வார்த்தை ...
Thu Aug 01, 2013 11:54 pm
****** வார்த்தை ******
ஞானி ஒருவர் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொது ஒரு பெண், தன் குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்று கூறி,அவர் வந்து குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ஞானியும் ஆவலுடன் கிராமத்திற்கு வந்தார். உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது. அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தாள். ஞானி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். கூட்டத்தில் இருந்த ஒருவன் ஆவேசமாக, ''மருந்து கொடுத்து குணமாகாத இந்தக் குழந்தை இவருடைய பிரார்த்தனையால் மட்டும் குணமாகிவிடுமா?'' என்று கேட்டான்.
ஞானி உடனே,'நீ ஒன்றும் தெரியாத முட்டாள்.'என்றார். அவனுக்கு அது அவமானமாகப்போய்விட்டது. கோபத்துடன் ஞானியை அடிக்க விரைந்தான். அப்போது ஞானி அவனிடம் சாந்தமாகச் சொன்னார்,'நான் உன்னை முட்டாள் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு உனக்கு இவ்வளவு கோபம் உண்டாக்கக் கூடிய தன்மை இருந்தால். பிரார்த்தனையின் மூலம் நான் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏன் குணமாக்கக் கூடிய தன்மை இருக்காது?' என்று. அவன் மௌனமாக அங்கிருந்து வெளியேறினான்.
ஆம் நண்பர்களே, உங்கள் வார்த்தையில் வல்லமை உண்டு, அதை பயன்படுத்தி முன்னேறுங்கள்.
“பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.” நீதிமொழிகள் 12:18
நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum