தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் Empty மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

Thu Jan 03, 2013 11:52 am
மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால் 483200_336783289778235_286845674_n
புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்,அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில்
இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை
குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறதுவிஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக எலிக்கு செலுத்தி வந்தனர் .
எலி உடலில்/ இருந்த புற்றுநோய்செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.
ஒட்டக பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கபடும் இந்த மருந்து
உடலில் நோய்-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . இது புற்றுநோய் செல்களை
அளித்து-விட்டு புதிய செல்களை உருவாக்குகிறது.
இந்த மருந்தால்
பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே மனிதர்களுக்கும் இந்த-மருந்தை
பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து
இருக்கிறார்கள். அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த\ மருந்தை செலுத்தி
ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்

மருத்துவ குணம் நிறைந்த ஒட்டகப் பால்

நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம். ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.

ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.

ஒட்டகப் பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.

இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக்
கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப்
பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.

தற்போது
ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும்
புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.


வாடிக்கையாளர்களுக்கு ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் தெரிந்திருந்த
போதிலும், நகர்ப்புறங்களில் ஒட்டகப் பால் கிடைப்பதில்லை. தற்போது
ஆர்எம்எஃப்-ன் சராஸ் கடைகளில் இது கிடைக்கிறது.

ஒட்டகப் பாலில்
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய
திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்எம்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக ஒட்டகப் பாலில் ஐஸ் கிரீமைத்
தயாரித்து சந்தையில் வெளிவிட அல் அய்ன் டெய்ரி எனும் நிறுவனம் முடிவு
செய்துள்ளது.

ஒட்டகப் பால், அரேபியப் பகுதிகளில் வசிக்கும்
மக்கள் விரும்பும் முக்கிய உணவுப் பொருளாகும். பசும்பாலை விட ஒட்டகப்
பாலில் சிறிது உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இப்போது அல் அய்ன் டெய்ரி
நிறுவனம் ஒட்டகப் பாலில் இருந்து சுவையான ஐஸ் கிரீமைத் தயார் செய்ய முடிவு
செய்துள்ளது. “இப்போது சந்தையில் இல்லாத ஒரு புது வகையான ஐஸ் கிரீமை
உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பல்வேறு சுவையுடன் கூடிய ஐஸ்
கிரீம்களை உருவாக்கும் முயற்சியில் நீண்ட நாள்களாக ஈடுபட்டு வருகிறோம். இது
இந்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும்’ என்று அந்நிறுவனத்தின் செயல்
இயக்குநர் சயிஃப் அல் தர்மகி தெரிவித்தார்.
இந்த ஐஸ் கிரீம், பசும்பால் கலப்பு இல்லாமல் சுத்தமான ஒட்டகப் பால் மூலம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்க்கரை வியாதிக்கு ஒட்டகப்பால்: ஆய்வு முடிவு!
சர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு
தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர் ரிசர்ச் சென்டரில்
பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில்
இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

எகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை
கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால்
சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி
மருந்து தினசரி உபயோகித்துக் கொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர்
ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை
வியாதி நாளுக்கு நாள் குறைந்து வருவது உறுதியானது. ஒட்டகப்பால் குடிக்காத
மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.

ஒட்டகப்பாலில் இரும்பு,
துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் C யும் அதிக அளவில்
அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய
கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக
அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து
வலுவாகியுள்ளது.
நன்றி: www.inneram.com
தகவல்:இணையத்திலிருந்து
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum