மால்குடி மட்டன் பிரியாணி "
Mon Mar 23, 2015 10:32 pm
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி, மட்டன், பட்டை, லவங்கம், கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி-பூண்டு விழுது, புதினா, தயிர், வெங்காயம், தக்காளி, எலுமிச்சை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி, எண்ணெய், நெய்.
----------------------------------------------------------------------------------
செய்முறை :
1. முதலில் சுத்தம் செய்த மட்டனை, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, புதினா, தயிர், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவைக்கவும்.
2. வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, எலுமிச்சை பழம், பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. குக்கரில் ஊறவைத்த மட்டனை அடுப்பில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
4. மற்றொரு குக்கரில் எண்ணெய், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு இதோடு இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக புதினா மற்றும் வேகவைத்த மட்டன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
5. நன்கு கொதி வந்தவுடன் அரிசி சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்தவுடன் அதோடு கொத்தமல்லி, சிறிதளவு நெய், சிறிதளவு கரம் மசாலா தூள் சேர்த்து 10-15 நிமிடம் வரை குக்கரை மூடவும்.
இப்பொழுது சுவையான மால்குடி மட்டன் பிரியாணி தயார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum