“ மட்டன் கோங்குரா ”
Fri Jul 10, 2015 6:38 pm
தேவையான பொருட்கள் :
=========================================
மட்டன், பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், எலுமிச்சை பழம், கருவேப்பிலை, கொத்தமல்லி, புளிச்சக்கீரை, மஞ்சள் தூள், தனியா தூள், கரம்மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எண்ணெய் மற்றும் உப்பு.
செய்முறை :
===============================
1. பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், எலுமிச்சை பழம், கொத்தமல்லி, புளிச்சக்கீரையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. குக்கரில் தயிர் இட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட, மஞ்சள் தூள், உப்பு, சிறிது எண்ணெய் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். பின் அதில் மட்டனை சேர்த்து நன்றாக கலக்கி தேவையான அளவு தண்ணிர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வதக்கவும். வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
பின் புளிச்சக்கீரையை சேர்த்து நன்றாக வதங்கிய பின் மட்டனை அதில் சேர்த்து நன்றாக கலக்கி சீரகத்தூள், தனியா தூள், கரம்மசாலா, கொத்த மல்லி, எலுமிச்சை பழத்தை பிளிந்து நன்றாக கலக்கவும்.
4. பின் குக்கரில் மட்டனை வேக வைத்த தண்ணிரை ஊற்றி நன்றாக கலக்கி சிறிது நேரம் வேக வைக்கவும்.
இப்பொழுது சுவையான மட்டன் கோங்குரா ரெடி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum