ஏன் இவைகள் தவறு?
Tue Dec 15, 2015 11:48 pm
முடிந்தவரை வேதாகம வசனங்களுக்கு தெளிவான வெளிப்படையான சொற்களின்படி இருக்கும் அர்த்தத்தை எடுங்கள்
சொல்லப்பட்ட சொற்கள் தெளிவான அர்த்தத்தைச் சொன்னால், வேறெந்த அர்த்தத்தையும் தேட வேண்டாம், இல்லையேல் அது முற்றிலும் அர்த்தமற்றதாகி விடும்.
மறைபொருள் ஒன்றையும் சொல்லாதிருக்குமானால், அந்த வசனத்தை நேரடியான தெளிவான அர்த்தத்தில் எடுப்பது நல்லது. உதாரணமாக நல்ல சமாரியன் உவமையில் வரும் இரண்டு காசுகள் ஒரு சில பிரசங்கியார் சொல்வது போல, அது இரண்டு காசுகள் அல்ல என்றும், அதற்கு வேறு ஆவிக்குரிய அர்த்தங்கள் உள்ளன என்றும், அவை பொதுவாக புதிய ஏற்பாட்டையும், பழைய ஏற்பாட்டையும் குறிக்கின்றன என்றும் போதிக்கிறார்கள். மேலும் அந்த உவமையில் வரக்கூடிய சத்திரம் சபையைக் குறிக்கிறது என்றும் ஆதாரமில்லாத தங்கள் சொந்தக் கருத்துக்களைத் தேடிக்கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட விளக்கங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் அவை நம்மை தவறான சத்தியத்திற்கு வழிநடத்தும் என்பதில் ஐயமில்லை.
ஏன் இவைகள் தவறு?
இப்படிப்பட்ட உபதேசங்களை ஆங்கிலத்தில் அலிகோரிக்கல் (allegorical) உபதேசம் என்பர். இந்த மாதிரியான உபதேசங்கள் கிமு 6ம் நூற்றாண்டில் வாழ்ந்துவந்த கிரேக்க தத்துவ ஞானிகளால் உண்டானது. விளக்கமாய் சொல்லவேண்டுமானால் கிரேக்க வேதங்களான ஹோமேர், ஒடிசி போன்ற, பல நூல்களில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் நம்புவதற்கு சாத்தியமில்லாமல் இருந்தது. அதாவது 30 தலைகள் உள்ள கடவுள், பல கைகள் கால்கள் உள்ள தேவதைகள்,
மேலும் இவர்களிடம் உள்ள தவறான உடலுறவு கதைகள், இவைகளெல்லாம் நம்புவதற்கும் வாசிப்பதற்கும் சாத்தியக்கூறாக இல்லை. ஆக கிரேக்க தத்துவஞானிகள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர் அதுதான் அலிகோரிக்கல் விளக்கம்.
இவர்கள் 30 தலை உள்ள தெயவம் என்றால் அது 30 தலைகளைக் குறிக்கவில்லை என்றும், 30 விதமான குணாதிசயங்களைக் குறிக்கிறது என்றும் விளக்கம் தந்தனர். இந்தமாதிரியான விளக்கங்கள் கேட்பதற்கும் நம்புவதற்கும் ஏதுவாக இருந்தது. ஆபாசமான வார்த்தைகள் இதன் மூலம் ஆபாசமில்லாத விளக்கங்களாக தரப்பட்டன, தெய்வங்களின் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் கூட ஆவிக்குரிய விளக்கம் தரப்பட்டன.
பின்னாளில் வந்த யூதர்களும் இந்த முறையில் வேதாகமத்தை விளக்கினதை வரலாற்றில் பார்க்கமுடியும். சபையிலும் இந்த போதனை, இன்றைக்கும் தலைவிரித்தாடுகிறதை காணமுடியும். “ஓரிஹன்”(Origen, churchfather) என்ற சபை பிதாவானவர் அலிகோரிக்கல் உபதேசத்தின் தந்தை என்று வருணிக்கப்பட்டார் (father of allegorical).
இயேசு கிறிஸ்து கழுதையில் ஏறினார் அல்லவா அந்த கழுதைக்குக்கூட ஒரு ஆவிக்குரிய அர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர். கழுதையின் நான்கு கால்கள் நான்கு சுவிசேஷங்கள் என்றும், இரண்டு கண்கள் பழையஏற்பாடு, புதியஏற்பாடு என்றும் கூட போதித்தனர். இதைத்தான் இன்றைய பாஸ்டர் மார்கள் ஒவ்வொரு வசனத்திற்கும், இரண்டு மூன்றிற்க்கு மேற்பட்ட ஆவிக்குரிய அர்த்தம் உண்டு என்று போதிக்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்ட உபதேசம் கள்ள உபதேசத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
இதை ஒரு உதாரணத்தோடு விளக்க விரும்புகிறேன்......
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் செய்தபோது “உன் சந்ததி கடற்கரை மணலைபோலவும், வானத்து நட்சத்திரத்தைப் போலவும் இருக்கும்” என்றார். இதற்கு அர்த்தம் எண்ணமுடியாத அளவில் உன் சந்ததி இருக்கும் என்பதே! ஆனால் யெகோவாசாட்சியினர் மற்றும் வேதமாணாக்கர் என்னும் சபை பிரிவினர் இந்த வசனத்தில் ஆவிக்குரிய அர்த்தம் உண்டு என்று போதிப்பர்.
அதாவது இந்த வசனத்தின் மூலம் தேவன் ஒட்டுமொத்த உலகமக்களுக்கும் “நடக்கப்போகிறதை” அறிவிக்கிறார் என்று சொல்லி, கடற்கரை மணல் என்பது பூமியில் ஒரு ஜாதியையும், வானத்து நட்சத்திரம் என்பது பரலோகத்தில் ஒரு ஜாதியையும் குறிக்கும் என்பர். ஆதலால் பாவம் செய்தவர்கள் பூமியிலே ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து இருப்பர் என்றும், நீதி செய்தவர்கள் ஆண்டாண்டு காலமாக பரலோகத்தில் இருப்பர் என்றும் போதித்து, நரகம் இல்லை என்ற போதனைக்கு இதனை சான்றாக காண்பிப்பதுண்டு.
பார்த்தீர்களா ஆதாரமில்லாத, அதிகாரமில்லாத ஆவிக்குரிய அர்த்தத்தைத் தங்கள் இஷ்டப்படி யார்வேண்டுமானாலும் போதித்துவிட முடியும். ஆகவே இந்த போதனை மிகத் தவறானது என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியம். இன்றைய கள்ள உபதேசங்களுக்கு மூலக்காரணமே அலிகோரிக்கல் உபதேசம் என்றால் அது மிகையாகாது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum