நத்தம் இடம்... வீட்டுக் கடன் கிடைக்குமா?
Thu Oct 23, 2014 9:16 am
நத்தம் இடம்... வீட்டுக் கடன் கிடைக்குமா?
?ஆறு மாதத்துக்கு முன்பு சுமார் 2,200 சதுர அடியில் காலி மனை வாங்கி, என் பெயரில் பதிவு செய்தேன். ஆனால், பத்திரத்தில் நத்தம் சர்வே எண் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நத்தம் இடத்தில் வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்குமா?
“பல வருடங்களுக்குமுன் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் தந்தது. இப்படி கொடுத்த நிலத்தை நத்தம் நிலம் என்பார்கள். அதற்கு அந்தக் காலத்தில் பட்டா கிடையாது. ஆனால், அது வீடு கட்டுவதற்கு உகந்த நிலம். அதை வாங்கலாம் அல்லது விற்கலாம். இப்போது நத்தம் நிலத்துக்கு சில பகுதிகளில் பட்டா அளிக்கின்றனர். இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றால் வங்கியில் வீடு கட்ட கடன் கட்டாயம் கிடைக்கும்.”
[/size][size]
?என் மகள்களின் எதிர்காலத்துக்காக ஒரேமுறை முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். (முதல் மகள் வயது 14, இரண்டாவது மகள் வயது 5) ஒவ்வொரு மகளின் திருமணத்துக்கும் 10 லட்சம் ரூபாய் தேவை. இந்தப் பணம் இன்னும் 7, 8 வருடங்கள் கழித்துதான் தேவை. எனக்கேற்ற முதலீட்டு திட்டங்களைக் கூறவும்.
[/size]
“உங்களின் முதல் மகளின் திருமணத்துக்கு ரூ.10 லட்சம் தேவை. இந்தத் தொகையை பெறுவதற்கு 10% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரேமுறை முதலீடாக ரூ.4.6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அல்லது எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.6,840 என அடுத்த எட்டு வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்த மகளின் திருமணத் தேவைக்கும் ரூ.10 லட்சம் தேவை. இதற்கு இன்னும் 17 ஆண்டுகள் உள்ளது. எனவே, 10% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரேமுறையாக ரூ.1.98 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபி முறை எனில் மாதம் ரூ.1,900 என அடுத்த 17 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும்.”
[/size][size]
?என்னிடம் ரூ.10 ஆயிரம் உள்ளது. அதை என் பேரனுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறேன். இந்தப் பணம் 10, 12 வருடத்துக்குப்பின் தேவை. எந்த வகை யான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
[/size]
“கையில் வைத்திருக்கும் பணத்தை செலவழிக்காமல் பேரனின் எதிர்காலத்துக்காக சேமிக்க நினைக்கும் உங்களின் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்ட் இது. இந்த முதலீட்டின் மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு கிஃப்ட் டாக்ஸ் கிடையாது.”
?தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத் தில் வீடு வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்தி இருந்தேன். வீடு வாங்குவதற்கு எனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டால், அந்த நிறுவனம் தர மறுக்கிறது. இந்தப் பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?
[/size]
“அட்வான்ஸாக கொடுத்த பணம் திரும்ப பெறுவது அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கட்டியதற்கு தரப்பட்டிருக்கும் ரசீதில் அட்வான்ஸ் தொகை திரும்பத் தருவது குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும். மேலும், கடன் கிடைக்காததற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, வீடு கட்டும் இடத்துக்கான அனுமதி, பத்திரப்பதிவு ஆகியவற்றில் ஏதாவது சிக்கல் உள்ளதா அல்லது உங்களின் கடன் மற்றும் வருமானத்தில் உள்ள பிரச்னையினால் கடன் கிடைக்கவில்லையா என்பதையும் பார்க்கவும். பில்டரின் மீது உள்ள தவறினால் கடன் கிடைக்கவில்லை எனில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். உங்களின் வழக்கறிஞர் மூலமாக பில்டருக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.”
[/size][size]
?எனக்கு 34 வயதாகிறது. வருடத்துக்கு ரூ.3.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். ரூ.50 லட்சம் கவரேஜுக்கு, 35 வருட காலத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க திட்டமிட்டுள்ளேன். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்கலாம்?
[/size]
“கோட்டக் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். இந்த நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்குத்தான் பாலிசி எடுக்க முடியும். பிரீமியம் முறையே சுமார் ரூ.10,899 மற்றும் ரூ.9,775. இந்த டேர்ம் பாலிசியில் பாலிசி எடுத்தவர் உயிரிழந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும்.”
[/size][size]
?எனக்கு 29 வயதாகிறது. நான் இதுவரை எந்தவிதமான முதலீடும் செய்யவில்லை. மாதத்துக்கு ரூ.20,000 வரை முதலீடு செய்ய விரும்புகிறேன். 10 வருடங்கள் கழித்து வீடு கட்டுவதற்கு ரூ.50 லட்சம் பணம் தேவை. இதற்கு இந்த முதலீடு போதுமா?
[/size]
“நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் மூலமாக வருடத்துக்கு 15% வருமானம் கிடைத்தால்கூட, அடுத்த பத்து வருடங்களில் சுமார் ரூ.52.60 லட்சம் கிடைக்கும். இது உங்களின் தேவைக்குச் சரியாக இருக்கும். நல்ல தரமான டைவர்ஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், இந்த இலக்கை எளிதாக அடையலாம்.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
கேள்வி - பதில்
?ஆறு மாதத்துக்கு முன்பு சுமார் 2,200 சதுர அடியில் காலி மனை வாங்கி, என் பெயரில் பதிவு செய்தேன். ஆனால், பத்திரத்தில் நத்தம் சர்வே எண் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நத்தம் இடத்தில் வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்குமா?
இளஞ்சேரன், நாமக்கல். பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்.
[size]“பல வருடங்களுக்குமுன் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் தந்தது. இப்படி கொடுத்த நிலத்தை நத்தம் நிலம் என்பார்கள். அதற்கு அந்தக் காலத்தில் பட்டா கிடையாது. ஆனால், அது வீடு கட்டுவதற்கு உகந்த நிலம். அதை வாங்கலாம் அல்லது விற்கலாம். இப்போது நத்தம் நிலத்துக்கு சில பகுதிகளில் பட்டா அளிக்கின்றனர். இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றால் வங்கியில் வீடு கட்ட கடன் கட்டாயம் கிடைக்கும்.”
[/size][size]
?என் மகள்களின் எதிர்காலத்துக்காக ஒரேமுறை முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். (முதல் மகள் வயது 14, இரண்டாவது மகள் வயது 5) ஒவ்வொரு மகளின் திருமணத்துக்கும் 10 லட்சம் ரூபாய் தேவை. இந்தப் பணம் இன்னும் 7, 8 வருடங்கள் கழித்துதான் தேவை. எனக்கேற்ற முதலீட்டு திட்டங்களைக் கூறவும்.
[/size]
சீனிவாசன்,சென்னை. சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்.
[size]“உங்களின் முதல் மகளின் திருமணத்துக்கு ரூ.10 லட்சம் தேவை. இந்தத் தொகையை பெறுவதற்கு 10% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரேமுறை முதலீடாக ரூ.4.6 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அல்லது எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.6,840 என அடுத்த எட்டு வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
அடுத்த மகளின் திருமணத் தேவைக்கும் ரூ.10 லட்சம் தேவை. இதற்கு இன்னும் 17 ஆண்டுகள் உள்ளது. எனவே, 10% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரேமுறையாக ரூ.1.98 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். எஸ்ஐபி முறை எனில் மாதம் ரூ.1,900 என அடுத்த 17 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும்.”
[/size][size]
?என்னிடம் ரூ.10 ஆயிரம் உள்ளது. அதை என் பேரனுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளேன். இந்தப் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறேன். இந்தப் பணம் 10, 12 வருடத்துக்குப்பின் தேவை. எந்த வகை யான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்?
[/size]
- பி.கே.பிச்சை மணி, போரூர். ரவிக்குமார், நிதி ஆலோசகர்.
[size]“கையில் வைத்திருக்கும் பணத்தை செலவழிக்காமல் பேரனின் எதிர்காலத்துக்காக சேமிக்க நினைக்கும் உங்களின் எண்ணம் வரவேற்கத்தக்கது. ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். நீண்ட காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்ட் இது. இந்த முதலீட்டின் மூலமாக கிடைக்கும் வருமானத்துக்கு கிஃப்ட் டாக்ஸ் கிடையாது.”
?தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத் தில் வீடு வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் முன்பணம் செலுத்தி இருந்தேன். வீடு வாங்குவதற்கு எனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டால், அந்த நிறுவனம் தர மறுக்கிறது. இந்தப் பணத்தைப் பெற என்ன செய்ய வேண்டும்?
[/size]
- மைதிலி, சென்னை. எஸ்.சி.ரகுராம், வழக்கறிஞர்.
[size]“அட்வான்ஸாக கொடுத்த பணம் திரும்ப பெறுவது அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கட்டியதற்கு தரப்பட்டிருக்கும் ரசீதில் அட்வான்ஸ் தொகை திரும்பத் தருவது குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும். மேலும், கடன் கிடைக்காததற்கான காரணம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, வீடு கட்டும் இடத்துக்கான அனுமதி, பத்திரப்பதிவு ஆகியவற்றில் ஏதாவது சிக்கல் உள்ளதா அல்லது உங்களின் கடன் மற்றும் வருமானத்தில் உள்ள பிரச்னையினால் கடன் கிடைக்கவில்லையா என்பதையும் பார்க்கவும். பில்டரின் மீது உள்ள தவறினால் கடன் கிடைக்கவில்லை எனில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். உங்களின் வழக்கறிஞர் மூலமாக பில்டருக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.”
[/size][size]
?எனக்கு 34 வயதாகிறது. வருடத்துக்கு ரூ.3.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். ரூ.50 லட்சம் கவரேஜுக்கு, 35 வருட காலத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க திட்டமிட்டுள்ளேன். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்கலாம்?
[/size]
ஜெகதீஷ், தரன், மூத்த இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.
[size]“கோட்டக் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் அவிவா லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங் களில் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம். இந்த நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்குத்தான் பாலிசி எடுக்க முடியும். பிரீமியம் முறையே சுமார் ரூ.10,899 மற்றும் ரூ.9,775. இந்த டேர்ம் பாலிசியில் பாலிசி எடுத்தவர் உயிரிழந்தால் மட்டுமே க்ளைம் கிடைக்கும்.”
[/size][size]
?எனக்கு 29 வயதாகிறது. நான் இதுவரை எந்தவிதமான முதலீடும் செய்யவில்லை. மாதத்துக்கு ரூ.20,000 வரை முதலீடு செய்ய விரும்புகிறேன். 10 வருடங்கள் கழித்து வீடு கட்டுவதற்கு ரூ.50 லட்சம் பணம் தேவை. இதற்கு இந்த முதலீடு போதுமா?
[/size]
முகமது, யூ.என்.சுபாஷ், நிதி ஆலோசகர்.
[size]“நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் மூலமாக வருடத்துக்கு 15% வருமானம் கிடைத்தால்கூட, அடுத்த பத்து வருடங்களில் சுமார் ரூ.52.60 லட்சம் கிடைக்கும். இது உங்களின் தேவைக்குச் சரியாக இருக்கும். நல்ல தரமான டைவர்ஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், இந்த இலக்கை எளிதாக அடையலாம்.”
நன்றி: நாணயம் விகடன்[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum