அன்னையர் தின - கருத்துக்கள்
Thu May 07, 2015 5:43 am
இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்:
1. அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது நமக்கு
அம்மா (தாய்) வீடுதான் !
2. அடுப்படியே அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !
3. காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !
4. டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
'சமைக்க முடியவில்லையே'
என்கிற ஒரே கவலை !
5. 'அம்மா தாயே'
என்று முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !
6. எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற அந்த ஒரு பொய்யைத்தவிர !
7. வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள் பாசத்தை திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !
8. பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன.
காரணம், எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு அப்பாவிடம் திட்டும் வாங்கிக்கொள்வாள் !
9. வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !
10. அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான்,
" எம்புள்ள
பசி தாங்காது! "
(Advance) அன்னையர் தின வாழ்த்துக்கள்...

Re: அன்னையர் தின - கருத்துக்கள்
Mon May 11, 2015 6:47 am
மனைவி எனும் பெண்ணுக்குள்,
ஒரு தாய்,
ஒரு பர்சனல் செக்ரடரி,
ஒரு குக்,
ஒரு வேலைக்காரி,
ஒரு படுக்கைத் துணை,
ஒரு நிர்வாகி,
ஒரு கணக்குப்பிள்ளை,
ஒரு நீதிமன்றம்,
ஒரு ஹாஸ்டல்,
ஒரு சினிமா தியேட்டர்,
ஒரு மினி பார்,
ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,
இத்தனையும் அடங்கி இருக்கிறது..
- எழுத்தாளர் அனுராதா ரமணன்
ஒரு தாய்,
ஒரு பர்சனல் செக்ரடரி,
ஒரு குக்,
ஒரு வேலைக்காரி,
ஒரு படுக்கைத் துணை,
ஒரு நிர்வாகி,
ஒரு கணக்குப்பிள்ளை,
ஒரு நீதிமன்றம்,
ஒரு ஹாஸ்டல்,
ஒரு சினிமா தியேட்டர்,
ஒரு மினி பார்,
ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,
இத்தனையும் அடங்கி இருக்கிறது..
- எழுத்தாளர் அனுராதா ரமணன்
Re: அன்னையர் தின - கருத்துக்கள்
Mon May 11, 2015 7:20 am
மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை
பொறுக்க முடியும்.
ஆனாலும், பிரசவத்தின்
போது நம் தாய் 57 டெல்
யூனிட் வலியை நமக்காக தாங்கிகொள்கிறார்,
இது,
ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படும் வலிக்கு சமம்.
"தாய்மைக்கு ஈடு இணை
உலகில் ஏதுமில்லை"...
"தாய்மையை உணர்வோம்"...
"பெண்மையை போற்றுவோம்"
பொறுக்க முடியும்.
ஆனாலும், பிரசவத்தின்
போது நம் தாய் 57 டெல்
யூனிட் வலியை நமக்காக தாங்கிகொள்கிறார்,
இது,
ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படும் வலிக்கு சமம்.
"தாய்மைக்கு ஈடு இணை
உலகில் ஏதுமில்லை"...
"தாய்மையை உணர்வோம்"...
"பெண்மையை போற்றுவோம்"
Re: அன்னையர் தின - கருத்துக்கள்
Mon May 11, 2015 7:30 am
1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.
2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.
4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.
5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.
7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு அசைக்கவே முடியாது.
8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.
9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.
10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்; ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.
அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது —-ஜெர்மனி
தாய் வார்த்தை கேளா பிள்ளை நாய் வாய் சேவை——தமிழ் நாடு
பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும் —–இந்தியா
தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்? ——— இந்தியா
ஒரு தாய் பத்து குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம் பத்து குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது———சீனா
குதிரைகளும் மனிதர்களும் தாய் வழியைக் கொள்வார்கள்———–இந்தியா
மனைவி கணவனின் கையிருப்பைப் பார்ப்பாள் அம்மா வயிற்றைப்பார்ப்பாள்————இந்தியா
குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய்——–தாக்கரே
தாய் எப்படி வளர்கிறாளோ அப்படி உருவாகிறார்கள் மனிதர்கள்——-இங்கிலாந்து
தாயில்லாத வீடு வீடாகுமா? ———இங்கிலாந்து
நடனத்தின் இசை நடுவிலும் தாய்க்கு தன் குழந்தைகளின் அழுகுரலே கேட்கும்—–ஸ்பெயின்download (2)
தாய்லே கெட்டவள் இல்லை சாவிலே நல்லதுமில்லை———–யூதர்
எந்தத் தாயும் தன் மகனை குழந்தைகளை விகாரமானவர்களாகக் கருதுவதில்லை.————— ஸ்பெயின்
அன்பின் உற்பத்தி ஸ்தானம் அன்னை——ஆப்பிரிக்கா

Tue May 12, 2015 7:20 am
நண்பா...! இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்றமனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்
ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , "போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க, அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .அதில்
அன்பு மகனுக்கு,
உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை.
இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை.
நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. ஆகவே
இப்போதும் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை
'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...! என் 'நண்பன்'...!
நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். '
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum