இதயம் வேண்டும்
Fri Apr 19, 2013 9:41 pm
அந்தக் கடிதம் ஆபிரகாம் லிங்கனை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது.
“அது ஒரு சாதாரணக் கடிதம், அதற்கு
அதிபர் இப்படி அலட்டிக்கொள்ளலாமா?”
அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் உடனே அந்த டாக்டரை அழைத்து வர ஆணையிட்டார்.
அந்த டாக்டர் இதய நோய் பிரிவின் மிக சிறந்த வல்லுநர்.கண்டிப்பானவர், கடமை தவறாதவர் என்ற நல்ல பேரும் பெற்றவர்.
டாக்டருக்கு ஒரே மகிழ்ச்சி.
அமெரிக்க அதிபர் என்னை அழைத்திருக்கிறார். இவ்வாண்டிற்கான கெளரவ விருது ஒரு வேளை எனக்குக் கிடைக்கலாம் என்ற கனவில் மிதந்தார்.
டாக்டர் அரண்மனைக்கு வந்தார். லிங்கன் அவரை மரியாதையுடன் வரவேற்றார். ஆசனத்தில் அமரும்படி சொன்னார்.
“டாக்டர், உங்கள் அம்மா எப்படி இருக்கிறார்கள்?” லிங்கன் கேட்டார்.
“நன்றாக இருக்கிறார்கள் ஐயா” டாக்டர் பதில் மொழிந்தார்.
“நன்றாக இருக்கிறார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் அம்மா
எனக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். நீங்கள் இருக்குமிடமே தெரியாதென்றும்,
விசாரணையே கிடையாதென்றும் மிகுந்த வேதனையோடு எழுதி இருக்கிறார்கள்.”
“நான் மிகவும் வருந்தினேன். உங்கள் தொழிலில் நீங்கள் மிகச் சிறந்தவராக
இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோருக்குக் குறிப்பாக வயதான தாய்க்கு
செய்யும் கடமையிலிருந்து தவறக்கூடாது.”
“இதில் தாங்கள் எந்தச் சாக்குபோக்கும் சொல்லத் தேவையில்லை.இதய நோய் நிபுணராய் இருந்தால் மட்டும் போதாது. இதயம் வேண்டும்.
டாக்டரின் முகம் முழுவதும் அசடு வழிந்தது.”
“உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.”
-நீதிமொழிகள் 23:22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum