தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? Empty பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா?

Sat Dec 13, 2014 7:41 pm
பொது சிவில் சட்டம் அமலாவது உறுதி: சதானந்த கவுடா தகவல் - விகடனில் வந்த கருத்திற்கு - முகநூலில் வெளியிடப்பட்ட கமெண்ட்ஸ்...


 "அரசியல் சட்டத்தின் 25வது பிரிவு மதநம்பிக்கை, மத பிரசாரம், சுதந்திரமாக தொழில் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், எனவேதான் இது ஒரு முக்கியமான பிரச்னை என்றும், அரசியல் சாசனத்தின் இந்த பிரிவுடன் முரண்படாத வகையில் பொதுசிவில் சட்டத்தின் அம்சங்களை நாம் வகுக்க வேண்டும்" 

- சதானந்த கவுடா, மத்திய அமைச்சர். (குறிப்பு: கவுடா என்பது சாதிப்பெயர்)

என்னை கேட்டால் பகவத் கீதையை இந்துக்களின் புனித நூலாக கூட ஏற்றுக்கொள்ள முடியாது என்றே நான் சொல்வன்.. ( Translation: If you ask me, I will say that we cannot accept Bagavat geetha as even bible of hindu people) 

[[[[[[ பகவத் கீதை சொல்லும் சாதி தரவரிசை கோட்பாடு / Caste rank definition in Bagavat Geetha... 

1) பூசாரி / People those who pray God - Brahman - மேல் ஜாதி 

2) வீரன் / Who have huge physical strength - Kshatriyan - 2nd quality caste/ இரண்டாம் தர ஜாதி 
3) வியாபாரி, மாடு மேய்பவன், விவசாயி / People those who do business , Cattle rearers, Farmers - Vaisiyar - சாணக்கியன் - 3rd quality caste / மூன்றாவது தர ஜாதி 

4) சேவை செய்பவன் / People those who serving the above three caste people, those who working for another person/people/company - Soothiran - இழி குலத்தோன் / Ugly & worst caste 

- பகவத் கீதை / Bahavat Geetha ]]]]]]] 

... இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே, பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? ( Tell me now friends, whether we should recognize Bahavath geetha as National Bible?) 

- Prabakaran K, Admin, Tamilnadu - Politics.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? Empty Re: பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா?

Sat Dec 13, 2014 7:58 pm
கீதை புனித நூல் அல்ல - பூணூல் நூல்! - விடுதலை ஈ பேப்பர் - பகுதியில் வெளியிடப்பட்ட செய்தியின் தொகுப்பு இது: 13.12.2014 சனி.


தமிழர் தலைவர் கருத்துரை
9.30 மணிக்கு முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இன்னும் 15 மணித்துளிகளே உள்ளன. நான் எப்போதுமே கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவன். உங்களின் அனுமதியுடன் மேலும் 15 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறேன்.
கனடாவில் நம்முடைய திருமாவளவன் ஈழத்தமிழர் களிடம் யார் உண்மையான நண்பர்கள் என்பதை எடுத்துச்சொல்லி உள்ளார். விடுதலைப் பேரொளி என்ற சுவராஜ் புனித நூல் என்று கூறினாலும் மோடி மறுக்கவில்லை. அத்வானி பேசும்போது வெள்ளைக்காரனை வெளியேற்றிவிட்டோம். அவனுக்கு முன் வந்த முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர் என்றார்.
இராபர்ட் கிளைவ் வந்தபோது உங்கள் கண்ணன் எங்கே போனான்?  ஒரு அர்ச்சுனன் வேண்டாம். உன் வயிற்றில் கண்ணன் அவதரிக்கவில்லையே ஏன்?
சூத்திரர்கள் போராடிய காரணத்தால் சுதந்திரம் பெற்றோம். இசுரேலிடம் ஏன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்? 7 சக்கரம் குதிரைகள், வில் அம்பு கொடுத்து உபதேசம் செய்ய வேண்டியதுதானே?
47 வருடங்களாக பாகிஸ்தான் இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவருகிறான். கண்ணன் என்ன செய்கிறான்? அப்போதும் அதிகாரம் இருந்த இடத்தில் இருந்தவன் நீதானே?
வெறும் ஆட்சி மாற்றத்துக்காக மற்றவர்கள் எதிர்க்கிறார்கள். சித்தாந்தப்படி கொள்கைப்படி எதிர்ப்பவர்கள் வெளியில் இருக்கிறோம். நம்மை நுழையவிடாமல் தடுப்பதற்கு தனியார் மயம். கங்கையை சுத்தம் செய்ய ஆயிரம் கோடி, இந்திய நதிகளை இணைக்க 100 கோடி.  ரூபாயாம்! கங்கை யாரால் தூய்மை கெடுகிறது? பண்டாரங்கள் ஆண்டால் சங்குதான்.
10 பேரோடு கங்கையில் படகில் சென்றோம். அப்போது படகில்லாமல் கட்டப்பட்டு மிதந்து சென்ற சிலவற்றைக் கண்டோம், என்ன என்று கேட்டோம். கங்கையில் வீசப்பட்ட பிணம் என்றார்கள். கங்கோத்திரியிலிருந்து கங்கையின் பாதைகளில் பிணத்தைக் கொளுத்தாதே என்று சொல்லிப்பார். தொகாடியா சூலத்தை எடுத்துக்கொண்டு வருவார். மனித மலம் அள்ளும் தொழிலில் பிறவி பேதம். உச்ச ஜாதியினர் அந்தப் பணியை செய்யுங்கள். சமஸ்கிருதம் பிராமணர்கள் மட்டும் படிக்கட்டும். மருத்துவம் படிக்கக்கூடாது. தேவ பாஷை நீ படி!
எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. நேரம் கடந்து விட்டது புல்லர்களை வீழ்த்த. நம்மை அடிமை யாக்கும் தத்துவம் பகவத்கீதை!
விஞ்ஞானத்தில் மனித இனம் முன்னேறுகிறது. நவீன முலாம் பூசி அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். முன்னோர்களைப்போல இப்போது நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. புனிதப்போரில் ஒன்றிணைந்து செயல்படுவோம். தொடர்வோம். இவ்வாறு தா.பாண்டியன் தம் பேச்சில் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுததைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது குறிப்பிட்டடதாவது:

 பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதை யெல்லாம் செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் கற்பனை, உண்மை அல்ல என்பது மோடிக்கும், சுஷ்மா சுவராஜூக்கும் தெரியும். ராமன் பாலம் கட்டப்படவில்லை என்பதும் தெரியும். மக்களின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு செய்துவருகிறார்கள். எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
இந்தியாவை இந்துஸ்தான் என்று அறிவிப்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம்.தாழ்த்தப்பட்டவர்களைக் குறிவைத்து அம்பேத்கர் ஜெயந்தி என்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பாஜகவிலிருந்து ஒவ்வொருவரும், ஒவ்வொருவிதமான  குரலாக ஒலிக்கிறார்கள். தந்திரங்கள் நீண்ட காலத்துக்குப் பயன்படாது.
-இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.





தமிழ்நாட்டில் 6 மாதத்துக்குமுன் கூட்டு சேர்ந்தவர்கள் புளித்துப் போய்விட்டது என்று வெளியேறுகிறார்கள். அவர்கள் யாரைக் குறிவைக்கிறார்கள்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள், மீனவர்களை பிள்ளையாரைக்காட்டி குறிவைக்கிறார்கள். ஒடுக்கப்ட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களை அச்சுறுத்த நினைக்கிறார்கள்.  திருக்குறள் குறித்து கோல்வால்கர் இந்து நூல் என்று கூறியுள்ளார்.


பகுத்தறிவுக்கு முரண்பாடான நூல், கொலைக் குற்றத்தை நியாயப்படுத்தும் நூல் கீதை.
காந்திக் கொலையை நியாயப்படுத்திவிட்டு பின்பு மன்னிப்பு கோரினால் போதுமா? ராமனின் பிள்ளைகள் தான் ஆளவேண்டும் என்றவர்மீது எப்அய்ஆர் மட்டும் போதுமா? கைது செய்யப்படவில்லை. கீதை மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டிய நூல்.
விழிப்புணர்வு, மாற்றத்தை ஏற்படுத்தும். நீடிக்கும் ஆட்சி அல்ல என்கிற அச்சத்தால் வேகம் காட்டுகிறார்கள். - இவ்வாறு தம் பேச்சின்போது தமிழர் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப் பிட்டதாவது:
பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்று அசோக் சிங்கால் கூட்டிய கூட்டத்தில் பேசியுள்ள சுஷ்மா சுவராஜ் கிருஷ்ணனின் விளையாட்டை தேசிய விளையாட்டு என்று அறிவித்திட அவர் கட்சிப் பெண்கள் ஏற்பார்களா? சாமியார் பெண்கள் உள்பட. சாக்ஷி மகராஜ் எனும் சாமியார் நாடாளு மன்றத்தில் காந்தியைப்போலவே கோட்சேவும் தேசப்பற்று உள்ளவர் என்று கூறிவிட்டு, திரும்பப் பெற்றுவிட்டால் போதுமா? நிரஞ்சன் ஜோதி வாரம், அமித் ஷா வாரம் என்று வாரந்தோறும் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தி வரு கிறார்கள். சபாநாயகரே பேசுவதை உணர்ந்து பேசுங்கள் எனக் கூறும் நிலையில் உள்ளது.
கீதையின் 5,151ஆம் ஆண்டு விழாவாம் மத்திய அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவில் கூறுகிறார்கள். அம்பேத்கர் கூறும் காலம் என்னவென்றால், பவுத்தத்தின் எழுச்சிக்குப்பிறகு,  ஜாதி தளர்ந்தபோது பகவத் கீதை வந்தது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.டாக்டர் கோசாம்பி 1400 முதல் 1500 ஆண்டுகளுக்குமுன் என்றால் 3ஆம் நூற்றாண்டின் காலமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கீதைக்கு விளக்கம் எழுதியுள்ளவர்கள் இருவர்தான் ஒருவர் ராதாகிருஷ்ணன், அடுத்தவர் நம் தமிழர் தலைவர் ஆவார். (கரஒலி!)
கருப்பு, சிவப்பு, நீலச் சட்டைக்காரர்கள் பிரிந்திருக்கக் கூடாது என்று பாஜகவினர் நம்மை ஒன்றுபடுத்தி உள்ளார்கள்.
கீதையைக் காப்பாற்றுங்கள் என்று தலையங்கம், கீதை குறித்த விவாதங்கள் ஆகியவை நடைபெறுகின்றன. கவிஞர் கலி.பூங்குன்றன், நான், அருணன், அருள்மொழி உள்ளிட்ட நம்மவர்கள் விவாதங்களில் பங்கேற்பதன்மூலம் கீதையின் இன்னொரு பக்கம் மக்களிடம் செல்கிறது.
மதசார்பற்ற நாட்டில் ஒரு மதத்தின் நூல் பொதுவான நூலாக இருக்க முடியுமா? கீதை இந்து மதத்துக்கான நூலும் அல்ல. 3 விழுக்காடு பார்ப்பனர்களுக்கான நூல். வருண அமைப்பை வலியுறுத்தும் நூல். வன்முறையை தூண்டும் நூல். தத்துவக் குழப்பங்கள் கொண்ட நூல் ஆகும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளபடி, ஏசுகிறிஸ் துவுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் என்றால், 2500 ஆண்டுகளுக்கு முந்தையதுதான்.
கீதை சொல்லக்கூடிய தர்மம் என்பது வருண தர்மமே. பார்ப்பான வேதம் ஓதுதல், சத்திரியன் போரிட்டு மடிவது, வைசியன் கால்நடைகள், வேளாண்மைத் தொழில், சூத்திரன் மற்றவர்களுக்கு சேவை செய்வது என்று பிறப்பின் அடிப்படையில்தான் கர்மம் என்பது கூறப் பட்டுள்ளது என்று விவாதத்தின்போது கூறினேன். அப்போது விவாதத்தில் பங்கேற்ற சுதாங்கன் அப்படி யானால் அதை எடுத்துவிடுவோம் என்கிறார்.
மகாபாரதத்தில் இடைச்செருகல் செய்யப்பட்டதுதான் கீதை.  தந்தைபெரியார் மகாபாரதம்குறித்து கூறும்போது அது ஒரு விபச்சாரப் புத்தகம் என்று கூறுவார். ஒருத்தனும் ஒருத்தனுக்கே பிறந்தவன் இல்லை. 5 பேருமே பாண்டுவுக்கு பிறக்காதவர்கள்.
பாடநூலாகக் கூட இருக்க கூடாது நூல். தேசிய நூலாக இருக்கக் கூடாது.
என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் விரிவாக விளக்கிப் பேசினார்.


Read more: http://www.viduthalai.in/headline/92786-2014-12-13-10-37-05.html#ixzz3LmYu3XRt





சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? Empty Re: பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா?

Sat Dec 13, 2014 7:59 pm
பேராசிரியர் அருணன்
மோடிவித்தைகள் ஆச்சரியப்பட வைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி அல்ல பிராமணிய ஜனதா கட்சி. ஜாதியம், ஆணாதிக்கம், சமஸ்கிருதத்துதி, மூடநம்பிக்கை, மதவாதம் ஆகிய குணக்கேடுகளைக் கொண்டுள்ள கட்சி பெரும் விபத்தாக தனிப்பெரும்பான்மை ஆட்சி வந்தால் பின் எப்படி இருக்கும்?
1. முதலில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்று இருக்க முடியுமா? தேசியப் பறவை, தேசிய விலங்கு போல் தேசிய நூல் இருக்க முடியுமா?
2. நூலின் கருத்தியல்படி தேசிய புனித நூல் என்று இருக்க முடியாது. 3.மதசார்பற்ற ஜனநாயக குடியரசில் ஒரு மத நூல் தேசிய நூல் என்பது சட்டவிரோதம். மதசார்பற்ற அரசு என்று சொன்னால் மதங்களைச் சாராத அரசு என்றுதான் பொருள். பெரியார் சொல்வார் கன்னி என்று சொன்னால் அனைத்து ஆண்களுடன் சேர்ந்திருப்பது என்றா பொருள்? ஆண்களிடமிருந்து விலகி இருப்பதுதானே பொருள் என்று கேட்பார்.
அப்படியே எல்லா மதங்களையும் சமமாகப் பாவிப்பது என்றால் கீதை ஒரு மதத்தின் நூல் இல்லையா? அது வைணவ நூல் 80விழுக்காடு இந்துமதத்தினர், 14விழுக்காடு முசுலீம்கள், 2 விழுக்காட்டினர் கிறித்தவர்கள் உள்ள நாட்டில் எப்படி ஏற்கமுடியும்?
அந்த அரசியல் சாசனத்தின்பேரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இப்போது இப்படி கூறுபவர்களை அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேசிய புனித நூல் யோக்கியதை கீதைக்கு உண்டா?
போர்க்களத்தில் இவ்வளவு பேர் சத்திரியர்களைத் தீர்த்துவிட்டால் பெண்களிடையே வருணக் கலப்பு ஏற்பட்டுவிடுமாம்.
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கூறிவிட்டு அவனாலேயே மாற்ற முடியாது என்றால் என்ன கடவுள்?
கொலை செய்யத் தூண்டும் நூலை தேசிய நூலாக்குவது இந்த நாட்டுக்கு அவமானம். வருண தர்மம் சீர்குலைந்தால் அவதாரம் எடுப்பானாம்.
காந்தியும், கோட்சேவும் தேச பக்தர்கள் என்கிறார்கள். காந்தியை குப்பையைக் கூட்டமட்டுமே என்கிறார்கள். காந்தியைக் கூறும்போது, மக்களின் ஒற்றுமை, ஆலயப் பிரவேசம் இவற்றில் இல்லையா?
கொலை வழக்கு சங்கராச்சாரி அல்ல. சந்திரசேகரேந்திர சரசுவதி கூறும்போது, ஜாதி பேதம் குணத்தின் அடிப் படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையில்தான் பகவான் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ஆகவே, கீதையை தேசிய நூல் ஆக்கக்கூடாது.
என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மன்ற கவுரவத் தலைவர் அருணன் பேசினார்.


Read more: http://www.viduthalai.in/headline/92786-2014-12-13-10-37-05.html#ixzz3LmZDmgP5
Sponsored content

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா? Empty Re: பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டுமா?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum