பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை வகுப்பில் முதல் மாணவனாக
Thu May 05, 2016 11:48 am
பொதுவாகவே பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை வகுப்பில் முதல் மாணவனாக வரவேண்டும், தனித்துவம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்பதுவே ஆசை.
இதற்காக எப்போதும் படி, படிஎன்று சொல்லிக் கொண்டே இருக்க கூடாது, அது அவர்களுக்கு வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
இதற்கு பதிலாக அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது அவசியம்.
இதற்காக எப்போதும் படி, படிஎன்று சொல்லிக் கொண்டே இருக்க கூடாது, அது அவர்களுக்கு வெறுப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
இதற்கு பதிலாக அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது அவசியம்.
- ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என பட்டியலிட்டு, அதற்கேற்றாற் போல் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் தொலைக்காட்சி பார்க்க கூடாது, அப்படி செய்தால் அவர்களுக்கு எதிர்மறையான எண்ணமே ஏற்படும்.
- ஒருவேளை சரியாக படிக்கவில்லை என்றால் அதற்காக அவர்களை அடிக்ககூடாது, மதிப்பெண் குறைந்ததற்கு என்ன காரணம் என அலசி காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டும்.
- பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆசிரியரை அடிக்கடி சந்திக்க வேண்டும், வகுப்பில் பாடங்களை கவனிக்கிறானா? மற்ற பிள்ளைகளுடன் எப்படி பழகுகின்றான்? என தெரிந்து கொள்ள வேண்டும்.
- அவ்வப்போது ஓய்வு நேரங்களில் விளையாட அனுமதிக்கலாம்,வார இறுதிநாட்களில் பெற்றோர் ஜாலியாக பிக்னிக் கூட்டி செல்லலாம், இப்படி செய்தால் பிள்ளைகளுக்கு உங்களின் மீதான பாசம் அதிகரிக்கும்.
- உங்கள் பிள்ளைகளுடன் ஒரு நண்பனை போன்று நீங்கள் பழகினாலே போதும், உங்கள் எண்ணம் போன்று அவனை சிறந்த மாணவனாக சமூகத்தில் பெரிய ஆளாக உருவாக்கலாம்!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum