்கப்படுவதைப் பொறுத்து மாறும் தன்மை உடையது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் முழு காலத்துக்கும் ஒரே அளவு மாதத் தவணை (இ.எம்.ஐ.) இருக்காது.

அவ்வப்போது சில நூறு ரூபாய்கள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இந்த ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியுமானால் மாறுபடும் வட்டியைத் தேர்வு செய்யலாம். இந்த விவரங்கள் கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது கடன் வழங்கும் காலத்தில் உள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பொருந்தும்.

வட்டி விகிதங்கள் மாறும்போது வங்கி அதைத் தெரிவிக்குமா?


வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால் வங்கி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நிலையான வட்டி விகிதம் (Fixed Rate Home Loan) என்றால் என்ன?


கடன் காலம் முழுமைக்குமான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும். இது நீங்கள் வாங்கியிருக்கும் கடனின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கடன் பெறும் சமயத்தில் வட்டி விகிதம் குறைவானதாக இருந்தால் இம்முறை உபயோகமானதாக இருக்கும். எதிர்காலத்தில் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்தாலும் உங்கள் கடன் மீதான வட்டி விகிதம் நிலையாக இருக்கும்.

எல்லா மாதமும் குறையும் முறையில் (Reducing Balances Method) வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


உங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது.

thanks: the Indhu
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:25 am
பழைய வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
சொந்த வீடு கனவில் உள்ள பலரும், புது வீடுகளை மட்டுமே வாங்க நினைப்பதில்லை. பழைய வீடுகள் என்றாலும் வாங்கத் தவறுவதில்லை.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். புதிதாக வீடு வாங்க விரும்பினால் வங்கியில் வீட்டுக் கடன் கிடைப்பது போலப் பழைய வீடுகளை வாங்கவும் வங்கிக் கடன் கிடைக்குமா?

சிக்கல், கெடுபிடி

பழைய வீட்டுக்கு வங்கிக்கடன் கிடைக்காது என்றும் கிடைக்கும் என்றும் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். உண்மையில் பழைய வீடுகள் வாங்கவும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம் என்றே கூறு கிறார்கள் வங்கியாளர்கள்.

ஆனால், பழைய வீடுகளுக்கு வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பழைய வீட்டுக்குக் கடன் வாங்க நிறையக் கெடுபிடிகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள். சரி, என்னென்ன சிக்கல்கள், கெடுபிடிகள் இருக்கின்றன என்று பார்த்துவிடுவோம்.

இப்போது நீங்கள் புதிய வீடு வாங்குவதாக வைத்துக் கொள்வோமே. புதிய வீட்டின் மதிப்பை மதிப்பிடுவது மிகவும் சுலபம். அதற்காக வழக்கமாக ஆவணங்கள் அளிப்பதும், விதிமுறைகளைப் பின்பற்றிக் கடன் வழங்குவதும் எளிது. எனவே புதிய வீட்டுக்கு வங்கிக் கடனைச் சுலபமாகப் பெறலாம்.

மதிப்பீடு


இதே பழைய வீட்டுக்குக் கடன் என்று வரும்போது வீட்டை மதிப்பீடு செய்வதே கொஞ்சம் கடினம். பொதுவாக வீட்டுக் கடன் வழங்க வசதியாக வங்கி சார்பில் வீட்டை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர் ஒருவர் வருவார்.

அவர் மதிப்பீடு செய்து வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, வீடு வலுவாக உள்ளதா இல்லையா? தாங்கு திறன் எவ்வளவு? எனப் பல அம்சங்களில் வீட்டை மதிப்பிடுவார். அவரது மதிப்பீட்டு அறிக்கையை வங்கியிடம் தருவார். அதன் அடிப்படையில் வங்கி பழைய வீட்டுக்குக் கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும்.

வீட்டுக்கடன் எவ்வளவு?


புதிய வீட்டுக்கு ரூ. 10 லட்சம் தருவார்கள் என்று வைத்துக் கொண்டால் பழைய வீட்டுக்கு அதிகபட்சமாக 7.50 லட்சம் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார் முன்னாள் வங்கி அதிகாரி எஸ்.ஜி.கிருஷ்ணன். “ பழைய வீட்டின் மதிப்பு குறைவாகவே மதிப்பிடப்படும். தனி வீடாக இருந்தால் இடத்துக்கான மதிப்பு கூடியிருக்கும்.

எனவே அதை வைத்தும் கடன் வழங்குவதும் உண்டு. அதேசமயம் அடுக்குமாடி பழைய வீடாக இருந்தால், இடம் 300 சதுர அடி, 200 சதுர அடி என்றே பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் பெரிய அளவில் கடன் வாங்க முடியாது. அதுமட்டுமல்ல பழைய வீட்டுக்குக் கடன் வாங்கிவிட்டு அதற்கு இ.எம்.ஐ. செலுத்த வழங்கப்படும் கால அவகாசம் குறைவாகவே இருக்கும்” என்கிறார் கிருஷ்ணன்.

மார்ஜின் தொகை கூடும்


புதிய வீட்டுக்குக் கடன் வாங்கும்போது 10 முதல் 15 சதவீதம் மார்ஜின் தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. ஆனால் பழைய வீடாக இருந்தால், 20 சதவீதமோ அல்லது 25 சதவீதமோ தொகையை வைத்திருக்க வேண்டும். வழக்கமான மார்ஜின் தொகையைவிட 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதால் பெரும்பாலான வங்கிகள் பழைய வீடுகளுக்குக் கடன் அளிக்கக் கெடுபிடிகள் காட்டவும் செய்கின்றன. ஆனால், பழைய வீட்டுக்குக் கடன் பெற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:28 am
வீட்டுக் கடன்: வேறு வங்கிக்கு மாற முடியுமா?

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? House_loan_2106263f
கடனை வாங்கி வீடு வாங்கினாலும், அந்தக் கடனை அடைப்பதற்குள் பலருக்கும் தலையே சுற்றிவிடும். நம்மூரில் வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடும். இன்னும் சில சமயம் ஏதாவது குறிப்பிட்ட வங்கியில் வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இதைப் வைத்து அந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சிலர் நினைப்பார்கள்.

உண்மையில், வீட்டுக் கடனை ஒரு வங்கியில் வாங்கிவிட்டு இன்னொரு வங்கிக்கு மாற முடியுமா? நிச்சயம் முடியும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். இப்போது நீங்கள் வாங்கிய வீட்டுக் கடனுக்கு 18 மாதங்கள் மட்டுமே சமன்படுத்தப்பட்ட தொகை (இஎம்ஐ) செலுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம்.

அப்படியென்றால் அசல் தொகையில் அதிகபட்சமாக ரூ.50-75 ஆயிரம் அடைத்திருப்பீர்கள். மீதமுள்ள தொகையை நீங்கள் தாராளமாக வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதில் தடை ஏதும் கிடையாது. வங்கி மாறுவது என்பதைப் பொறுத்தவரை வீட்டுக் கடன் வாங்கிய வங்கியின் கடனை முன்கூட்டியே அடைப்பது போலத்தான் என்கிறார் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷணன்.

நாமே பணத்தை முன்கூட்டியே செலுத்திக் கடனை அடைப்பதை ஃபோர் குளோசர்ஸ் என்று சொல்லுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முன் கூட்டியே வீட்டுக் கடனை அடைத்தால் 2 சதவீத அபராதக் கட்டணத்தையும் வங்கிக்குச் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு இது மிகப்பெரும் சுமையாக இருந்தது.

இந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டது. சில வங்கிகள் மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை அளித்தன. நிலையான வட்டி விகிதத்தில் வாங்கியவர்களுக்கு அளிக்காமல் இருந்தன. ஆனால் இப்போது எல்லா வகையான வட்டி விகிதத்துக்கும் இந்த அபராதத் தொகை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனவே அபராதம் இன்றி கடன் தொகையை நாம் அடைத்துவிட முடியும். புதிதாக நாம் வேறு வங்கிக்கு மாறுவதற்கும் இது பயனளிக்கிறது என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

“ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறுவதை ‘டேக் ஓவர்’ என்று சொல்லுவார்கள். இதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. முதலில் எந்த வங்கியில் கடன் வாங்கினோமோ அந்த வங்கிக்கும், மாற விரும்பும் வங்கியிலும் விண்ணப்பம் அளிக்க வேண்டும். கடன் அளித்த வங்கியில் எஞ்சிய கடனை நாம் மாற விரும்பும் வங்கி அடைத்துவிடும் என்பதால், அவர்கள் கேட்கும் உறுதிமொழிகளை அளிக்க வேண்டும். வீட்டுப் பத்திரத்தை நாம் மாற விரும்பும் வங்கிக்கு பத்திரப் பதிவு செய்து தர வேண்டும். இதைச் செய்துவிட்டால் போதும், வங்கி மாறிவிடலாம்” என்கிறார் அவர்.

ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாறுபோது சில கட்டணச் செலவுகள் ஏற்படவும் செய்யும். வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றும்போது செயல்பாட்டுக் கட்டணம், நாம் மாற விரும்பும் வங்கியிலிருந்து பிரதிநிதிகள் வந்து வீட்டை மதிப்பீடு செய்வதற்கான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம் எனச் சில செலவுகள் இருக்கும். இவற்றையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:30 am
ஆன்லைனில் வீடு வாங்கலாமா? - கேள்வி - பதில்


கேள்வி : இருந்த இடத்திலேயே ஆன்லைன் மூலம் வீடோ, மனையோ வாங்குவது நம்பகமானதா?
- ஆர்.மகேந்திர செல்வன்,
சாய்பாபா காலனி, கோவை


இதற்குப் பதிலளிக்கிறார் இந்தியா ப்ராபர்ட்டி.காம் சி.இ.ஓ. கணேஷ் வாசுதேவன்.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை மிகவும் குறைவுதான். எனவே வீடு கட்டும் கட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலை இங்கு உள்ளது. இந்தப் போக்குதான் ஆன்லைன் மூலம் மனையோ வீடோ வாங்குவதற்கு முதல் தடையாகவும் உள்ளது. இதில் நம்பகத்தன்மை அம்சம் என்பது, நாம் வாங்கும் வீடு, மனை எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக ஆராய்வதில்தான் உள்ளது.

உதாரணமாக நீங்கள் ஒரு வீடு வாங்க விரும்புகிறீர்கள். அந்த வீட்டை நேரடியாகச் சென்று பார்த்து வாங்கும் போது உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். ஆனால் ஆன்லைனில் வீடு வாங்கும்போது அந்த வெளிப்படைத்தன்மையைச் சொல்வது கொஞ்சம் கஷ்டமாகிவிடுகிறது.
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பெரும்பாலான வீட்டுமனைகள் மற்றும் சொத்துகள் யார் வசம் உள்ளன என்ற ஆவணங்கள் இங்கு கணினியமயமாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஆன்லைனிலேயே நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட முடியும். அந்த நிலை இல்லாத காரணத்தால் நீங்கள் ஆன்லைனில் சொத்துகள் வாங்கும்போதுகூட எல்லாவற்றுக்கும் நேரடியாகச் செல்வது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.


கேள்வி: வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் வீட்டை, ஏலத்தில் விடும்போது அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியுமா?
- ஆர். ஆறுமுகம்,
காரப்பாக்கம், சென்னை


இதற்குப் பதிலளிக்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன்.
நிச்சயம் முடியும். வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் எடுக்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஏலத்தை வங்கிகள் நேரடியாக நடத்தாது. அரசால் அங்கீகரிகப்பட்ட ஒரு ஏலம் நிறுவனம் மூலம் வீடு ஏலத்தில் விடப்படும். முதலில் வீடு அமைந்துள்ள பகுதியில் தண்டோரா மூலம் வீடு ஏலத்தில் விடப்படும் விஷயம் தெரிவிக்கப்படும். நோட்டீஸ் விநியோகிப்பார்கள். சில வங்கிகள் பத்திரிகை விளம்பரமும் செய்வதுண்டு.
முதலில் ஏலத்தில் கலந்துகொள்ள சிறிய அளவில் முன் பணம் கட்டச் சொல்வார்கள். ஏலத்தில் கலந்துகொள்வதற்காக செலுத்தப்படும் தொகை இது. ஒருவேளை ஏலத்தில் உங்களுக்கு வீடு கிடைத்துவிட்டால், வீட்டின் மதிப்பில் 25 முதல் 30 சதவீதத் தொகையை அங்கேயே கட்டிவிட்டு ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டி விட வேண்டும். காலக் கெடுவுக்குள் பணம் செலுத்தாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்தாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும்.

வீடு ஏலத்திற்கு வரும் போது வங்கி சட்ட வல்லுநர்கள் துருவி துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை ஆய்வு செய்வார்கள். பத்திரங்களில் எந்தவிதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வீடு ஏலத்திற்குக் கொண்டு வரப்படும்.

வங்கிகள் வீட்டை ஒரு நன்மை உள்ளது. வீட்டை வாங்குவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எழாது. வீட்டைப் பொது ஏலத்திற்கு வங்கியிடம் இருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். வீடு ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
- தொகுப்பு: டி. கார்த்திக்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:34 am
முதியவர்களுக்கான வீட்டுக் கடன்
புதிதாக வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கி, மாதந்தோறும் இ.எம்.ஐ. மூலம் கடனை அடைக்கும் வீட்டுக் கடன் திட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டை அடமானம் வைத்து மாதாமாதம் வங்கியிடம் இருந்து பணம் பெறும் திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

 அப்படியொரு கடன் திட்டத்தைப் பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.

‘ரிவர்ஸ் மார்ட்கேஜ்’ என்றழைக்கப்படும் இந்தக் கடன் திட்டம், 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கானது. இந்தக் கடன் திட்டத்திற்கான தகுதிகள், விதிமுறைகள் என்ன என்று பார்ப்போமா?

ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன் திட்டம் மூலம், தன் பெயரில் வீடு இருக்கும் எந்த மூத்த குடிமக்களும் கடைசிக் காலத்தில் யார் தயவையும் எதிர்பார்க்கத் தேவையில்லை. தன் வீட்டை அடமானம் வைத்து மாதந்தோறும் பணத்தை வங்கியிடம் இருந்து பெற்றுச் செலவு செய்யலாம். அது எந்தச் செலவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. மூத்த குடிமக்களுக்குப் பயன்
அளிக்கும் இந்தக் கடன் திட்டத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்ன?


# 60 வயதைக் கடந்த இந்திய மூத்த குடிமக்களாக இருக்க வேண்டும்.
# வயதான மூத்த தம்பதியினர் இணைந்தும் கடன் பெறலாம். ஆனால், தம்பதியில் ஒருவர் 60 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
# நிச்சயம் சொந்த வீடு அல்லது ஃபிளாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். வீட்டில் எந்த வில்லங்கப் பிரச்சினையும் இருக்கக் கூடாது.
# வீட்டின் ஆயுள்காலம் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
# கடன் வாங்கும் முதியவர்களின் வீடு, நிரந்தர சொந்த வீடாக இருக்க வேண்டும்.

கடன் வழங்க தகுதிகள்


# வீடு அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு, கடன் பெறுபவரின் வயது, வட்டி விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் தொகை முடிவு செய்யப்படும்.
# சொத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது.
# 60-70 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் கடன் தொகை கிடைக்கும்.
# 70-80 வயதுக்குட்பட்ட முதியவர்களுக்கு 70 சதவீதத் தொகை கிடைக்கும்.
# 80 வயதுக்கு மேல் 75 சதவீத தொகை பெறலாம்.

# தொகையை மாதந்தோறும் பெற்றுக் கொள்ள வசதி உண்டு. அல்லது காலாண்டு, அரையாண்டு, ஓராண்டு என்ற வகையிலும் தொகையைப் பெறலாம். இது கடன் பெறுபவரின் விருப்பத்தைப் பொறுத்தது.

வீட்டை மீட்கலாம்


கணவனுக்குப் பிறகு மனைவிக்கும் கடன் தொகை வழங்க இந்தத் திட்டத்தில் இடமுண்டு. அவர்கள் காலத்துக்குப் பிறகு, வீட்டை ஏலம் விட்டு அதுவரை வழங்கிய கடனை வங்கி எடுத்துக்கொள்ளும்.

பணம் மீதியிருக்கும்பட்சத்தில் வாரிசுகளுக்குக் கொடுத்துவிடும். ஒருவேளை வாரிசுகள் வீட்டை மீட்க நினைத்தால், அதற்கும் இந்தக் கடன் திட்டத்தில் வசதிகள் உள்ளன.

மேலும் விவரங்களை http://www.nhb.org.in/RML/operational_guidelines.php என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:35 am
கடனுக்கு வாங்கிய வீட்டை வாரிசுகளுக்குத் தர முடியுமா?

ஆசை ஆசையாய் வீடு கட்டுவதோ, வாங்குவதோ எதற்கு? நமக்கென சொந்தமாக ஒரு இடம் என்ற திருப்தி, நமக்குப் பிறகு வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல ஒரு சொத்து என்ற எண்ணம்தானே? பெற்றோர் கட்டிய வீடு, மனை என எந்தச் சொத்தாக இருந்தாலும் அது வாரிசுகளுக்கே என்பது நாம் அறிந்த விஷயம்தான்.
ஆனால், இந்தக் காலத்தில் வீட்டுக் கடன் வாங்கியே பலரும் வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். 20 முதல் 25 ஆண்டுகள் வரை இ.எம்.ஐ. செலுத்துகிறார்கள். அதுவரை வீட்டின் மீது கடன் இருக்கிறது. கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது வீட்டை வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடியுமா?
இப்படி ஒரு விருப்பத்தை வங்கியில் தெரிவித்தால் உடனடியாக நடைமுறை சாத்தியம் இல்லை என்றே சட்டென பதில் வரும். ஆனால், சட்டப்படி இதைச் செய்வதற்கு வழிகள் உள்ளன. வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும் போது விருப்பப்படி வாரிசுகளுக்கு எழுதித் தர முடியும் என்று கூறுகிறார்கள் வங்கியாளர்கள்.

“முதலில் இந்த விருப்பத்தை வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும். அதில் வீட்டை எழுதித் தருவதால் வங்கிக்கு எந்தப் பாதிப்பும், இழப்பும் ஏற்படாது என்று உத்தரவாதம் தர வேண்டும். வங்கியிடம் இருந்து ஆட்சேபனை இல்லா கடிதம் பெற வேண்டும். யாருக்கு வீட்டை எழுதித் தருகிறோமோ அவர் எஞ்சிய வீட்டுக் கடனுக்கான ஜாமீன்தாரர் ஆகிவிடுவார்.

மேலும் வீட்டைப் பெறுபவர் இணை கடனாளியாகவும் மாறிவிடுவார். இதைச் சட்ட நடைமுறையாக்கினாலே போதும், வீடு வாரிசுகளின் பெயரில் வந்துவிடும். இந்த நடைமுறையைப் பின்பற்ற பெரும்பாலும் வங்கிகள் முன்வருவதில்லை” என்கிறார் ஓய்வு பெற்ற மூத்த வங்கியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன்.
வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது, அந்த வீட்டை வாரிசுகளுக்கு மாற்றி எழுதித் தர வங்கிகள் மறுப்பதேன் என்ற கேள்வி இப்போது உங்களுக்குள் எழலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. முதலில் வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தரும் இந்த நடைமுறை மிகவும் நீண்டது.

சொத்தை வாரிசுகளுக்கு மாற்றுவதால், இதுவரை வீட்டுக் கடனைச் செலுத்தியவர் அதற்குப் பொறுப்பாக மாட்டார் என்ற நிலை ஏற்படுவதால் வங்கிகள் யோசிக்கும். தவிர இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வீட்டுக் கடன் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வங்கிகள் பல கோணத்தில் யோசிப்பதால் தொடக்கத்திலேயே பெரும்பாலான வங்கிகள் நிராகரித்துவிடுகின்றன. ஆனால் வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் இந்த நடைமுறை சட்ட விரோதமானதல்ல என்றும் கூறுகிறார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

நாம் இப்படி யோசித்து பார்ப்போமே. ஒருவேளை வீட்டுக் கடனை வாங்கி வீடு கட்டியவர் கடன் நிலுவையில் இருக்கும் போதே இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? எஞ்சிய பணத்தை வாரிசுகளிடம் இருந்து வசூலித்துக் கொள்வார்கள் தானே? கிட்டத்தட்ட அதே நடைமுறைதான் வீட்டை வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்வதும் அதே நடைமுறைதான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:38 am
இளைஞருக்கு ஏற்ற வீட்டுக் கடன்

இந்தக் காலத்தில் சொந்தமாக வீடு, வாசல் கட்டிய பிறகு கல்யாணம் செய்துகொள்ளும் இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். வேலையில் சேர்ந்தவுடனேயே வீடு கட்ட வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞர்களையும் இன்று நிறையப் பார்க்க முடிகிறது.

ஆனால், தொடக்க காலத்தில் குறைந்த அளவு சம்பா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:49 am
அடமான வீட்டுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?


  • வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Vee_1852030g

  • வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Untitled_1852034g



இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒரு ஃபிளாட் வாங்கினார் ரமேஷ். அவருக்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக ஃபிளாட்டை விற்றுவிட முடிவு செய்கிறார் ரமேஷ். வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த ஃபிளாட்டை வாங்கினார். வங்கிக்கு முறையாக இ.எம்.ஐ.யும் செலுத்திவருகிறார். தற்போது வீட்டை விற்க முடிவு செய்துவிட்டதால் அவரது நண்பர், அந்த ஃபிளாட்டை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இ.எம்.ஐ. கட்டியுள்ள நிலையில், அவர் இந்த வீட்டை விற்க முடியுமா? முடியும் என்றால், அதற்கான நடைமுறைகள் என்ன?

வங்கியில் அடமானம் வைத்துள்ள வீட்டையோ அல்லது ஃபிளாட்டையோ நிச்சயமாக விற்கலாம். அதை வாங்குபவருக்கும் எந்த வித சட்டப் பிரச்சினையும் இல்லை. இதற்காகச் சில வழிமுறைகள் வறையறுக்கப்பட்டுள்ளன. வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாகக் கைவசம் வைத்துள்ள பணத்தில் வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டால் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?


* வீட்டை விற்பவர் அடமானம் வைத்துள்ள வங்கியை அணுகி விஷயத்தை முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். கடன் பாக்கி, அசல் தொகை மற்றும் வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கு ஒரு கடிதத்தை வங்கியிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதவிர வங்கிக்கு முன்னதாகக் கொடுக்கப்படுள்ள அனைத்து ஆவணங்களின் பட்டியலை எழுத்துப் பூர்வமாக வங்கியில் வாங்கிக்கொள்ள வேண்டும்.


* இவை தவிர, சம்பந்தப்பட்ட வங்கிக்கு, கடன் பாக்கியைச் செலுத்திவிட்டால், அடமானம் வீட்டுத் தொடர்பான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் சம்பந்தப்பட்டவருக்குக் கொடுப்பதற்கு வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்று சம்பந்தப்பட்ட வங்கி எழுதிக் கொடுக்க வேண்டும்.


* வீட்டின் உரிமையாளர் வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்களையும் தன் வசமுள்ள விற்பனைப் பத்திரத்தின் நகலையும், அந்த வீடு தொடர்புடைய அனைத்துப் பத்திரங்களின் நகல்களையும் வீடு வாங்கப் போகும் நண்பரிடம் கொடுக்க வேண்டும்.


* வீட்டை வாங்குபவர் ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் தனது வழக்கறிஞரிடம் காட்டிய பிறகு, வீட்டின் சொந்தக்காரருக்கு முன்பணம் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையேயான ஒப்பந்தத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.


* ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் முழு தொகையையும் பெற்றுக் கொண்டு, வங்கிக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட வேண்டும். கணக்கு நிறைவுற்றதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து ஒரு அத்தாட்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


* வங்கியிடம் இருந்து வீட்டுக்குத் தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று அவற்றை வீட்டை வாங்குபவருக்குக் கொடுத்து, அவரிடம் இருந்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், ஃபிளாட்டை விற்பவர் அதை வாங்குபவருக்குக் கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துச் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


அடமான வீட்டுக்கடன்


உங்கள் கையில் சொந்தமாகப் பணம் இல்லை. வங்கியில் கடன் பெற்றுத்தான் அந்த அடமான வீட்டை வாங்க வேண்டும் என்றால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. இதன்படி மேற்கூறிய நடைமுறைகளில் முதல் மூன்று நடைமுறைகளை வீட்டை விற்பவர் செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டை வாங்குபவர் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.


* தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வங்கியின் கடிதங்களையும் வீட்டை வாங்குபவர் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், சம்பளம் அல்லது வருமானச் சான்றிதழ் மற்றும் வங்கியின் பரிசீலனைக் கட்டணம் ஆகியவற்றையும் வங்கியிடம் வழங்க வேண்டும். கடன் விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


* வங்கி உரிய பரிசீலனைக்குப் பிறகு கடன் வழங்கக் கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் வழங்கும். ஏற்ககெனவே ஒரு வங்கி தேவையான அனைத்துப் பரிசீலனைகளையும் செய்த பிறகுதான் கடன் வழங்கி உள்ளது என்பதால், தேவையற்ற தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.


* வீட்டுக் கடன் தொகையைச் சம்பந்தப்பட்ட வங்கி, வீடு அடமானம் வைக்கப்படுள்ள வங்கிக்கு நேரிடையாகக் கொடுக்கும்.


* கடனுக்கான முழுத் தொகையையும் பெற்றுக்கொண்டதால் அடமானம் வைத்திருந்த வங்கி, சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வீடு வாங்குவதற்குக் கடன் வழங்கும் வங்கிக்குக் கொடுத்துவிடும்.


* அதன் பிறகு வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி அசல், வட்டித் தொகை போக மீதத் தொகையை வீட்டை விற்பவருக்குக் கொடுத்துவிடும். இறுதியாக வீட்டை வாங்குபவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனைப் பத்திரத்தை வழக்கம்போல் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


இதுபோன்ற சூழ்நிலையில் அடமான வீட்டை வாங்குபவர் அதே வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்வது நல்லது. இதனால் இரு தரப்பினருக்கும் நேரமும் சிரமமும் கணிசமாகக் குறையும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 8:53 am
அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.


ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.


வட்டி வீதம்:


கடன் தொகையில்


முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 

50,001 முதல் 1,50,000 வரை : 7% 


1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 


5,00,000க்கு மேல் : 10%



இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.


கடன் வரம்பு:


அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.


யாரெல்லாம் கடன் பெறலாம்?:


சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.


கடனின் பல்வேறு பிரிவுகள்:


1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.


2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.


3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.


4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.


5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.


6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.


7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.


Cool தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.


9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.


10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பம்:


வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.


* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்


கடன் ஏற்பளிப்பு:


மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.


முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.


இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.


ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.


கடன் பிடித்தம்:


ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.


இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.


காப்பீடு:


வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


சிறப்பு குடும்ப நலத்திட்டம்:


வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.


1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 


2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 


3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 9:00 am
வீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்

சொந்த வீடு கனவில் இருக்கும் பலருக்கும் கை கொடுப்பது வங்கிக் கடன்தான். வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தோன்றி 110 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் வீட்டுக் கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளப் போக்கைக் கடைபிடித்து வருகின்றன.

வங்கிக் கடன் திட்டங்கள் பலவற்றில் இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம்.

எவ்வளவு காலம்?


சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 30 ஆண்டுகளிலும் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. சொல்லப்போனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தருகிறார்களே, அது எப்படி? என்று பல வாசகர்கள் கேட்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் வங்கிக்குக் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான செக்யூரிட்டிதான்.
வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதற்குக் கடன் வாங்கினால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். ஏனென்றால், மோட்டார் வாகனமோ, மற்ற வாகனங்களோ, தொழிற்சாலை தளவாடங்களோ சில ஆண்டுகளில் பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றை விற்கப்போனால் வாங்கிய விலையைவிடக் குறைந்த விலைக்குத்தான் போகும். அதே நேரத்தில் வீடு அல்லது மனையைப் பொறுத்தவரை பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் போகுமே தவிரக் குறையாது. உலக அளவிலும் இதே நிலைமைதான்.

மிக அரிதாகச் சில கால கட்டங்களில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அது விதிவிலக்கு. உலகில் உள்ள நிலப்பரப்பு அதிகரிப்பதில்லை. ஆனால், மக்கள் தொகை அதிகரிக்கிறது. வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

வங்கிகளின் எதிர்பார்ப்பு


கடனைத் திருப்பிக் கட்டுவதற்குப் போதிய அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகள் உண்டு. கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ. முடிந்துவிடுமா என்பதை வங்கிகள் முக்கியமாகப் பார்க்கின்றன. 

ஒருவேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரைகூடக் கடனை அடைக்க அவகாசம் தரப்படுகிறது.

ஆனால் கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால், அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அல்லது கோ-ஃபாலோயர் எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்திரவாதத்தை வங்கிக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.

வீட்டுச் செலவுக்கு முக்கியத்துவம்


கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலிக்கின்றன. நமது மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக, நாம் நமது சம்பளத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் கொடுக்கப்படுகிறது. காரணம், இ.எம்.ஐ. கட்டுவதால் நமது அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது, குடும்பச் செலவுக்குக் கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதுதான்.

தேவையான ஆவணங்கள்


வீட்டுக் கடன் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் எவை என்பதை வங்கிகள் தெளிவுபடுத்தியுள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

* பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்

* விண்ணப்பதாரரின் புகைப்படம்


* புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று

* முகவரிச் சான்று

* வருமானச் சான்று

* மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)

* தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)

* 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி)

* விற்பனைப் பத்திரத்தின் நகல்

* சட்ட வல்லுநரின் கருத்து (லீகல் ஒபீனியன்)

* உரிய அதிகாரியிடன் (சி.எம்.டி.ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம்) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல்.

* கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)

இவற்றை வங்கிகளில் ஒரே நேரத்தில் தாக்கல் செய்து விட்டால், வங்கியில் கடன் வாங்க ஆகும் காலத் தாமதத்தை நிச்சயமாகத் தவிர்க்கலாம். கடனை விரைவாக வாங்கி வீட்டைக் கட்டி முடிக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 9:01 am
முன்கூட்டியே கட்டப்படும் வீட்டுக் கடன்: வங்கிகள் தரும் ஆவணங்கள் என்ன?

கடன் தொகையை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாக அடைக்க முடியுமா? நிச்சயம் முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை முன் கூட்டியே வீட்டுக் கடனை அடைத்தால் 2 சதவீத அபராதக் கட்டணத்தையும் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திய இந்த அபராதத்தை ரிசர்வ் வங்கி தலையிட்டு ரத்து செய்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் பலன் அடைய ஆரம்பித்தனர். இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கிய பலர் கடனை முன்கூட்டியே அடைப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு வங்கியில் இன்னொரு வங்கியைவிட அதிக வட்டி வசூலிப்பது, அல்லது சிலருக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி முதிர்ச்சி அடைவதால் கணிசமான தொகை கிடைப்பது உள்ளிட்ட பல காரணங்களால் வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைக்க முன்வருகிறார்கள்.

இப்படிச் செய்யும்போது வங்கிகளிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வி எழக்கூடும். 
வீட்டுக்கடன் வாங்கியபோது வங்கி ஒரு ரசீதைக் கொடுக்கும். அதில் என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஒரிஜினல் மனைப் பத்திரம், தாய்ப் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ், விற்பனைப் பத்திரத்தின் நகல் உள்ளிட்டவை வங்கி ரசீதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் வங்கி திருப்பிக் கொடுத்திருக்கிறதா என்பதைக் கவனமாகச் சரிபார்த்துப் பெற வேண்டும்.

கடனை முன்கூட்டியே அடைக்கும்போது பாக்கி அசல் தொகை எவ்வளவு, வட்டித் தொகை எவ்வளவு என்பதை எழுத்துப்பூர்வமாக வங்கியிடம் இருந்து வாங்கிக்கொள்வது அவசியம். அந்தத் தொகையை டிமாண்ட் டிராப்ட் மூலம் வங்கிக்கு கொடுப்பது நல்லது. இது நமக்குப் பாதுகாப்பும்கூட.

அசல் தொகை, வட்டித் தொகையைத் தவிர வேறு எந்த விதக் கட்டணமும் வங்கிக்குச் செலுத்தத் தேவையில்லை. வீட்டுக் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்தி வந்தபோது எப்போதாவது பணமில்லாமல் காசோலை திரும்பியிருக்குமேயானால், அதற்கான அபராதக் கட்டணத்தை வங்கி விதித்திருக்கலாம்.

அதைத் தவிர வேறு சேவைக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. உங்கள் வீட்டுக் கடன் கணக்கில் எவ்வித பாக்கித் தொகையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்வது நல்லது.

வங்கி திருப்பிக் கொடுத்த ஆவணங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டு அதில் வாடிக்கையாளரும் வங்கி அதிகாரியும் கையெழுத்திட்டு அதன் படிவத்தை வைத்துக்கொள்வது இரு தரப்புக்கும் நல்லது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 9:15 am
மாதாந்தரத் தவணைத் தொகையைக் குறைக்க முடியுமா?

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொதுமேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் பதில் தருகிறார்.

கேள்வி : வீடு விற்றதன் மூலம் கிடைத்த நீண்ட கால மூலதன லாபத்தை ஊரகப் பகுதி மின்னுற்பத்திக் கழகம் (ஆர்.இ.சி.) பாண்டுகளில் முதலீடு செய்வது குறித்து விரிவாகத் தெரிவிக்க முடியுமா?
- எம். லாவண்யா, திருச்சி


பதில் : வருமான வரிச் சட்டம் 54 இ.சி. பிரிவுபடி உங்கள் நீண்ட கால மூலதன லாபத்தை தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) அல்லது ஊரகப் பகுதி மின்னுற்பத்திக் கழகம் (ஆ.இ.சி.) ஆகிய முதலீடுத் திட்டங்களில் 6 மாதங்களுக்குள் முதலீடு செய்தீர்களேயானால், மூலதன லாப வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால், அவை 3 ஆண்டுகளுக்கான முதலீடாகக் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒருவர், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையிலான மூலதன லாபத்தை முதலீடு செய்யலாம். ஆர்.இ.சி. மற்றும் என்.எச்.ஏ.ஐ. பாண்டுகளில் முதலீடு செய்வதற்கு நீங்கள் உங்கள் ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால், இதற்கான ஏற்படுகளை அந்த வங்கி செய்துக் கொடுக்கும்.

கேள்வி : நான் தற்போது எனது வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.களை கட்டிக் கொண்டு வருகிறேன். என்னிடம் தற்போது ரூ.2 லட்சம் பணம் உள்ளது. இதை வங்கியில் வீட்டுக் கடன் கணக்கில் செலுத்தினால் எனது மாதாந்திரத் தவணைத் தொகையை குறைப்பார்களா? அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவைக் குறைப்பர்களா?
- எஸ். ராமன், மின்னஞ்சல் மூலமாக


பதில் : நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணைகளின் எண்ணிக்கையைத்தான் குறைப்பார்கள். மாதாந்தரத் தவணைத் தொகையை வங்கிகள் குறைப்பதில்லை. சமன்படுத்தப்பட்ட தவணைத் தொகை (இ.எம்.ஐ.) ஏற்கனவே உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுவிடுவதால், மாதத் தவணைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிமுறை பின்பற்றப்படுகிறது.

கேள்வி : எனக்கு ஏற்கெனவே 2 சொந்த வீடுகள் இருக்கின்றன. மூன்றாவதாக வீடு வாங்கு வதற்கு வங்கிகள் வீட்டுக் கடன் அளிக்குமா?
- வி.ராஜேஷ், சென்னை


பதில் : ஒருவர் வாழ்க்கையில் வீடு என்பது அவசிய அடிப்படைத் தேவை. எனவேதான் வீடு கட்டவும் வாங்கவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. எனவே முதல் வீடு கட்ட வங்கிகள் கடன் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இரண்டாவது வீடு கட்டவும் வங்கிகள் கடன் அளிக்கின்றன. அதாவது தனக்காக ஒரு வீடும், வாரிசுகளுக் காக இன்னொரு வீட்டையும் ஒரு குடும்பத்தில் கட்டுவது இயற்கைதானே. எனவே அந்த வகையில் இரண்டாவது வீடு கட்டவும் கடன் கொடுப்பதில் பிரச்சினையில்லை.

ஆனால், மூன்றாவது வீடு வாங்குவதற்கு வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் தருவதில்லை. லாப நோக்கோடு வீடு கட்டக் கடன் கேட்பதாக வங்கிகள் நினைக்கும். அப்படியே நீங்கள் 3வது வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தாலும், அது வணிகக் கடனாகவே கருதப்படும். இதனால் வட்டி விகிதம் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கும். வீட்டுக் கடனுக்கு அளிப்பது போல தவணைகளும் நீண்ட காலத்துக்கு அளிக்க மாட்டார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Mon Sep 29, 2014 9:17 am
சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன்!

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கிறார்களா? அந்த நாட்டில் நீண்டகால அடிப்படையில் பணி புரிகிறார்களா? அவர்கள் இந்தியாவில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு விரும்புகிறார்களா? இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு வீட்டுக் கடன் வசதி வழங்க வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (national Housing Bank) அங்கீகரிக்கப்பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் காத்திருக்கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி இதற்குப் பொது அனுமதி வழங்கியுள்ளது.

ஒரே மாதிரியான விதிமுறைகள்


வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மை யான விதிமுறைகள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் (என்.ஆர்.ஐ) உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் நிபந்தனை.
உதாரணமாக மார்ஜின் தொகை என்பது (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை), எவ்வளவு காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம் என்பது (சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவ்வப்போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்துக்குத் தகுந்தபடி கடனுக்கான வட்டி விகிதம் அமையும். என்.ஆர்.ஐ.கள் இந்தியாவுக்கு விடுப்பில் வரும் போது வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்


என்.ஆர்.ஐ.கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு(என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்கள் தேவை. இவை தவிர உள் நாட்டு வாடிக்கையாளர்கள் போலவே, என்.ஆர்.ஐ.களும் கீழ்க்கண்ட ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

#மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம்)
#தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம்)
#13 ஆண்டு காலத்துக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி.)
#சட்ட வல்லுநரின் அறிக்கை (லீகல் ஒபினியன்)
#விலை மதிப்பீடு அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)
# உரிய அதிகாரிகளால் (சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அதிகாரிகள்) வழங்கப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல் மற்றும் கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு அறிக்கை ஆகிய வழக்கமான ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடனை அடைப்பது எப்படி?


இந்தக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கு, வெளிநாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாக வர வேண்டும். அல்லது கடன் பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கிலிருந்து செலுத்த வேண்டும். இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப்பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயானால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன்படுத்தலாம்.

வீடு கட்டுவதற்கும் வீடு வாங்குவதற்கும் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும் என என்.ஆர்.ஐ.கள் கருத வேண்டாம். அவர்களுக்குத் தேவையானால் ஏற்கெனவே இருக்கும் தங்களுக்குச் சொந்தமான வீடுகளைப் பழுது பார்ப்பதற்கும், புதுப்பிப்பதற்கும், விரிவுப்படுத்துவதற்கும்கூட வங்கிகளிடம் இருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களிடம் இருந்தும் கடனுதவி பெற்றுப் பயனடையலாம்.

நன்றி: இந்து
Sponsored content

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை? Empty Re: வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum