மனை வாங்குகிறவர்களுக்கு 30 டிப்ஸ்கள்
Thu Jul 02, 2015 2:21 am
மனை வாங்குகிறீர்களா??
மறக்காதீர்கள் இந்த முப்பது விஷயங்களை.......
1. சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலைக்கு ஒரு மனை விற்பனைக்கு வருகிறது எனில், வெகு நிச்சயம் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று பொருள்.
2. முன் பணம் கொடுங்கள் என தொடர்ந்து மனை விற்பனையாளர் நச்சரிக்கிறார் என்றால் நாம் உக்ஷாராக இருக்க வேண்டும்.
3. முன்பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயச் சூழ்நிலையில், நிலத்தின் மதிப்பைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.5000, ரூ.10000க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
4. நிலத்தின் உரிமையாளர் யார்? என்பதை நன்கு தீர விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
5. எடுத்த எடுப்பிலேயே ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதாவது, மனைகளை சுற்றிப்பார்ப்பது ஒரு முறை, முன்பணம் கொடுப்பது ஒரு முறை, ஆவணங்களை சரிபார்ப்பது ஒரு முறை என காலம் தாழ்த்தாதீர்கள்.
6. அவர் மனைக்குச் சொந்தக்காரரோ, தரகரோ, அவரது தனிப்பட்ட குணநலன்களையும், நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
7. கூடுமானவரை அரசியல் கட்சி சார்ந்தவர்களிடமிருந்தும், அடியாட்கள் பலம் மிக்கவர்களிடமிருந்தும், நில பரிவர்த்தனையை
மேற்கொள்ளாதீர்கள். பிறகு, நம்மால் மல்லுக்கு நிற்க முடியாது.
8. குறிப்பிட்ட அந்த மனையை நீங்கள்தான் வாங்கப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகவாவது
மனைக்கு சுற்றுப்புறுத்தில் உள்ளவர்களுக்குத் தெரிவியுங்கள். அப்போதுதான் அந்த மனையைப் பற்றியும், மனையின் உரிமையாளர் பற்றியும் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருப்பின், நமக்குத் தெரிய வரும்.
9. மனைக்கு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வேளை அவர்களுக்கும் அந்த
மனையின் மீது ஏதேனும் உரிமை கோரல் இருக்கலாம் அல்லது அவர்களது அனுமதி இல்லாமலேயே இந்த மனை உங்களுக்கு விற்கப்படலாம்.
10. நம்முடைய நேரமின்மை காரணமாகவோ, குறைந்த விலையில் நிலம் கிடைக்கிறதே என்கிற ஆசையின் காரணமாகவோ, சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதற்காகவோ, நாம் நம்முடைய பணத்தை இழந்துவிடக்கூடாது.
11. நில உரிமையாளர் யார்? பவர் யாரிடம் இருக்கிறது? நிலத்தின் கார்டியன் யார்? என்பதை முழுவதும் அறிந்து கொண்ட பிறகே மனை விற்பனை பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்.
12. நிலத்திற்கு தேவையான தாய்ப்பத்திரம், பட்டா, சிட்டா, நடப்பு ஆண்டில் அரசுக்கு செலுத்திய வரி விபரம் மற்றும் கிரையப்பத்திரம் போன்றவைகளை சரி பார்க்க வேண்டும்.
13. நிலம் உள்ள ஊரைச் சார்ந்த ரெவின்யூ அலுவலகத்தில் நாம் வாங்கும் நிலத்தின் டாக்குமெண்ட் அனைத்தையும் காண்பித்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
14. கூடுமானவரை தனி நபரிடம், முன்பின் தெரியாத தரகரிடம் அனாதரவின்றி கிடக்கும் மனைகளை வாங்குவதைத் தவிர்ப்பது
நல்லது.
15. தனித் துண்டு நிலமாக அல்லாமல், நகர் போன்ற அமைப்பில் மனை வாங்குவது சிறந்தது. நில ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் போன்ற குற்றங்கள் பெரும்பாலும் நகர்ப்பிரிவு வீட்டுமனைகளில் நிகழ வாய்ப்பிருக்காது.
16. ஒரு மனை வாங்குவதற்கு முன்பு, அதை முதலீடு செய்வதற்காக வாங்குகிறோமா? வீடு கட்டுவதற்காக வாங்குகிறோமா? என்று நம்முடைய எதிர்காலப் பயன்பாடு குறித்துதான் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுக வேண்டும்.
17. நீங்கள் வாங்க விரும்பும் மனைப்பகுதியைச் சுற்றிலும் வர இருக்கும் எதிர்கால அரசுத் திட்டங்களை தெரிந்து கொள்வது நல்லது.
18. எந்த இடத்தில் மனை வாங்குகிறோமோ, அதன் சுற்றுப்புறத்தை நன்கு ஆராய்ந்து, அங்கெல்லாம் மனையின் சதுர அடி எவ்வளவு ரூபாய் என்பதை விசாரியுங்கள்.
சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கீழ்காணும் வகைகளில் ஏமாற்றக் கூடும்.
19. அதிகம் பிரபலமில்லாத பகுதியை உயர்வாகக் கூறுவது; நாம் அன்றாடம் பார்க்கும் நாளிதழ் மற்றும் டிவி விளம்பரங்களில்
மனைப்பிரிவு ஒரு பிரபலமான லேண்ட்மார்க் அருகே இருப்பதாக சொல்வார்கள். அடிக்கடி அதைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், உண்மையில் அது எங்கோ வெகுதொலைவில் இருக்கும்.
20. முக்கிய இடத்திலிருந்து பத்து நிமிடப் பயணம் என்பார்கள். ஆனால், உண்மையில் அது அரைமணி நேரப் பயணமாக இருக்கும். அவர்களது வாகனத்தை தவிர்த்து நமது வாகனங்களில் செல்லும்போதுதான் அது நமக்குப் புரியும்.
21. அவர்களது வாகனங்களில் செல்லும்போது சிலர் திரைப் படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். அது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அல்ல. மனை வாங்குவோர் பயண தூரத்தையும், நேரத்தையும் கணக்கிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த ஏற்பாடு.
22. தங்க நாணயம், இன்டக்க்ஷன் ஸ்டவ் போன்ற பரிசுப் பொருட்களை தருகிறார்கள் என்பதற்காக நாம் நம்மை இழந்துவிடக் கூடாது. அதே போன்று, பத்திரப்பதிவு இலவசம் என்பதும் ஒரு கவர்ச்சிகர விளம்பர
மாகும். உண்மையில் பத்திரப்பதிவுக்கு என்ன கட்டணம் ஆகிறது என்பதை விசாரியுங்கள். சில ஆயிரங்கள் மட்டுமே என்றால், அந்த விளம்பரத்தைப் புறக்கணித்து விடலாம்.
23. உங்கள் மனைப்பிரிவிற்கு வெகு அருகில் வயல்வெளிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால், ஒரு வேளை உங்கள் நிலமும் விவசாய பூமியாகவே இருக்கலாம். விவசாய நிலம் குறைந்தது மூன்று வருடங்களாக விவசாயம் நடைபெறாமல் இருந்தால்தான் அதை வீட்டு மனையாக விற்க முடியும். ஒரு வேளை உள்ளூர் பஞ்சாயத்தை கைக்குள் போட்டுக்கொண்டு, அந்த நிலத்தை நம்மிடம் வீட்டுமனையாக விற்க முயற்சி செய்யலாம்.
24. அதிவேகமாக வளர்ந்து வரும் இடம். எனவே, நீங்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற மனை என்று விளம்பர வாசகங்கள் தெரிவித்தால்
மயங்கி விடாதீர்கள். அதிவேகமாக விலை ஏறும் இடத்தை ஏன் விற்க அவசரப்பட வேண்டும்?
சில பொதுவான டிப்ஸ்கள்
25.கோயில், அறக்கட்டளை ,குத்தகை நிலங்களை வாங்காது தவிர்த்து விடுங்கள்.
26.வட்டம்,முக்கோணம்,மூலை(Corner) மனைகளை தவ்ர்த்து விடுங்கள் செவ்வக வடிவ மனைகளே கட்டுமானத்திற்கு ஏற்றது.அதற்கு பிறகு சதுர வடிவத்திற்கு முன்னுரிமை தரலாம்
27. நீங்கள் வாங்கும் மனையின் திசைகளையும், எல்லைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
28. எந்த ஊர்? ஊராட்சியா? பேரூராட்சியா? நகராட்சியா? மாநகராட்சியா? எத்தனை மனைகள்? வரைபடம் இருக்கிறதா? பாகப்பிரிவினை சரியாக தீர்க்கப்பட்டிருக்கிறதா?
29. உரிய சட்ட விதிகளும், நல்ல வழக்கறிஞர்களும் இருக்கும் நமது சமூக பாதுகாப்பு சூழல்களில் சில ஆயிரம் ரூபாய்களை சிக்கனப்படுத்துவதற்காகவும், மூன்றாம் நபர் அறியாத வகையில் நிலம் வாங்கும் ஆசைக்காகவும் நாம் சேமித்த பணத்தை இழந்துவிடக் கூடாது.
30. நிலத்தை வாங்குபவர்கள் நிலத்திற்குண்டான பட்டா, நிலவரி ரசீது போன்றவற்றை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை நம்பி ஆய்வு செய்ய வேண்டும். இவற்றில் தவறு அல்லது மோசடி நடந்தால் உடனடியாக காவல்துறை, நீதி மன்றங்களை அணுக வேண்டுமே தவிர மோசடிக் கும்பலுடன் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum