மா பரிசுத்த ஸ்தலம் தங்கிவாழும் பரிசுத்தவான்கள்!
Thu Jun 18, 2015 7:13 am
மகாபரிசுத்த ஸ்தலத்திற்கு நடத்திச்
செல்லும் வழி, ஓர் "வாசல்" அல்ல. அது ஓர்
நீண்ட பாதை! அதாவது, இவ்வழியாக நாம்
நாள்தோறும் சிலுவை எடுத்து,
ஒவ்வொறு நாளும் நடந்து செல்லும்
ஜீவியமாகவே இந்தப் பாதை இருக்கிறது.
இவ்வழி செல்பவர்கள் மகா பரிசுத்த
ஸ்தலத்திற்குள் தங்கி ஜீவிப்பார்கள் என்பதில்
சந்தேகமே இல்லை. ஆயினும் இவ்வாறு
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வாழும்
இவர்கள், கவனமாய் ஜீவிக்காத பட்சத்தில்.....
கொஞ்ச நாளில் பரிசுத்த ஸ்தலத்திற்குத்
திரும்பிவிடவோ! அல்லது
வெளிப்பிரகாரத்திற்குத் திரும்பிவிடவோ
கூடமுடியும்!!
இன்னும் சிலர் இதைவிட
மோசமாய், தங்கள் மாம்சத்தின்படி ஜீவித்து
கூடாரத்தில் வெளியே நின்று தங்கள்
சொந்த இரட்சிப்பையே இழந்து
இருக்கிறார்கள்!! (ரோமர் 8:13) .
ஒரு மனிதன் பின்மாற்றமடைந்து
அவனுடைய இருதயம் கடினமாவதற்கு 24
மணி நேரங்கள் போதும்!
நீங்கள் ஒருசமயம்
மன்னித்த யாரோ ஒருவரிடம் மற்றொரு
சமயத்தில் 24மணி நேரத்தில் கசப்பு
கொண்டிட முடியும்!
இதனிமித்தமே நாம்
ஒருவருக்கொருவர் நாள்தோறும்
(ஒவ்வொரு 24மணிநேரமும்) புத்தி
சொல்லவேண்டுமென
கூறப்பட்டிருக்கிறோம்.
அவ்வாறு புத்தி சொல்வதற்கு ஒரு சகோதரனோ அல்லது
ஒரு சகோதரியோ இல்லாத பட்சத்தில்,
தேவனுடைய வார்த்தையும் பரிசுத்த
ஆவியானவரும் நம்மைக் கண்டித்து புத்தி
சொல்வதற்கு இடம்தர வேண்டும்! (எபிரெயர்3:13).
ஓர் கிறிஸ்தவ அசெம்பிளியில்,
வெளிப்பிரகாரத்தில் இருப்பவர்கள்
இருக்கலாம் (சுவிசேஷத்தின் முதல்
பாகத்தைக் கேட்டுக் கீழ்ப்படிந்தவர்கள்).
இன்னும் கொஞ்சம் பேர் சற்று முன்னேறி,
பரிசுத்த ஸ்தலம்வரை வந்திருக்கலாம்
(சுவிசேஷத்தின் இரண்டாம் பாகத்தைக்
கேட்டு கீழ்ப்படிந்தவர்கள்).
ஆனால் தேவனைப் பொருத்தமட்டில் அந்த அசெம்பிளியின்
ஆவிக்குரிய அதிகாரமும் வலிமையும்,
மாபரிசுத்த ஸ்தலத்திற்குள் எத்தனைபேர்
பிரவேசித்திருக்கிறார்களோ (பூரண
சுவிசேஷத்தைக் கேட்டு கீழ்ப்படிந்தவர்கள்)
அவர்களைக் கொண்டுதான்
கணக்கிடப்படுகிறது!
மாம்ச திரையின் வழியாய் கடந்து மாபரிசுத்த ஸ்தலத்தில்
பிரவேசித்தவர்களைக் கண்டே சாத்தான் நடுநடுங்குகிறான்.
எனவேதான் அவன் "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்ற
சத்தியத்தை கடுமையாக எதிர்க்கிறான் (2யோவான் 7).
கர்த்தர் தாமே உங்கள் இருதயத்தில் பேசுவாராக..
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...
நன்றி: தேவனுடைய சத்தம்
செல்லும் வழி, ஓர் "வாசல்" அல்ல. அது ஓர்
நீண்ட பாதை! அதாவது, இவ்வழியாக நாம்
நாள்தோறும் சிலுவை எடுத்து,
ஒவ்வொறு நாளும் நடந்து செல்லும்
ஜீவியமாகவே இந்தப் பாதை இருக்கிறது.
இவ்வழி செல்பவர்கள் மகா பரிசுத்த
ஸ்தலத்திற்குள் தங்கி ஜீவிப்பார்கள் என்பதில்
சந்தேகமே இல்லை. ஆயினும் இவ்வாறு
மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வாழும்
இவர்கள், கவனமாய் ஜீவிக்காத பட்சத்தில்.....
கொஞ்ச நாளில் பரிசுத்த ஸ்தலத்திற்குத்
திரும்பிவிடவோ! அல்லது
வெளிப்பிரகாரத்திற்குத் திரும்பிவிடவோ
கூடமுடியும்!!
இன்னும் சிலர் இதைவிட
மோசமாய், தங்கள் மாம்சத்தின்படி ஜீவித்து
கூடாரத்தில் வெளியே நின்று தங்கள்
சொந்த இரட்சிப்பையே இழந்து
இருக்கிறார்கள்!! (ரோமர் 8:13) .
ஒரு மனிதன் பின்மாற்றமடைந்து
அவனுடைய இருதயம் கடினமாவதற்கு 24
மணி நேரங்கள் போதும்!
நீங்கள் ஒருசமயம்
மன்னித்த யாரோ ஒருவரிடம் மற்றொரு
சமயத்தில் 24மணி நேரத்தில் கசப்பு
கொண்டிட முடியும்!
இதனிமித்தமே நாம்
ஒருவருக்கொருவர் நாள்தோறும்
(ஒவ்வொரு 24மணிநேரமும்) புத்தி
சொல்லவேண்டுமென
கூறப்பட்டிருக்கிறோம்.
அவ்வாறு புத்தி சொல்வதற்கு ஒரு சகோதரனோ அல்லது
ஒரு சகோதரியோ இல்லாத பட்சத்தில்,
தேவனுடைய வார்த்தையும் பரிசுத்த
ஆவியானவரும் நம்மைக் கண்டித்து புத்தி
சொல்வதற்கு இடம்தர வேண்டும்! (எபிரெயர்3:13).
ஓர் கிறிஸ்தவ அசெம்பிளியில்,
வெளிப்பிரகாரத்தில் இருப்பவர்கள்
இருக்கலாம் (சுவிசேஷத்தின் முதல்
பாகத்தைக் கேட்டுக் கீழ்ப்படிந்தவர்கள்).
இன்னும் கொஞ்சம் பேர் சற்று முன்னேறி,
பரிசுத்த ஸ்தலம்வரை வந்திருக்கலாம்
(சுவிசேஷத்தின் இரண்டாம் பாகத்தைக்
கேட்டு கீழ்ப்படிந்தவர்கள்).
ஆனால் தேவனைப் பொருத்தமட்டில் அந்த அசெம்பிளியின்
ஆவிக்குரிய அதிகாரமும் வலிமையும்,
மாபரிசுத்த ஸ்தலத்திற்குள் எத்தனைபேர்
பிரவேசித்திருக்கிறார்களோ (பூரண
சுவிசேஷத்தைக் கேட்டு கீழ்ப்படிந்தவர்கள்)
அவர்களைக் கொண்டுதான்
கணக்கிடப்படுகிறது!
மாம்ச திரையின் வழியாய் கடந்து மாபரிசுத்த ஸ்தலத்தில்
பிரவேசித்தவர்களைக் கண்டே சாத்தான் நடுநடுங்குகிறான்.
எனவேதான் அவன் "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்ற
சத்தியத்தை கடுமையாக எதிர்க்கிறான் (2யோவான் 7).
கர்த்தர் தாமே உங்கள் இருதயத்தில் பேசுவாராக..
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...
நன்றி: தேவனுடைய சத்தம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum