யோசனை தூரம்’
Wed May 13, 2015 12:16 pm
ஒளியின் வேகத்தை, ஒரு விநாடிக்கு 1,86,282 மைல்கள் என்று ஐரோப்பிய விஞ்ஞானி ரோமர் கணக்கிட்டுச் சொன்ன ஆண்டு 1676. அதை மிக்கல்சனும் மார்லியும் உறுதிப்படுத்திய ஆண்டு 1887. இது அனைவரும் அறிந்த அறிவியல். ஆனால், '2202 யோசனை தூரத்தை, அரை விநாடியில் கடக்கும் சூரியனை வணங்குகிறோம்’ எனப் போகிறபோக்கில் சயனாச்சாரியா என்கிற இந்திய அறிஞர் சொன்னது பலருக்கும் தெரியாத செய்தி.
கரும்பலகைப் பள்ளிக்கூடமும் கால்குலேட்டரும்கூட இல்லாத 14-ம் நூற்றாண்டில், 'யோசனை தூரம்’ எனும் அந்தக் கால கணக்கை வைத்து ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் வரும் மதிப்பு, விநாடிக்கு 1,85,016 மைல்கள் என்ற, ஏறத்தாழ அறிவியலின் அதே துல்லிய விவரம்தான்.
பேராசிரியர் இரா.சிவராமன் எழுதிய 'பை கணித மன்றம்’ வெளியிட்டுள்ள 'இணையில்லா இந்திய அறிவியல்’ எனும் புத்தகத்தில் இதுபோன்ற ஏராளமான முன்னோடிச் செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. 'பித்தகோரஸ் தியரி முதல் துத்தநாகம் பிரித்தெடுக்கும் உத்தி வரையில் அறிவியலின் மிகச் சவாலான விஷயங்களை முதலில் சொன்னவர்கள் வாழ்ந்த பூமி இது!’ என்கிறது அந்த நூல்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum