கோதுமை மா அல்லது மைதா மா
Sun Mar 22, 2015 10:09 pm
கோதுமை மா அல்லது மைதா மாவை எடுத்து அதனுடன் சுடுநீரைக் கலக்கும் போது, காகிதங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டக் கூடிய பசை (கோந்து) போன்ற ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இந்தப் பசையைப் பூசியபின், சினிமாப் போஸ்டர்களைச் சுவரில் ஒட்டினால், கிழிக்கவே முடியாதபடி அது ஒட்டியிருக்கும். ஆனால் அதே மாவை அதே சுடுநீருடன் கலந்தோ, அல்லது வேறு விதத்தில் சூடுபடுத்தியோ நாம் உணவாக உண்கின்றோம்.
இந்த 'மா'க்களில் 'குளூடேன்' (Gluten) என்னும் பதார்த்தம் உண்டு. மாவுக்கு ஒட்ட வைக்கும் தண்மையைக் கொடுப்பது இந்தக் குளூடேன்தான். இந்தக் குளூடேன் சம்மந்தமாக மிக முக்கியமான ஒரு தகவல் உண்டு. அதைப் பற்றிச் சொல்லதான் இந்தப் பதிவு.
சமீபத்தில் மிகவும் ஆச்சரியமானதும், ஆபத்தானதும் முடிவு ஒன்றுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கின்றனர். நமக்குத் தோன்றும் பெரும்பாண்மையான நோய்களுக்கு இந்தக் குளூடேனே காரணமாக இருக்கின்றது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக 'நீரிழிவு நோய்' (Diabetes Type 1), 'தண்டுவட மரப்பு நோய்' (Multiple sclerosis), 'தோல் அழற்சி' (Psoriasis), 'முடக்குவாதம்' (Rheumatoid arthritis) போன்ற நோய்கள் உருவாக இந்த குளூடேனே காரணம் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஒவ்வாமை போன்று இன்னும் பல நோய்களுக்கும் இந்தக் குளூடேனே காரணமாக இருக்கின்றது என்கிறார்கள். இதுபற்றிய ஆராய்ச்சி மிகவும் முன்முனைப்புடன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் தினமும் படிப்பது போன்று, அதைத் தின்றால் 'கான்சர்' வரலாம், இதைப் பயன்படுத்தினால் கான்சர் வரலாம் என்பது போன்ற புள்ளிவிபர முடிவல்ல இது. முழுமையான ஆராய்ச்சிகளின் பின்னர் எடுக்கப்பட்ட முடிந்த முடிவு இது.
ஐரோப்பிய நாடுகளிலெல்லாம 'குளூடேன் இல்லா' (Gluten free) உணவுப் பொருட்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிட்டன. பல நோய்கள்: நமக்கு ஏன் வருகின்றன என்று தெரியாமல் தவித்திருந்த மருத்துவ உலகில், இந்த குளூடேன்தான் அந்த நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்னும் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
பலவிதமான தானியவகைகளில் இந்தக் குளூடேன் இருந்தாலும், அரிசியில் இல்லாதது கொஞ்சம் நிம்மதியையே நமக்கு ஏற்படுத்துகிறது. இந்த விசயத்தில் அரிசி உணவு உண்ணும் நாம் கொடுத்து வைத்தவர்கள். மாப்பொருட்களால் உருவாகும் உணவுவகைகளை பெரும்பாலும் தவிர்க்கப்பாருங்கள். இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு இன்னும் ஏற்படுத்தப்படவில்லையென்றாலும், விரைவில் அவை வெளிவரலாம்.
"மாப்பொருட்கள் இல்லாமல் எந்த உணவை நாம் உண்பது?" என்ற கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டால், 'அதற்கான பதில் என்னிடம் இல்லை' என்பதே உண்மை.
- Raj Siv
Permissions in this forum:
You cannot reply to topics in this forum