மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் - ஒபாமா
Tue Jan 27, 2015 6:03 pm
... மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்
ஒவ்வொரு தனி நபரும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவு 25 - மதச் சுதந்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. எனவே தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்.
எனவே, ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங் இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும். அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது.
இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாட்டு அரசியல் சாசனங்களிலும் மத உரிமை இடம் பெற்றிருக்கிறது. நானும், மிஷெலும் எங்களுக்கு நாட்டம் உள்ள கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறோம். அதுபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் அவருக்கான மத உரிமை வழங்கப்பட வேண்டும்.
அதேவேளையில், மத நம்பிக்கை என்ற பெயரில் சிலர் வன்முறைகளை, தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்" என்றார்.
மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில இந்து அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, சமஸ்கிருத திணிப்பு மூலம்
இந்துத்வா கொள்கைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியா வந்த ஒபாமா
மதச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum