கொத்தனார்களுக்கு அரிய 40 டிப்ஸ்கள்
Thu Jul 02, 2015 2:25 am
கொத்தனார்களுக்கு பில்டர்ஸ் லைன் கட்டுமான மாத இதழ் அளிக்கும் அரிய 40 டிப்ஸ்கள் :
1.கொத்தனாராக இருப்பவருக்கு டிராயிங்கில் உள்ளபடி அளவுகளைப் பார்த்து மார்க்கிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
2. ஃபவுண்டேக்ஷனின் போது சென்டர் லைன் டிராயிங்கைத் தவறில்லாமல் செய்ய வேண்டும்.
3. டயகனல்( Diagonal) மார்க்கிங் செய்யும்போது 90 டிகிரி பெர்பன்டிக்குலர் சரியான அளவில் மூலை மட்டம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
4. ஃபவுண்டேக்ஷன் அமைக்கும் போது லூஸ் சாயிலில் (Loose Soil) போடக் கூடாது. கன்சாலிடேக்ஷன் செய்து திமிசுப் போட்ட பிறகே செய்ய வேண்டும்.
5. காலம் அமைக்கும்போது வெர்டிகல் லைன், ஹரிசான்டல் லைன் அளவுகளைப் பார்த்து அலைன்மென்ட் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
6. சாலை மட்டத்திலிருந்து கட்டிடத்தின் உயரம் எவ்வளவு வைக்க வேண்டும் என்பதை தெரிந்து அதன்படி செய்ய வேண்டும்.
7. வாட்டர் லெவல் டியூபில் தூய்மையான தண்ணீர் நிரப்பி, நீர்க்குமிழ்கள் இல்லாமல் லெவல் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
8. அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்திற்குமே வாட்டர் லெவல் டியூபை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
9. செங்கற்களை நனைத்த பிறகே கட்டுமானத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.
10. சிமெண்ட் கலவையை பயன்படுத்துவதில், பொறியாளர் கொடுக்கும் விகிதத்தில் கலவை தயாரித்து முறையாக உபயோகிக்க வேண்டும்.
11. செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் ஃபினிஷிங்கில் குத்துக்கல்லாக வைத்துக் கட்ட வேண்டும்.
12. சுவர் கட்டுமானத்தின்போது வெர்டிக்கல் ஜாயின்ட்களை தவிர்க்க வேண்டும். அப்படி ஜாயின்ட் வரும்போது, கண்டிக்கல் உடைத்துக் போட்டு கட்ட வேண்டும்.
13. ஒரே நாளில் சுவர்களை 4 1/2 அடிக்கு மேல் கட்டுதல் கூடாது. இந்த அளவிற்கு மேல் கட்டினால், கட்டுமானத்தின் தரம் குறைந்து விடும்.
14. கலவையிடும் போது, மணல், ஜல்லிகளில் உள்ள தூசி, துரும்புகள், பிளாஸ்டிக்குகள், பேப்பர்கள், கூழாங்கற்கள் போன்றவற்றை நீக்கி, சலித்த பிறகு கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
15. 4 1/2 அங்குல சுவர் கட்டும்போது 6 எம். எம். கம்பிகளை குறுக்கே வைத்து கட்ட வேண்டும். அல்லது கம்பி வலையைப் பயன்படுத்திக் கட்ட வேண்டும். அப்போதுதான் சுவற்றில் விரிசல் ஏற்படாமல் இருக்கும்.
16. செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும்போது கம்பிவலை வைத்து 6 எம். எம். ராடை துளையிட்டு பொருத்தி கட்டுதல் வேண்டும்.
17. சீலிங் பூச்சு பூசுவதற்கு முன் வெட்டிரும்பு கொண்டு சிறிய அளவில் முழுவதும் கொத்திய பிறகே தேவையான கனத்தில் பூசுதல் வேண்டும்.
18. பூச்சு வேலைகள் செய்யும்போது, ஒரே நாளில் இரண்டு கோட் பூசுதல் கூடாது. பூச்சு வேலைகளின் கன அளவு குறைவாக பூசுதல் மற்றும் பட்டன் மார்க் செய்து பூசுதல் சிறந்தது.
19. பிளம்பிங் பாயின்ட், எலெக்ட்ரிகல் பாயின்ட் வேலைகள் முழுமையாக முடித்த பிறகே பூச வேண்டும்.
20. நிலை மற்றும் ஜன்னல்களைப் பொருத்தும்போது, வாட்டர் டியூப் லெவலைப் பார்த்து சரியான அளவில் பொருத்த வேண்டும்.
21. மெயின் டோர் பொருத்தும்போது, கதவின் கனத்தைப் பொறுத்து நான்கு முதல் ஆறு கிளாம்புகள் வரை அமைத்திட வேண்டும்.
22. பெட்ரூம், கிச்சன் போன்ற அறைகளுக்குள்ள கதவுகளை அமைக்கும்போது 3 கிளாம்புகள் பொருத்திட வேண்டும்.
23. அஸ்திவாரம் அதிக உயரம் அமைக்கின்றபோது, கன்சாலிடேக்ஷன் இரண்டு அல்லது மூன்று முறை செய்த பிறகே ஃபில்லிங் மெடீரியலை இட்டு நிரப்ப வேண்டும்.
24. 1 1/2 ஜல்லி மிக்ஸிங் செய்யும்போது தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவை சரியான விகிதத்தில் கலந்து போட வேண்டும்.எந்த கான்கிரீட் வேலையாக இருந்தாலும், அதற்கேற்ற விகிதாச்சாரத்தில் கலந்து, தண்ணீர், சிமெண்ட், மணல் ஆகியவற்றின் விகிதம் மிகச் சரியாக இருக்க வேண்டும்.
25. எலெக்ட்ரிகல் பாயின்ட் அமைக்கும் போது கட்டுமானத்தின் அனைத்துப் பகுதிகளும் சம அளவு உயரத்தில் பொருத்திட வேண்டும்.
26. கிச்சன் ஃபிளாட்ஃபார்ம் அமைக்கும்போது மிகக் கவனம் எடுத்துக் கொண்டு, தண்ணீர் போகும் வாட்டத்தை சரியான முறையில் அமைக்க வேண்டும்.
27. சமையலறையில் காஸ் சிலிண்டர் அமைப்பதற்கென்று சரியான அளவில் இடத்தின் உயரத்தைக் கணக்கிட்டு கிச்சன் க்ஷெல்ஃப் அமைக்க வேண்டும். கேஸ் ஸ்டவ் அமைப்பதற்கான மேடை சரியான உயரத்தில் அமைத்திட வேண்டும்.
28. எந்த அறையாக இருந்தாலும் கிரானைட், டைல்கள் போடும்போது வாட்டத்தை சரியான அளவில் அமைத்திட வேண்டும்.
29. ஜன்னலை பொருத்துவதற்காக வைக்கப்படும் சைடு கிளாம்புகள் மற்றும் வெர்டிகல் கிளாம்புகளை சரியான ஆழத்தில் முறையாக பேக்கிங் செய்து பொருத்துதல் வேண்டும்.
30. ஒரு நாளைக்கு மூன்று முறை கட்டுமானங்களுக்கு கியூரிங் செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
31. லாஃப்டுகள் (பரண்கள்) அமைக்கும்போது, மட்டம் சரியான அளவில் அமைக்கவில்லையென்றால், இன்டீரியர் வேலைகள் செய்யும் போது சிக்கலாகி விடும். ஆகவே, முறையாக மட்டத்தைப் பார்த்து லாஃப்டுகளை அமைத்திட வேண்டும்.
32. எல்லா ஃப்ளோரிங் பணிகளின் போதும் தண்ணீர் வெளியேறும் வகையில் வாட்டத்தை அமைக்க வேண்டும்.
33. டாய்லெட் அமைக்கும்போது, பள்ளம் ஏற்படும். அதை லோ லெவலில் வைக்க வேண்டும். ஸ்கோர் பைப்பை முறையாக இணைத்து, அதற்குத் தேவையான வாட்டத்தை அமைக்க வேண்டும்.
34. வெதரிங் கோர்ஸ் அமைக்கும் போது, கடுக்காய், வெல்லம், சிறிய
ஜல்லி போன்றவைகளை அதற்கேற்ற விகிதத்தில் கலந்து அமைக்க வேண்டும்.(ரெடிமேட் வெதரிங் கோர்ஸ் டைல்களை வாடிக்கையாளர் விரும்பாத பட்சத்தில் )
35. கட்டுமானத்திற்குத் தேவையான டைல்கள் மற்றும் மார்பில்களைப் பொருத்தும்போது, அவை ISO/ISI தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள்தானா? என்று கண்டறிந்து அதன் பிறகே பயன்படுத்த வேண்டும்.
36. மழை நீர் பைப்புகள் மற்றும் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களை அமைக்கும் போது, அவை வெளியேறும் அளவை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் இன்லெட், அவுட்லெட் குழாய்களை அமைக்க வேண்டும்.
37. பைப் லைனுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களிலெல்லாம், ரீ- கன்சாலிடேக்ஷன் செய்ய வேண்டும்.டிரைனேஜ் சேம்பர் அமைக்கும்போது இன்னர், அவுட்டர்களை முறையாகப் பூசுதல் வேண்டும்.
38. படிக்கட்டுகளை அமைக்கும்போது சரியான அளவில் ரைசிங், ட்ரெட் ஆகியவற்றை ஒரே சீராக அமைத்தல் வேண்டும்.
39. எதற்கெடுத்தாலும் பொறியாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது.
40. உங்களைப் பொறுத்த வரை வீடு கட்டுவது ஒரு வேலை . ஆனால், வடிக்கையாளருக்கு அது ஒரு வாழ்நாள் சாதனை.நாம் ஒரு சாதனைக்கு பயன்படுகிறோம் என்பத நினவில் கொண்டால் உங்கள் பணி இன்னும் சிறக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum