மனதின் தூரம்
Sat Jul 04, 2015 9:06 pm
முனிவர் ஒருவர் தனது சீடர்களுடன் நதிக்கரையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது சீடர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் அங்கு வந்து சீடரை கடுங்கோபத்துடன் திட்டினார். பதிலுக்கு அந்த சீடரும் தனது குடும்ப உறுப்பினரை உரக்க திட்டிக்கொண்டிருந்தார். இதனை முனிவரும் மற்ற சீடர்களும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
உடனே முனிவர் மற்ற சீடர்களிடம், “கோபம் வரும்பொழுது ஏன் வார்த்தைகள் கடுமையாகவும் உரக்கவும் வருகின்றன?'' என்று கேட்டார்.
ஒரு சீடர், “பொறுமையை இழக்கும்போது உரக்கக் கத்தி தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்” என்றார். உடனே முனிவர், “அதற்காக அருகில் இருக்கும் ஒருவரிடம் எதற்காக கத்த வேண்டும். மெதுவாக கூறினாலே கேட்குமே?” என்றார். இதுபோல பல்வேறு விடைகளை சீடர்கள் கூறினாலும், முனிவரை எந்த விடையும் திருப்திப்படுத்தவில்லை.
கடைசியாக முனிவர், “இரு நபர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களுக்கிடையேயான மனதின் தூரம் அதிகமாகின்றது. அந்த தூரத்தை குறைக்க பலமாகக் கத்தி கோபத்தினை வெளிப்படுத்துகின்றனர். எவ்வளவு கோபமாக இருக்கிறார்களோ, அவ்வளவு தூரம் இடைவெளி அதிகமாகிறது அவ்வளவு தூரம் அவர்கள் கத்தி பேச வேண்டியிருக்கிறது.
இதுவே அந்த இருவர் அன்புடன் இருக்கும் சமயத்தில், பேசவே தேவையில்லாமல் போகிறது..
ஆகையால், கோபம் வரும்போது உங்களது இதயமோ அல்லது மனதோ தூரமாக விட்டு விடாதீர்கள்'' என்றார்..

Re: மனதின் தூரம்
Sat Jul 04, 2015 9:28 pm
ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்த அமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்..
அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம், இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை. எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலையே பறந்துவிட்டு சென்று விட்டன..
நீதி:
நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்த
அளவில் சக்தி உண்டு. நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum