குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தண்டனைகள் என்னென்ன?
Sat Jul 04, 2015 10:40 pm
இந்தியாவில் 18 வயதிற்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம் 2012ல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படுகிறது..
உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் (Penetrative sexual assault):
ஒருவர் தன்னுடைய பிறப்புறுப்பையோ அல்லது வேறெந்த உறுப்புகளையோ (விரல் மற்றும் பொருள்களை) உட்செலுத்துவதையோ, உடலுறவு கொள்வதோ ‘உட்செலுத்தும் பாலியல் தாக்குதல்’ எனப்படும். இதற்கு 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை அல்லது அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
கடுமையான உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் (Aggravated penetrative sexual assault):
சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் காவல் துறை, ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், சிறைச்சாலை ஊழியர்கள், அரசு/தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், குழந்தைகளிடம் பிறப்புறுப்பை உட்செலுத்தி பாலியல் தாக்குதலுக்குண்டான செயல்கள் மற்றும் பல்வேறு இதர செயல்பாடுகளை செய்தால் அது ‘கடுமையான உட்செலுத்தும் பாலியல் தாக்குதல்’ என கருதப்படும். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படும். இவர்களே குழந்தைகள் மீது பிறப்புறுப்புக்களை உட்செலுத்தாமல் சில்மிஷம் தொடர்பான காரியங்களில் ஈடுப்பட்டால் அதுவும் 'கடுமையான பாலியல் தாக்குதல்' என கருதப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பாலியல் தாக்குதல் (Sexual Assault):
பாலியல் உள்நோக்கத்துடன் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, குழந்தைகளை தொடச்செய்வது, பார்க்கச் செய்வது போன்றவை 'பாலியல் தாக்குதல்' ஆகும். இதற்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் உண்டு.
பாலியல் தொந்தரவு (Sexual Harassment):
பாலியல் உள்நோக்கத்துடன் குழந்தைகளிடம் பேசுவது, படம் காட்டுவது, ஜாடைக்காட்டுவது, ஒலி எழுப்புவது, ஆபாச படம் எடுக்க முயல்வது ஆகியவை 'பாலியல் தொந்தரவு' ஆகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை. அதுபோல் ஆபாச படம் எடுப்பதில் குழந்தைகளை ஈடுபடுத்துவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு உடந்தை/தூண்டுதலாக (Abetment) இருந்தால், செய்யப்பட்ட குற்றத்திற்கு என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும். ஒரு நிறுவனத்தின் பணியாளர் மேற்கூறிய குற்றங்கள் செய்து அதை அந்நிறுவனத்தின் அதிகாரி தெரிவிக்காதிருத்தால் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தையை குறித்த தகவல் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டால் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபாரதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இவை தொடர்பான புகார்களை காவல் நிலையங்கள், சிறப்பு சிறார் காவல் மையம், பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகியவற்றில் புகார் செய்யலாம். குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் மாவட்டம் தோறும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டு விரைவாக விசாரிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum