'நான்' என்ற அகந்தையை ஒழித்தால்
Wed Jan 28, 2015 7:56 pm
ஞானி ஒருவர் தான் ஞானம் பெற்றதுக்குக் காரணம் ஒரு நாய் தான் எனக் கூறி அதை விளக்கினார்...
ஒரு நாள் குளக்கரை அருகே அமர்ந்திருந்தேன் .ஒரு நாய் தாகத்துடன் நீர் அருந்த வந்தது. வேகமாய் நீர் குடிக்கச் சென்ற நாய் குரைத்துக் கொண்டே சட்டெனப் பின் வாங்கியது.
சிறிது நேரம் இவ்வாறே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்த நாய்,தாகம் அதிகரித்தவுடன் துணிச்சலுடன் தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்தது.
அப்போதுதான் அது உணர்ந்தது, இதுவரை தண்ணீரில் தெரிந்தது தன் பிம்பம்தான் என.அதுவரை நாய் தயங்கியதற்குக் காரணம் அதன் உருவமே.
இதனால் ஞானத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த எனக்கும் விளக்கம் கிடைத்தது.நான் ஞானம் அடையத் தடையாய் இருப்பது, 'நான்' தான் என்பதை உணர்ந்தேன். அந்த 'நான்' என்ற அகந்தையை ஒழித்தபோது ஞானியாகி விட்டேன்.
இப்ப எல்லாம் விலங்குகள் தான் நமக்கு நல்ல விஷயத்தை சொல்லி கொடுக்கின்றது. ஆனால் நாம் தான் பல நேரங்களில் விலங்குகளாக மாறி வருகிறோம்
நீதி: 'நான்' என்ற அகந்தையை ஒழித்தால் நாமும் மனிதர்கள் ஆகலாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum