நாம் எதற்காக தினமும் பரிசுத்த வேதாகமம் வாசிக்க வேண்டும்
Thu Dec 17, 2015 7:58 am
நாம் எதற்காக தினமும் பரிசுத்த வேதாகமம் வாசிக்க வேண்டும் என்பது இன்றைய பல கிறிஸ்துவர்களுக்கும் தெரியாது! ஆனால்? வீட்டில் உள்ளவர்கள் மற்றும் சபை போதகர் கேட்டால் என்ன செய்வது என்று சிலர் ஏனோ, தானோ என்று வாசித்துவிட்டு செல்கிறார்கள்...
இன்று பல கிறிஸ்துவர்களின் படுக்கையில் தலையணைக்கு அடியில் பல நாட்களாக, வாரங்களாக தூங்கிக் கொண்டிருக்கிறது. தலையணைக்கு கீழே பைபிள் வைத்து படுத்தால், இரவில் பேய்கள், அசுத்த ஆவிகள், கெட்ட கனவுகள் – இதெல்லாம் வராது என்று சிலர் இதற்கு விளக்கமும் தருகிறார்கள்
இதெல்லாம் நம் மனதில் தோன்றும் சில வெற்று நம்பிக்கைகள், அவ்வளவுதான். பைபிளை தலையணைக்கு அடியில் வைத்தால், பேய்கள் வருவதை தடுக்க முடியாது. ஆனால் தலைக்குள் (மனதில் வசனங்களை பதித்தால்) வைத்தால், நம்மை எதிர்த்து வரும் பேய்களை ஜெயிக்க முடியும், இது தொடர்பாக நான் ஒரு புத்தகத்தில் படித்த சம்பவம் ஒன்றை கூற விரும்புகிறேன்....
இந்தியாவின் பழம்பெரும் கிறிஸ்துவ சுவிஷேசகரான சாது சுந்தர் சிங் ஒரு முறை ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே ஒரு மந்திரவாதியும் பயணித்தார்.சாதுவை பார்த்த மந்திரவாதிக்கு, அவர் யார் என்பது புரிந்துவிட்டது. எனவே சாதுவின் உள்ளே உள்ள நல்ல ஆவியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்து மனதிலேயே சில மந்திரங்களை கூறி பார்த்தார். சாதுக்கு எதுவும் பலிக்கவில்லை.
வெறுத்துப் போன மந்திரவாதி, சாதுவிடம் பேச்சு கொடுத்தார். பேச்சுக்கு இடையே தனது மந்திர சக்திகள் தோல்வியடைந்ததாக கூறி, அதற்காக சாதுவை பரிசோதிக்க அனுமதி கேட்டார். கோபமடையாத சாது ஒப்புக் கொண்டார். மந்திரவாதி, சாதுவின் உடைகளை சோதித்து பார்த்து, ஒரு புதிய ஏற்பாட்டை அவரது பாக்கெட்டில் இருந்து எடுத்தார். தனது மந்திர சக்திகள் தோல்வியடைய இதுவே காரணம் என்றார் மந்திரவாதி.
சாது முகம் மலர்ந்து சிரித்தார். மந்திரவாதியோ, தான் திரும்பவும் மந்திரம் செய்து சாதுவை தோல்வியடைய செய்ய போவதாக சவால் விட்டார். சாதுவும் ஏற்றுக் கொண்டார். மந்திரம் செய்து நேரம் கடந்ததே தவிர, சாதுவிற்கு ஒன்றும் பலிக்கவில்லை.
கடைசியாக தன் தோல்வியை ஒப்புக் கொண்ட மந்திரவாதி, அதற்கான காரணத்தை கேட்டார்.அதற்கு சாது, நீங்கள் என் உடையில் இருந்த வேதத்தை வெளியே எடுக்கலாம். ஆனால் எனது மனதில் பதிந்துள்ள வேத வசனத்தை எடுக்க முடியாது அல்லவா! இதுவே உங்கள் மந்திரங்கள் தோல்வியடைய காரணம் என்று கூறி, தனது ஸ்டேஷன் வந்ததும் இறங்கி சென்றார்.
சாது சுந்தர் சிங் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் வேதம் நம் இருதயத்தில் இருந்தால், எந்த பிசாசின் வல்லமையும் நம்மை மேற்கொள்ள முடியாது.
வேத வசனங்களை நாம் நேசித்து படிக்கும் போது, அது நம்மை தீய வழிகளில் இருந்து பாதுகாக்கும், தேவ சித்தமுள்ள பாதைக்கு நம்மை வழி நடத்தும். எனவே இன்று முதல் தினமும் பைபிளை வாசிப்போம், தியானிப்போம். ஆவிக்குரிய வீரர்களாக எழும்பி பிரகாசிப்போம்...
-உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.-
சங்கீதம் 119:105....
COURTESY:இயேசு எங்கள் நண்பர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum