தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989
Thu Aug 08, 2013 9:30 pm
இந்தியா மற்றும் தமிழகம் எங்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீதான தொடர் சாதி வெறித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் எதிர் போராட்டத் தால், அரசு இச்சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் இச்சட்டத்தை இன்று வரை காவல் துறை யினர் முறையாக அமல்படுத்த மறுக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என பட்டியலிடப்பட்ட சாதியினர் அல்லாத சாதியைச் சேர்ந்த எவரும் பிரிவு 3ல் சொல்லப்பட்ட பிரிவு 3(1) இல்
அ. உண்ணத்தக்கதல்லாத அருவருப்பான பொருள் எதனையும் குடிக்குமாறு (அ) உண்ணுமாறு பலவந்தப்படுத்தப்படுத்துவராயின்
ஆ. உடல்ஊறு, அவமதிப்பு (அ) தொல்லை விளைவிக்கும் கருத்துடன் வாழ்வியல் (அ) அருகாமையில் மலம், கழிவுப் பொருள், விலங்கின் சிதைவுகள் போன்ற அருவருப்பான பொருள் எதையும் கொட்டி வைப்பராயின்,
இ. உடம்பில் உள்ள ஆடைகளை அகற்றுவராயின் (அ) வெற்றிடம்புடனோ (அ) சாயத்தால் உடம்பில் அலங்கோலப் படுத்தப்படுவராயின் (அ) இவை போன்ற மனித மாண்பினை இழிவுபடுத்தும் செயல் செய்வராயின்,
ஈ. அவருக்குச் சொந்தமான இடம் (அ) ஒதுக்கப்பட்ட நிலத்தை சட்ட முரணாகக் கைப்பற்றுவராயின் (அ) பயிரிடுவராயின் (அ) நிலத்தை மாற்றம் செய்வாராயின்,
உ. அவருடைய உடமையை சட்ட முரணாகப் பறிப்பாராயின் (அ) நீர் உரிமையை அவர் பயன்படுத்துவதைத் தடுப்பாராயின்.
ஊ. “போகர்” முறையிலோ, பலவந்தமாக வேலை சுமத்தியோ (அ) கொத்தடிமை போன்ற பிற முறைகளில் செயல்பட கட்டாயப்படுத்துவராயின்,
எ. குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்குமாரோ (அ) வாக்களிக்கக் கூடாது என்றோ பலவந்தப்படுத்துவாராயின் (அ) மிரட்டுவாராயின்
ஏ. தீய நோக்குடன் பொய்யாக உரிமையியல் (அ) குற்றவியல் (சு/பி) சட்டமுறை நடவடிக்கைகளை தொடுப்பராயின்
ஐ. பொது ஊழியரிடம் பொய்த்தகவல் கொடுத்து அதன் மூலம் தொல்லை கொடுக்கும் வகையில் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவராயின்
ஒ. பொது இடத்தில் தாழ்வுபடுத்தும் கருத்துடன் அவமானப்படுத்துவராயின் (அ) அச்சுறுத்துவாராயின்
xi) பெண் ஒருவருக்கு மானக்கேடு (அ) நாணயக்குறைவு ஏற்படும் கருத்துடன் தாக்க முனைவராயின் (அ) தாக்குவாராயின்
xii) தம் ஆதிக்கத்தால் பெண் ஒருவருக்கு பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவாராயின்
xiii) நீர் நிலை மற்றும் நீர் ஆதாரம் எதனையும் பயன்படுத்தும் நோக்கத்திற்கு ஏற்றதல்லாத வகையில் கெடுப்பராயின் (அ) மாசுபடுத்துவராயின்
xiv) பொதுப்பயன்பாட்டுப் பாதையை பயன்படுத்துவதையோ (அ) சென்று வருவதைத் தடுப்பராயின்
xv) ஒருவரின் வீட்டையோ, ஊரையோ பிற இடத்தையோ விட்டு அகலுமாறு பலவந்தப்படுத்துவராயின் (அ) செயல்படுத்துவராயின் அவர் 6 மாதத்திற்குக் குறைந்தது 5 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்.
3(2) i) ஒருவரை மரண தண்டனை குற்றத்திற்கு உள்ளாக்கும் கருத்துடன் தெரிந்தே பொய்யாக சான்று அளிப்பவராயின் அல்லது பொய்ச்சான்று புனைவராயின் அவர் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார். பொய்ச் சான்றின் மூலம் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் பொய்சான்று அளித்தவர் மரண தண்டனை விதித்து தண்டிக்கப் படுவார்.
ii) மரண தண்டனை அல்லாத தண்டனை விதிக்கக் கூடிய குற்றத்திற்காக பொய் சான்று அளித்தால் (அ) புனைந்தால் 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்.
iii) சொத்துக்குச் சேதம் விளைவிக்கும் கருத்துடன் செயல்பட்டிருந்தாராயின் 6 மாத்திற்குக் குறையாமல் 1 ஆண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்.
iv) வாழுமிடத்திலோ, வழிபாட்டுக் கட்டிடத்திலோ தீயினாலோ வெடிப் பொருளாளோ அழிவு ஏற்படுத்தும் கருத்துடன் சொத்தழிப்புச் செய்வராயின் அவர் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவர்.
v) சொத்து இன்னா என்ற காரணத்திற்காகவே அச்சொத்தில் தீங்கிழைக்கப்பட்டு 10 ஆண்டு தண்டனை விதிக்கத்தக்க குற்றம் புரிந்தாராயின் அவர் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்.
vi) மேற்ச்சொன்ன அதிகாரத்தில் குற்றம் இழைத்தவரை காக்கும் கருத்துடன் தகவலை மறைத்தோ பொய்யானது எனத் தெரிந்தோ கொடுப்பராயின் அவர் அக்குற்றச் செயலுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையைப் பெறுவர்.
பிரிவு 4 பொது ஊழியர் இச்சட்டத்தில் கூறப்பட்ட கடமைகளை வேண்டுமென்றே புறக்கணிப்பாராயின் 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை நீடிக்கலாகும் கால அளவிற்கு தண்டிக்கப்படுவார்.
பிரிவு 5 – முன்னரே குற்றச் செயலுக்காக தண்டிக்கப்பட்ட நபர் பின்னர் அதே குற்றச் செயலை செய்வராயின் ஓராண்டிற்குக் குறையாமல் குற்றச் செயலுக்கான தண்டனையின் அளவிற்கு நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படுவார்.
பிரிவு 6 – இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 34, அதிகாரம் 3 முதல் 5 அ, பிரிவு 149 அதிகாரம் 23 ஆகியவை இச்சட்டத்திற்குப் பொருந்தும்.
பிரிவு 7 – குற்றம் இழைத்தவர் தண்டனை பெறுவதுடன் குற்றச் செயல் செய்ய பயன்பட்ட அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்.
பிரிவு – 8 குற்றச் செயல் செய்வதற்கு பண உதவி அளித்தார் என மெய்ப்பிக்கப்படுமிடத்து மாறாக மெய்ப்பிக்கப்பட்டாலன்றி அவர் குற்ற உடந்தை என நீதிமன்றம் அனுமானம் கொள்ளு தல் வேண்டும்.
பிரிவு 9 – அதிகாரம் வழங்குதலைப் பற்றிக் கூறுகிறது.
பிரிவு 10 – மேற்சொன்ன வன்கொடுமைக் குற்றச் செயல்களை இழைக்கக் கூடும் என நீதிமன்றம் கருதுமிடத்து 2 ஆண்டுக்கு மேற்படாத காலத்திற்கு அவ்வரைவிடத்தை விட்டு தாமாக வெளியேற வேண்டும் எனவும் திரும்பிவரக் கூடாது எனவும் பணிக்கலாம்.
பிரிவு 11 – அந்த வரைவிடத்தை விட்டு ஒருவர் வெளியேறத் தவறும்போதும் (அ) வெளியேறிய பின்பு குறிப்பிட்ட கால அளவிற்கு முன்பாகவே அனுமதி இன்றி நுழைவாராயின் அவரைக் கைது செய்து வெளியிடத்தில் காவலில் வைக்கலாம்.
பிரிவு 12 – ஆணை பிறப்பிக்கப்பட்டவரின் உடல் அளவுகள், நிழற்படங்கள் நீதிமன்ற உத்தரவின்படி காவல் துறையினர் எடுக்க அந்த நபர் அனுமதிக்க வேண்டும். மறுப்பாராயின் இ.த.பிரிவு 186 இன் கீழ் தண்டனையாகக் கொள்ளப்படும். பிரிவு 10ல் சொன்ன ஆணையை மீறினால் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுவார்.
பிரிவு 18 – இச்சட்டத்தின் கீழ் குற்றச் செயல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கு.ந.சட்டம் பிரிவு 438இன்கீழ் முன்பிணை பெற இயலாது.
பிரிவு 19 – குற்றத்தைச் செய்த நபர் 18 வயதுக்கு மேற்பட்டவர் எனில் அவர் கு.ந.சட்டம் பிரிவு 360ன் கீழ் குற்றவாளிகள் நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்படமாட்டார்கள்.
நன்றி: கீற்று
Permissions in this forum:
You cannot reply to topics in this forum