இன்றைய தேவை விசுவாசிகள் ஒவ்வொருவரும் மிஷனரிகளாக மாறவேண்டும்
Sun Feb 01, 2015 11:55 pm
தான் சேர்த்து வைத்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்களால் இரண்டு பைபிள் வாங்கிக் கொடுத்ததுமல்லாமல், பைபிள் பெற்றுக் கொண்டவர்களை தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் நடத்தத் தீர்மானித்திருக்கும் ஜோன்னாவை (வலதுபுறம் நிற்பவர் ) கர்த்தர் ஆசிர்வதிப்பாராக.
இதேபோல தன்னுடைய அண்டைவீட்டாருக்கும், தன்னுடன் பணியாற்றும் , படிக்கும் நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும் ஜெபிப்பதோடு நிறுத்திவிடாமல், கிறிஸ்துவின் மெய் சுவிசேசத்தை சொல்லி அவர்களை தேவராஜ்யத்திற்கு சொந்தக்காரர்களாக நடத்தினாலே போதும் நம் தேச மக்கள் சீக்கிரமாக கிறிஸ்துவுக்கு சொந்தமாகிவிடுவார்கள்.
இதையெல்லாம் செய்யாமல் ஒரு யுத்த சந்ததியை எழுப்பச்சொன்னார். அலங்கார வளைவு வைத்து எழுப்புதல் மாநாடு நடத்தச்சொன்னார். ஜெபகோபுரம் கட்டச்சொன்னார். வருடத்தின் 300 நாட்களும் பூட்டியிருக்கும் தீர்க்கதரிசன மையம் கட்டசொன்னாரு. எல்லாரையும் இரத்தசாட்சியாக சாகடிக்க சிறுபிள்ளைகளை ஆயத்தமாக்கச் சொன்னார் என்று தங்களுடைய மனதில் தோன்றுவதையெல்லாம் கர்த்தர் சொன்னார் என்று பொய் சொல்லி விசுவாசிகளை ஆளாளுக்கு குழப்பினால் இந்தியா எந்தக்காலத்திலும் கிறிஸ்துவுக்கு சொந்தமாகாது. வேண்டுமென்றால் அப்படி இப்படி சொல்லி தங்களுடைய சொத்துக்களை வேண்டுமானால் பெருக்கிக்கொள்ளலாமே தவிர தேவனுடைய ராஜ்யத்தை பெருக்கப்பண்ணமுடியாது.
---------------------
இன்றைய தேவை விசுவாசிகள் ஒவ்வொருவரும் மிஷனரிகளாக மாறவேண்டும். சீஷத்துவமான வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு பிரதிபலிக்கவேண்டும். ஒவ்வொரு வீடும் திருச்சபையாக மாறவேண்டும். இப்படியெதுவும் நடக்காவிட்டால் 120 கோடி உள்ள இந்த மாபெரும் தேசத்தை எந்தக்காலத்திலும் கிறிஸ்துவுக்கு சொந்தமாக்கமுடியாது.
-------------------
#Let_My_People_Think
நன்றி: பால்பி... முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum