பரிசுத்த வேதாகமம் மாற்றி அமைக்கப்பட்டது என்று யாராவது குழப்புகிறார்களா?
Mon Sep 07, 2015 4:47 am
இதை படித்த பின் நிச்சயம் உங்கள் பரிசுத்த வேதாகமத்தை முத்தமிடுவீர்கள். கண்டு விசுவாசிக்கிரவனை விட காணாமல் விசுவாசிக்கிறவன் மேலானவன். இப்படிப்பட்ட ஆதாரங்கள் இருந்தால் தான் இயேசுவை நான் விசுவசிப்பேன் என்று கூறுபவன் கிறிஸ்தவனாய் வாழத்தெரியாதவன். இயேசு கிறிஸ்து இதயத்தில் ருசிபாருங்கள். நிச்சயம் கடவுளின் அரவணைப்பை உணர்வீர்கள். இந்த பதிவு சிலருக்கு உதவியாக இருக்கும் என ஜெபித்து பதிவிடுகிறேன்.
நீங்கள் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம் மாற்றி அமைக்கப்பட்டது என்று யாராவது குழப்புகிறார்களா?
அறியாமையினால் வினா எழுப்பும் சில நயவஞ்சகர்களுக்கு இந்த பதிவு ஓர் பதிலாக நிச்சயம் இருக்கும். கடைசி காலங்களில் கட்டு கதைகளுக்கு சாய்ந்து போகும் காலம் வரும் என்று பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதும் போது கூறுகிறார். அப்படித்தான். கதைகள் நிரம்பிய நயவஞ்சக பேச்சுக்களை நம்பி இன்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட முட்டாள் தனமான பேச்சுக்கள் இன்னமும் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
இன்று உங்களுக்கு ஓர் நற்செய்தியை கொண்டு வந்துள்ளேன். அதாவது 1947ம் ஆண்டு நமக்கு சுதந்திரம் கிடைத்த வருடத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள கும்ரான் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. ஆடு மேய்ப்பவர் ஒருவர் கும்ரான் மலைப்பகுதியில் ஓர் பழங்கால சுருளை கண்டெடுக்க 1949ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் இந்த இடத்தில் மலைப்பகுதி ஒன்றில் ஓர் சுருளை கண்டு பிடித்தனர். அந்த சுருள் நமது பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஏசாயா தீர்க்கனின் 66 அதிகாரனங்களை உள்ளடக்கி இருந்தது.
(http://www.deadseascrolls.org.il/learn-abo…/discovery-sites…)
இப்படி ஒவ்வொருகுகையாக சுமார் 11 குகைகளை கண்டு பிடித்தனர். ஏசாயாவின் புத்தகம் அதிக பிரதிகளை கண்டு பிடித்தனர். அது மட்டும் அல்ல பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பல புத்தகங்கள் இங்கே முழுமையாக இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்டவர்கள் அதனை உலகிற்கு தெரியப்படுத்த பல வருடங்கள் ஆனது. ஏன் என்றால் இந்த ஏசாயா புத்தகம் எபிரேய மொழியில் பழங்கால வழக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. நீங்களும் அந்த அறிய புத்தகத்தை காணலாம்.
(https://upload.wikimedia.org/…/commons/3/31/Great_Isaiah_Sc…)
இந்த அறிய பதிவு முழுமையாக எப்பொழுது எழுதப்பட்டிருக்கலாம்? இதனை ஆராய்ந்த போது கிறிஸ்துவுக்கு முன் 125 வருடங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரம் அல்ல. சில ஏசாயா பிரதிகள் கிறிஸ்துவுக்கு முன் 1000 வருடங்களாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஓர் அறிய ஆச்சரிய பொக்கிஷம் தானே? சரி..... படத்தில் காணப்படும் பதிவுகள் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளதா? அதற்கு ஆதாரம் உண்டா என்று நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு இந்த பகுதியில் பதில் உண்டு. இங்கே இந்த படத்தில் காணப்படும் எழுத்துக்களை மொழி பெயர்த்துள்ளார்கள்.
(http://dss.collections.imj.org.il/chapters_pg)
மேலே கூறப்பட்டுள்ள பகுதியில் அனைத்து 66 புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்தபடி இந்த ஏசாயா புத்தகத்தில் தான் யாவே என்பவர் யார் எனது தெளிவாக கூறப்பட்டிருந்தது. அந்த யாவே இயேசுவின் வருகையை குறித்து எழுதப்பட்டிருந்தது. அவரை ஆட்டுக்குட்டியானவர் என்றும் முன் குறித்திருந்தது. அவர் அடிக்கப்பட்டு பின் உயிர்த்தெழுவார் என்றும் எழுதப்பட்டிருந்தது. இப்படி பல வசனங்கள் இந்த சுருளிலும் உள்ளது. அல்லேலூயா.... கர்த்தருக்கே எல்லா கணமும் மகிமையும் உண்டாவதாக.
"Several prophesies appearing in the Book of Isaiah have become cornerstones of Judeo-Christian civilization. Perhaps the most renowned of these is Isaiah's vision of universal peace at the End of Days: "And they shall beat their swords into plowshares and their spears into pruning hooks: Nation shall not take up sword against nation; they shall never again know war" (2:4)."
அதாவது.... இந்த தீர்க்கதரிசன புத்தகத்தில் இருக்கும் பல வசனங்கள் யூதா - கிறிஸ்தவ மக்களை பற்றியுள்ளது. இந்த தீர்க்கனின் கடைசி கால வசனமாக அமைந்துள்ள 2:4 நமக்கு எல்லாம் தெரிந்ததே. "4. அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை". இப்படி எடுக்கப்பட்ட இந்த புத்தக சுருள்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துபோகின்றன. பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்று கதைவிடுபவர்கள் இந்த பதிவை படித்து புரிந்துகொள்வார்கள். கிறிஸ்தவர்கள் பரிசுத்த வேதாகமத்தை மாற்றிவிட்டர்கள் என்றால் எப்படி இன்று இந்த புஸ்தக சுருள்கள் அப்படியே நம்முடைய பரிசுத்தக வேதாகமத்தோடு ஒத்துபோகும்?
இன்றைய பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்கள் வேகமாய் நிறைவேறி வருவது நமக்கு தெரிந்த விஷயமே.... அப்படியென்றால் ஆதிகால அதாவது வேதாகமத்தை மாற்றியவர்களுக்கு எப்படி கடைசி கால நிகழ்வை பற்றி தெரிந்தது? கிறிஸ்துவுக்கு பின் வந்தவர்கள் அதாவது கிறிஸ்துவுக்கு பின் வேதாகமத்தை எழுதியவர்கள் என்ன தீர்க்கதரிசிகளா? அப்படி இல்லையே... பரிசுத்த வேதாகமத்தை யாரும் மாற்றி எழுதவில்லை. தேவன் கொடுத்ததை தேவனால் காப்பாற்ற முடியாதோ? அப்படியென்றால் கடவுளுக்கு சக்தி அவ்வளவுதானோ? தங்களுடைய குறுகிய அறிவை வைத்துகொண்டு இயேசு கிறிஸ்துவின் மாகாபெரிய வல்லமையை கேள்விக்குறியாக்கும் சில பைத்தியங்கள் இன்றும் உலாவி வருகிறது... இவர்களுக்கு எச்சரிக்கையாய் இருப்போம். பரிசுத்த வேதாகமம் யாராலும் மாற்றப்படவில்லை. தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைகள் இன்னமும் நிறைவேறி கொண்டு தான் உள்ளது. தொடர்ந்து பரிசுத்த வேதாகம வசனங்களின் சாரம்சாரங்கள் உங்களிடத்தில் கொண்டு வரப்படும். இந்த ஊழியத்திற்காக ஜெபித்து கொள்ளுங்கள். யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
ஆதாரங்கள்: https://upload.wikimedia.org/…/commons/3/31/Great_Isaiah_Sc… http://dss.collections.imj.org.il/isaiahhttp://dss.collections.imj.org.il/isaiah# https://www.usc.edu/…/educ…/dead_sea_scrolls/discovery.shtmlhttp://whc.unesco.org/en/tentativelists/5707/

Permissions in this forum:
You cannot reply to topics in this forum