தத்துப் பிள்ளை
Mon Jun 15, 2015 3:29 pm
பொதுவாக குழந்தை இல்லாதோர் தங்கள் முயற்சிகள் பலனளிக்காமல், வெகுவாய் அயர்ச்சியடைந்த பின்பு தான் சுவிகாரமாகக் குழந்தைகளைத் தத்தெடுப்பார்கள். ஆனால் தேவனோ, தனக்கு ஒரு சொந்த - மூத்த பிள்ளையாகிய இயேசு இருந்தபோதே, பாவிகளாகிய நம்மையும் தன் மிகுந்த அன்பினால் புத்திரராக்க விருப்பம் கொண்டு, தன் குடும்பத்தில் இணைக்க விரும்பினார். அந்த அன்பு மிகப்பெரிது! அது எவ்வளவென்றால், தம் இளைய குமாரராகிய நம்மைத் தன் குடும்பத்தில் இணையத் தகுதிப்படுத்தத், தன் மூத்த குமாரனாகிய ஒரே பிள்ளையை பலியிட்ட அளவுக்கு!
வேறு வழியில்லாமல் செய்த வேலையல்ல இது. அவர் கிருபை பொருந்தினவரானபடியால் மூவரான அந்த ஏகர், தன் தற்சொரூபமான கிறிஸ்துவை உலகத்தோற்றதிற்கு முன்பே அடிக்கப்படத் தீர்மானித்து, அதன் மூலமாய் நம்மைத் தம் பிள்ளையாக்கச் சித்தம் கொண்டிருந்தார்.
தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே அவர் செய்த எச்செயலின் மகத்துவத்தை என்னென்பது?
எபேசியர் 1-5,6 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.
சகோ.பென்னி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum