'கும்'முனு தூக்குது... கோங்கூரா ஃப்ரை!
Tue Jun 30, 2015 10:32 am
வாசகிகள் கைமணம்படங்கள்: பா.கார்த்திக்
தேவையானவை:
ஜவ்வரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்), அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப், நறுக்கிய வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு, தேங்காய் துருவல், நெய் - தலா கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
- மாலதி நாராயணன், பெங்களூரு
தேவையானவை:
பேபிகார்ன் - 5, நறுக்கிய கோங்கூரா (புளிச்ச கீரை) - ஒரு கப், பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், ரொட்டித்தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகை வறுக்கவும். பிறகு, பூண்டு, கோங்கூரா கீரையை வதக்கவும். வறுத்ததையும், வதக்கியதையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்க்கவும். பேபிகார்னை நீளவாக்கில் நறுக்கி, அரைத்து வைத்துள்ள கோங்கூரா விழுதை தடவி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பேபிகார்னை ரொட்டி தூளில் புரட்டி, பொன்னிறமாக பொரிக்கவும்.
- விஜயலட்சுமி, பெங்களூரு
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
ஜவ்வரிசி அடை: சிறிதளவு வேர்க்கடலையை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.
பேபிகார்ன் - கோங்கூரா ஃப்ரை: கோங்கூரா இல்லையென்றால், அதற்குப் பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லியை அரைத்து சேர்த்தும் செய்யலாம்.
ஜவ்வரிசி அடை

இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.
- மாலதி நாராயணன், பெங்களூரு
பேபிகார்ன் - கோங்கூரா ஃப்ரை
தேவையானவை:
பேபிகார்ன் - 5, நறுக்கிய கோங்கூரா (புளிச்ச கீரை) - ஒரு கப், பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 2, மிளகு - ஒரு டீஸ்பூன், ரொட்டித்தூள் - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகை வறுக்கவும். பிறகு, பூண்டு, கோங்கூரா கீரையை வதக்கவும். வறுத்ததையும், வதக்கியதையும் சேர்த்து விழுதாக அரைத்து, உப்பு சேர்க்கவும். பேபிகார்னை நீளவாக்கில் நறுக்கி, அரைத்து வைத்துள்ள கோங்கூரா விழுதை தடவி சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பேபிகார்னை ரொட்டி தூளில் புரட்டி, பொன்னிறமாக பொரிக்கவும்.
- விஜயலட்சுமி, பெங்களூரு
வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...
ஜவ்வரிசி அடை: சிறிதளவு வேர்க்கடலையை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை அதிகரிக்கும்.
பேபிகார்ன் - கோங்கூரா ஃப்ரை: கோங்கூரா இல்லையென்றால், அதற்குப் பதிலாக புதினா மற்றும் கொத்தமல்லியை அரைத்து சேர்த்தும் செய்யலாம்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum