ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது - நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு
Fri Dec 12, 2014 7:35 pm
ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது
மதமாற்றம், மத வன்முறை, சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டை சுமத்தினாலும் எங்களுக்குக் கவலையில்லை!
நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு மதவெறிப் பேச்சு!
நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு மதவெறிப் பேச்சு!
புதுடில்லி, டிச.12_ உத்திரப்பிரதேசத்தில் நடந்து கொண்டு இருக் கும் கட்டாய இந்து மதமாற்றம் குறித்து நடாளுமன்ற விவாதத்தின் போது வெங்கையாநாயுடு எங்கள் ஆட்சியின் பின் னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்று கூறினார். இதன் மூலம் நாட்டின் மதச்சார்பின்மை நேர டியாக பாதிப்பிற்குள் ளாகியுள்ளது.
ஆக்ராவில் கிறிஸ்த வர்களையும், முஸ்லீம் களையும் வலுக்கட் டாயமாக மதம் மாற்றும் சட்டவிரோத நடவடிக் கையை பஜ்ரங்தள் கடந்த வாரம் நிறைவேற்றியுள் ளது. இச்சம்பவத்தை அடுத்து டிசம்பர் 25-ஆம் தேதி உத்திரப்பிரதேசத் தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள அலிகார் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட் டவர்களை தாய்மதத்திற்கு அழைத்துவரும் விழா (இந்துமத மாற்றம்) நடத் தப் போவதாக ஆர்.எஸ்.எஸ் உத்திரப் பிரதேசம் முழுவதும் விளம்பரம் செய்துவரு கிறது.
ஆக்ரா சம்பவம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் விளம்பரம் குறித்து நாடா ளுமன்றத்தில் கடுமை யான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் கேள் விக்குப் பதிலளித்த நாடா ளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை ஆர். எஸ்.எஸ் மீது தேவை யில்லாமல் குற்றம் சுமத்த வேண்டாம், அது ஒரு நல்ல அமைப்பு அதன் ஆலோசனையில் தான் அரசு நிகழ்கிறது என்று எதிர்கட்சிகள் கூறினால் அதில் என்ன தவறு? நல்ல இயக்கத்தின் ஆலோ சனையில் அரசு நடப் பதில் தவறொன்றும் இல்லை, நான் ஆர். எஸ்.எஸ் காரன் தான், நான் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப் பால் வளர்க்கப்பட்டவன், எனது தாய் ஆர்.எஸ்.எஸ் இதைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன். யாரும் தன் தாயை பழிப்பதை பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டார்கள், இதைச் சொல் வதில் பெருமைப்படுகிறேன்.
காந்தி கொலைக்கு வெங்கையா நாயுடு மறைமுக ஆதரவு
இந்து என்றாலே ஏதோ எதிரிகளைப் பார்ப்பதுபோல் சில சமூக விரோத அமைப்புகளின் ஆதர வோடு இயங்கும் சில கட்சிகளின் நட வடிக்கை உள்ளது; அத னால் தான் இவர்கள் பாஜகவையும், ஆர். எஸ்.எஸ் அமைப்பையும் எப்போதும் எதிர்க்கின் றனர், ஆக்ரா சம்பவம் அங்குள்ள மாநில அரசின் பிரச்சனையாகும் ஏதோ ஒரு அமைப்பு (பஜ்ரங்தள்) செய்த செயலுக்கு மத்திய அரசு எப்படி பதிலளிக்க முடியும் என்று கூறினார்.
மேலும் கோட்சே குறித்துப் பேசிய வெங் கையா நாயுடு நாடு பிரிந்து சென்றதற்கு யார் காரணம்? என்று திருப்பி கேள்வி கேட்டார். இதன் மூலம் காந்தியின் கொலையை நாடாளுமன்றத்தில் சரி யான செயல் தான் என்ற ஒப்புக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளலாம். சோதிடம் நல்ல வானியல் அறிவியலாம்!
சோதிடம் ஒரு நல்ல வானியல் அறிவியல், ஸ்மிருதி இரானி சோதிடம் பார்த்த்தில் எந்த ஒரு தவறும் இல்லை, அதன் மூலம் பலன் பார்ப்பதும் பார்க்காததும் அவரது விருப்பம், நல்ல வானியல் அறிவியலான சோதி டத்தை முக்கிய பாடமாக கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும் அறிஞர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.
மேலும் அவரது சமஸ்கிருத பாட நடவடிக்கை மக்களிடம் பெரிதும் ஆதரவு பெற்று விட்ட்து. எதிர்கட்சிகள் தான் இதில் தேவையில்லாமல் பேசி வருகின்றன. இது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. மத மாற்றம் மத வன்முறை, சமஸ்கிருதம், இதர என எந்த ஒரு குற்றச்சாட்டை நீங்கள் கூறினாலும் எங்களுக்குக் கவலை யில்லை, எங்கள் பணியை நாங்கள் தொடருவோம், அதற்கு மக்கள் முழுமை யாக ஆதரவு தருகிறார் கள், தந்துள்ளனர் என்று கூறினார். வெங்கையா நாயுடுவின் விவாதத்திற் குரிய பேச்சால் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Read more: http://viduthalai.in/headline/92754-2014-12-12-11-08-41.html#ixzz3LgcZxQqC
Permissions in this forum:
You cannot reply to topics in this forum