"கோகோ ப்ரான் கோஸ் ஃப்ரை"
Thu Jul 09, 2015 3:09 pm
தேவையான பொருட்கள் :
----------------------------------------------------------
இறால், சோளமாவு, மைதா மாவு, அரிசி மாவு, தேங்காய் பவுடர், உப்பு, மிளகு பொடி, எண்ணெய், வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, முட்டைகோஸ், எலுமிச்சை சாறு, உருளைகிழங்கு (பாதி வேகவைத்தது)
செய்முறை :
1. இஞ்சி, பூண்டு, குடைமிளகாய், முட்டைகோஸ், பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், மிளகு பொடி, உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
இப்போது சுத்தம் செய்த இறாலை இந்த கலவையில் போட்டு, அதனுடன் சோளமாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, மைதாமாவு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இதனோடு பாதி வேகவைத்த உருளைகிழங்குயும் சேர்க்கலாம்.
3. தேங்காய் பவுடரை ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு இதில் ஒவ்வொரு இறாலையும் துவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வானலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கறிவேப்பிலை, குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். இதில் சிறிதளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
5. மற்றொரு வானலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இறாலையும், உருளைக்கிழங்கையும் பொறித்து எடுக்கவும்.
6. இறுதியாக பொறித்த இறால், உருளைக்கிழங்கை காய்கறி கலவையில் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
இப்பொழுது சுவையான "கோகோ ப்ரான் கோஸ் ஃப்ரை" ரெ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum