கார்பென்டருக்கு 25 டிப்ஸ்கள்
Thu Jul 02, 2015 2:15 am
இன்றைய கட்டுமானத்துறையில் எத்தனைதான் தொழிற்நுட்பம் புதிது புதிதாக வந்தாலும், மர வேலைகளுக்கு இருக்கும் மவுசு ஏறிக்கொண்டேதான் வருகிறது. கார்பென்டர்களுக்கான கணிசமான சம்பளமும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. நீங்கள் கார்பென்டராக இருந்தால் உங்களது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இதோ 25 டிப்ஸ்கள்.
1. எந்த வகை மரத்தைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு நீங்கள் ஆலோசனை
சொல்லலாம். குறிப்பிட்ட மரத்தைத்தான் வாங்க வேண்டும் என்று அடித்துச் சொல்ல வேண்டாம்.
2. வீட்டுக்காரர்கள் விரும்புகிற இடத்தில், கடையில் மரங்களை வாங்கட்டும். நீங்கள் குறிப்பிடும் கடையில்தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
3. மரம், பிளாஸ்டிக், உலோகம் என எதுவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வீட்டுஉரிமையாளர்கள்தான். எனவே, அவர்களது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
4. குறிப்பிட்ட பயன்பாட்டிற்குக் குறிப்பிட்ட பொருள் பொருத்தமாக இராது என்பதுஉங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டுக்காரர்களுக்கு அந்த அளவுக்குத் தெரிந்திருக்காது. என்னென்ன சங்கடங்கள் வரக்கூடும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள்.
5. முன்பணம் வாங்குவதில் கவனமாக இருங்கள்.உங்கள் வேலைக்கு மீறிய தொகையை முன்கூட்டியே வாங்க முற்படாதீர்கள். ஒருவேளை உங்களால் வேலையை முடிக்காமல் போனால் உங்களுக்குத்தான் அதிகச் சுமையாக அமைந்துவிடும்.
6. கருவிகளைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள். தீட்டுவதற்கு நேரம் வீணாகிறதே என்று பார்க்காதீர்கள். வெட்டும் வேலையை விரைவில் முடித்துவிடலாம்.உங்கள் நண்பர்களே உங்கள் கருவிகளைக் கடன் கேட்பார்கள். அதை முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள்.
7. ஒருசிறிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள்,அவற்றைத் தவிர்த்த விதம், வேலையில் நீங்களே கண்டுபிடித்த புதிய உத்தி போன்றவற்றை அதில் குஷூத்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே அதுபெரிய உதவியாக இருக்கும்.
8. தேவைப்படும் அளவு மரத்தைச் சரியாகக் கணக்குப் போட்டுவாங்கி வாருங்கள். எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
9. நீங்கள் வேலை செய்யும் இடம் வெயில், மழைக்குப் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டம் அவசியம். வீட்டிலேயே உங்கள் பட்டறையை வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களா? பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
10. உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி, நேரக் கணக்குப்படியா? நாள் கணக்கா? அல்லது பொருள்எண்ணிக்கையைப் பொருத்ததா? என்பதைத் தெளிவாக்குங்கள் . இதை ஒரு ஒப்பந்தம் போல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் சங்கடம் வராமல் தவிர்க்கலாம்.
11. உங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப வேலைகளைப் பிடியுங்கள். பேராசைப்பட்டு அதிக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லல்படாதீர்கள்.
12. உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் நேரத்தை வரையறை செய்து கொள்ளுங்கள்.வேலை செய்யும்போது முகத்தில் துணி கட்டிக் கொள்வதுபோன்ற சின்னச் சின்ன விக்ஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.
13.எப்பொழுதுமே புதுவித கிரியேட்டிவிட்டி படைப்புகளுக்கு மவுசு அதிகம். வழக்கமான கட்டில்கள், அலமாரிகள், ஃபர்னிச்சர்களுக்குப் பதிலாக, புது வடிவத்தில், அசத்தலான தோற்றத்தில், நிறைய மரத் தயாரிப்புக்களை உருவாக்குங்கள். இவற்றை உங்களது பட்டறையிலோ, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ காட்சிக்காக வையுங்கள். அவற்றில் நிச்சயம் கவரக்கூடியத் தன்மை இருந்தால், நீங்களும் நிச்சயம் பிரபலமாவீர்கள்.
14.நகரங்களில் இப்போது பெரும் பற்றாக்குறையே இடம்தான். எனவே, இடத்தைச் சேமிக்கிற எந்த விக்ஷயத்திற்கும் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் தயாரிக்கும் பொருட்களும் இடத்தைக் குறைவாகப் பயன்படுத்துகிற, ஆனால் பயன்பாடுகள் அதிகமாக இருக்கிறவையாகவே உருவாகட்டும். பிறகு பாருங்கள், உங்களது தயாரிப்புகள் சந்தையில் எப்படிப் பேசப்படுகின்றன என்பதை.
15. தற்போது மல்டி பர்போஸ் ஃபர்னிச்சர்கள்தான் பிரபலமாகி வருகின்றன. அதாவது, நீட்டினால் சோஃபா, மடக்கினால் மேஜை, மடித்தால் நாற்காலி என்பது போன்ற ஃபர்னிச்சர்களை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?
16. நீங்கள் செய்யும் எல்லா பொருட்களையுமே பார்த்தவுடன் அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உங்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளரும் உணரும் வகையில் உருவாக்குங்கள். அதாவது, ஓரத்தில் விநாயகர், சிலுவை, லோகோ போன்றவற்றைப் பொறிப்பது.
17. நீங்கள் சொந்தமாக பட்டறை வைத்திருந்தால், அதன் ஒரு ஓரத்திலேயே சிறிய மரக்கிடங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரிதாகக் கிடைக்கிற மர வகைகளை எத்தனை காசானாலும் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதானாலும் அது நமக்கு லாபத்தைத் தரும்.
18. உலகளாவிய மரங்கள் மற்றும் ஃபர்னிச்சர் சந்தையைப் பற்ஷூ அப்டேட்டாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
19. எந்த புதிய அறிவியல் மாற்றம் வந்தாலும், அதனுடன் உங்கள் தொழிலை எவ்வாறு இணைப்பது என்பதை யோசியுங்கள். உதாரணத்
திற்கு, டெலிபோன் போய் செல்போன் வந்தது, தற்போது செல்போன் போய் ஆன்ட்ராய்டு, ஐ போன் வந்திருக்கின்றன. இவை சற்று அளவு பெரிது. இவற்றிற்கு ஏற்றாற்போல மர ஸ்டான்டுகளை, சார்ஜர் பாக்ஸ்களை நீங்கள் உருவாக்கலாம். இவை ஒரு உதாரணம்தான். இவை போன்றே, நீங்கள் பல மின்னணு சாதனங்களுடன் சுலபமாகத் தொடர்புப்படுத்தலாம்
20. குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் முகவரி, அலைபேசி விவரங்ளைப் பொறித்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து முடிக்கும் பொருட்களின் மேல் அவற்றை ஒட்டிக் கொடுங்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும்.
21. புதிதாகச் செய்வதுமட்டுமே என் வேலை என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பழையவற்றைப் பராமரிப்பதும் பழுதுபார்ப்பதும் கூட நல்ல பணிதான். அதில் உங்களுக்குப் புதிய, பயனுள்ள அனுபவங்கள் கிடைக்கும்.
22. மிகவும் பழமை வாய்ந்த மரச் சாமான்கள், கட்டடப் பொருட்களைக் காண நேர்கிறதா? விற்பவர்களிடம் பேரம் பேசி வாங்குங்கள். பழம் பொருட்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது இதில் நீங்கள் கணிசமாக ஆதாயம் பார்க்கலாம்.
23. சில நேரங்களில், செய்வதற்குவேலை ஒன்றும் கிடைக்காமல் போகலாம். அப்போது நீங்களே கொஞ்சம்முதலீடு செய்து சில பொருட்களைத் தயாரியுங்கள். முடிந்தபோது விற்றுக் கொள்ளலாம்.
24.வெளிநாட்டுப் பத்திரிகைகள், தொழிற்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள, புத்தகங்களைப் படியுங்கள். நன்கு வேலை தெரிந்தவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பலருக்கும் கற்றுக் கொடுங்கள். இதில் தொழில் இரகசியம் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை.
25. மொத்தமாக ஒரு ஆர்டர் எடுக்கும்போது கொஞ்சம் விலையைக் குறைத்து காசு வாங்குவது நமது இயல்பு. ஆனால், அதன் கூடவே இலவச இணைப்பாக ஏதேனும் ஒரு சிறிய, ஆனால் அசத்தலான கைவினைப் பொருள் ஒன்றை செய்து இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்குங்கள். அது சிலையாகவோ, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாகவோ இருக்கலாம். பெங்களூருவில் ஒரு கார்பென்டர் வாடிக்கையாளர் உருவத்தை அச்சு அசலாக மரத்தில் வடித்து, சிற்பமாகச் செய்து, பரிசாகக் கொடுத்து அசத்துகிறாராம். நீங்கள் ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்யுங்களேன்!
பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து ......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum