சிக்கன் காண்டவிச்
Wed Mar 06, 2013 12:24 pm
சிக்கனில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இதில் உடலுக்கு
வேண்டிய நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. இதுவரை இத்தகைய சிக்கனை வைத்து
கிரேவி, குழம்பு, வறுவல், 65 என்று தான் செய்து சாப்பிட்டிருப்போம்.
சிலருக்கு சிக்கனை வைத்து சாண்ட்விச் செய்தால் மிகவும் பிடிக்கும்.
ஆனால்
அதனை கடைகளில் மட்டும் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். தற்போது அதனை
வீட்டிலேயே ஈஸியாக சுவையான ருசியில் செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி
செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பிரட் - 6 துண்டுகள்
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (வேக வைத்து, கொத்தியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - தேவையான அளவு
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி வெங்காயம்
சேர்த்து வதக்கி, கொத்திய சிக்கன், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
பின்னர் பிரட் துண்டுகளை
எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி, அதன்மேல் தக்காளி சாஸ்
தடவி, பின் ஒரு பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, வெண்ணெய் தடவிய மற்றொரு
பிரட்டை வைத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சிக்கன் சாண்ட்விச் ரெடி!!!
நன்றி: tamil.boldsky

Permissions in this forum:
You cannot reply to topics in this forum