படத்தில் உள்ள தவறு என்ன?
Thu Feb 19, 2015 6:11 pm
இந்தப் படத்தை சாதாரண மக்கள் பார்த்தால் இதில் உள்ள தவறை காண இயலாது. இது ஒரு தத்துவ படம் - கருத்துப்படம்... அருமை என பாராட்டுவார்கள்.
ஆனால், ஆவிக்குரியவர்கள் இப்படத்தைக் காணும்போது இதில் உள்ள வித்தியாசத்தை சொல்வார்கள். நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்... வசன ஆதாரத்தோடு...
Re: படத்தில் உள்ள தவறு என்ன?
Tue Mar 24, 2015 2:12 am
இதற்கு பதில் இதுதான்:
மேலே கண்ட படங்களில் உள்ள மனித எலும்புக்கூட்டில் என்ன வித்தியாசம் என்றால்...
பரிசுத்தாவியின் அபிஷேகம் இல்லை. இரட்சிப்பின் அனுபவத்தில் உள்ள மனிதனின் எலும்புகளில் கடைசி நாட்களில் மீட்கப்படுவதற்கான பரிசுத்தாவியின் அபிஷேகம் முத்திரையாக கொடுக்கப்பட்டுள்ளது. இரட்சிப்புப் பெறாத எலும்புகளில் மீட்பிற்கான அபிஷேகம் இராது.
பொதுவாக, உலக மனிதர்களின் பார்வையில் மனிதத்துவம், மனிதாபிமானம் என்ற கண்ணோட்டத்தில் இவைகள் பார்க்கப்படும்போது - இது சமத்துவம் என்ற கண்ணோட்டத்திலேயே காணப்படும்.
ஆவிக்குரியவர்களின் கண்ணோட்டத்தில் காணும்போது - அபிஷேகத்தை காண்கிறோம்.
ஆதார வசனங்கள்:
* எபேசியர்: 4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய ஆவியை..." என்று எழுதப்பட்டுள்ளது.
* எசேக்கியேல்: 37 ஆம் அதிகாரம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். உலர்ந்த எலும்புகள் கர்த்தருடைய ஆவியினால் உயிர் பெறுவதை காணலாம்.
* 2இராஜாக்கள்: 13:20,21 - தீர்க்கதரிசி எலிசாவின் எலும்புகளில் விழுந்த மரித்த சரீரம் உயிர்பெற்று கால்களை ஊன்றி நின்றது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum