மட்டன் மசாலா வடை
Mon Sep 12, 2016 8:47 am
மட்டன் மசாலா வடை
தேவையான பொருள்கள்:
கடலைப்பருப்பு - 100 கிராம்
மட்டன் கொத்துக்கறி - 75 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
சோம்பு - 2 கிராம்
மிளகு - 2 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 300 மில்லி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
1.கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2.வடிகட்டியில் மட்டன் கொத்துக்கறியைச் சேர்த்து குழாய் தண்ணீரில் காட்டி, கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
3.அடுப்பில் வாணலியை வைத்து கொத்துக்கறி, தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி அதிக தீயில் நீர் வற்றும் வரை வேக விட்டு, கொத்துக்கறியை ஆற விடவும்.
4.கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை இறுத்து, பிளண்டரில் சேர்த்து, இத்துடன் சோம்பு, மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.
5. வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித்தழை, வெந்த கொத்துக்கறி ஆகியவற்றை கடலைப்பருப்பு மாவில் சேர்த்து, கைகளால் பிசையவும்.
6.உள்ளங்கையில் தண்ணீர்/எண்ணெய் தடவி ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டையாகத் தட்டவும்.
7.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், வடையை இட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து, கிச்சன் டவலில் வைத்து அதிகப்படியான எண்ணெய் ஈர்த்த பிறகு பரிமாறவும்.
குறிப்பு:
1.ஒருவேளை சரியாக கடலைப்பருப்பில் தண்ணீரை இறுக்காமல் விட்டு, மாவு அரைக்கும் போது தண்ணீரை அதிகமாக விட்டுவிட்டால் மாவானது வடை பதத்துக்கு தட்டையாக வராது.
2.சிறிது மைதாவை வடைமாவில் சேர்த்துக் கலந்து பிசைந்து கொண்டால் வடை தட்ட முடியும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum