திரித்துவம் என்ற வார்த்தை
Wed Dec 16, 2015 12:22 am
திரித்துவம் என்ற வார்த்தை வேதத்தில் இல்லை என்பது உண்மை பின்னே ஏன் அந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது....
இதற்கு வேதமே மிக முக்கியக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது....
வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யெகோவா தேவன் பழையஏற்பாட்டில் தன்னைக் குறித்து வெளிப்படுத்துகிறார்...
முதலாவது ஒருவர் தேவனாக இருக்க வேண்டுமென்றால் அவர் ஒரு குறிப்பிட்ட தகுதி உடையவராய் இருக்க வேண்டும், அந்த தகுதி வேறு யாருக்கும் இருக்க கூடாது....
உதாரணத்திற்கு
சர்வவல்லமை, சர்வவியாபி, எல்லாம் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர் இப்படி பல குணாதிசயங்கள் யாருக்கு இருக்கிறதோ அவர் தேவன் என்பது வேதத்தில் இருந்து நாம் காணலாம்.
இந்த குணாதிசயங்கள் தான் தேவனையும், தூதர்களையும், மனிதர்களையும் வித்தியாசப்படுத்தியிருக்கிறது….
தேவனின் இந்த குணாதிசயங்களை அவர் யாருக்கும் கொடுக்க முடியாது அப்படிக் கொடுத்தால் அதை வாங்கியவரும் தேவனாகிவிடுவார், இதைத்தான் பகிர்ந்து கொடுக்கக்கூடிய குணாதிசயம், பகிர்ந்து கொடுக்க முடியாத குணாதிசயம் என்று இரண்டாகப் பிரிப்பார்கள்…. (Communicable attributives non Communicable attributives) தேவனின் தனித்தன்மையான குணாதிசயங்களை அவரால் பகிர முடியாது …
அவரால் பகிரமுடிந்த குணாதிசயங்கள் அன்பு, பொறுமை, இரக்கம், இப்படிப் பல……
இதை அடிப்படையாய் வைத்துப் பார்க்கும் போது பழையஏற்பாட்டில் யெகோவாவுக்கு இந்த குணாதிசயம் பொறுந்துகிறது, அதே குணாதிசயம் பரிசுத்த ஆவிக்கும் பொறுந்துகிறது, புதிய ஏற்பாட்டில் மேசியாவாக வந்த கிறிஸ்துவுக்கும் இந்த குணாதிசயங்கள் பொறுந்துகிறது…..
மேற்கண்ட இந்த சத்தியத்தை நீங்கள் நம்பினால் மாத்திரம் மேலே தொடருங்கள்........ இல்லாவிட்டால் இதை விளக்கினாலும் வீண் ….(இதைத் தான் யெகோவாவின் சாட்சியினர், வேதமாணாக்கர்கள் நம்புவதில்லை…. இதனால் திரித்துவத்திற்கு வேலையில்லை),
வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள 3 நபருக்கு(பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) தேவனின் குணாதிசயங்கள் அப்படியே உள்ளன. அப்படி என்றால் நமக்கு மூன்று தேவனா என்று சந்தேகம் வருகிறது….
இதை எப்படி புரிந்துகொள்வது… ?
ஒரு சிலர் இதை விளக்க பிதாதான் ஆவியானவர் , அதே பிதாதான் மேசியாவாகவும் வந்தார் , என்று இதற்கு அர்த்தம் கொடுத்தார்கள் ..
இதிலும் சிக்கல் இருக்கிறது… மேசியாவாக வந்த இயேசு பிதாவிடம் ஜெபித்தார்… பிதாதான் இயேசுவாக வந்திருந்தால் அவர் எப்படி அவருடனே ஜெபிக்க முடியும் இது தவறு, பரிசுத்த ஆவியும் ஜெபித்ததாகப் பார்க்கிறோம், ஆக் இயேசு பிதாவே ஏன் என்னை கைவிட்டீர் என்று சொன்னது பொய்யாய் போய்விடும் இது ஏமாற்றுவதற்குச் சமம். இயேசு தன்னுடைய ஆவியை பிதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார், அவரே எப்படி அவருடைய ஆவியை ஒப்புக்கொடுக்க முடியும் இந்த கொள்கை(Only Jesus) முற்றிலும் தவறு…….
ஆக இதற்கு ஒரே வழி மூன்று ஆள்தத்துவங்கள் வேதத்தில் தெய்வீக குணாதிசயத்தைப் பெற்றுள்ளன, ஆனால் வேதம் சொல்லுகிறது ஒரே தேவன் என்று …. அதனால் தேவன் ஒருவர்தான் அவரில் மூன்று ஆள்த்துவங்கள் செயல்படுகின்றன என்பதே இதற்கு முடிவாகும்.
இந்த கொள்கைக்கு திரித்துவம் என்று ஒருவர் பெயர் கொடுத்தார், உங்களுக்குப் பிடிக்கவில்லையா வேறு நல்ல பெயர் கொடுத்துக் கொள்ளுங்கள், பெயரே பயன்படுத்தாவிட்டாலும் பிரச்சனையில்லை…. கொள்கை முக்கியம்.... சத்தியமே முக்கியம்
இதில் ஒரு சாரார் பிதாவாகிய யெகோவாவுக்குத்தான் அந்த தனித்தன்மைகள் உண்டு அந்த தனித்துவ குணாதிசயங்கள் இயேசுவுக்கு இல்லை என்றும், பரிசுத்த ஆவிக்கும் இல்லை என்றும் நம்புகிறார்கள்….
ஆக இவர்களைப் பொறுத்தவரை இந்த கொள்கை வீண். இந்த கொள்கையை பரிசீலித்து பார்க்கிறவர்கள், முதலில் திரித்துவம், என்ற வார்த்தை இல்லை என்று பேசாமல் இயேசு தேவனா, பரிசுத்த ஆவி தேவனா என்பதை முதலில் பரிசீலித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஆம், என்றால் அதன் பின் தான் திரித்துவத்தின் முக்கியத்தும் விளங்கும், இல்லை என்றால் இதைக் குறித்து ஒரு பிரச்சனையும் இல்லை,,,, ஆக வெறுமனே திரித்துவத்தைப் பேசாமல் இயேசு தேவனா இல்லையா என்பதில் ஒரு முடிவுக்கு வந்தாலே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்……

Permissions in this forum:
You cannot reply to topics in this forum