எழுப்புதலுக்கு வித்திட்டவர் ஐயா. ஜான்றோஸ் அவர்கள்
Thu Nov 27, 2014 8:44 pm
20 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில் தென்-தமிழகத்தில் ஏற்பட்ட எழுப்புதலுக்கு வித்திட்டவர் ஐயா. ஜான்றோஸ் அவர்கள். அவருடைய சாட்சி பின்வருமாறு,
அப்போஸ்தல கால முதல் மூன்று நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த சபைகள், ராஜாக்களின் தலையீட்டினால் மங்கத் தொடங்கின. பல நூற்றாண்டுகளாக சபை தன் வல்லமையை இழந்து இருண்ட நிலைமைக்குள் போனது. மார்டின் லுத்தர், ஸ்வின்லி, ஜாண் வெஸ்லி போன்றவர்களின் காலங்களில் ஒவ்வொரு சத்தியமாக சபையில் புதுப்பிக்கப்பட்டு வந்தன.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சபைகளில் ஆவிக்குரிய வறட்சி கடுமையாய் இருந்தது. பூமிக்குரிய வறட்சி உண்டாகும்போது மரம், செடி, கொடிகள் வாடி வதந்கிப் போகும் பஞ்சம் உண்டாகும்.
மழை பெய்யும் போது மறுபடியும் செழிப்பு உண்டாகும். அப்படியே சபைகளில் எழுப்புதல் உண்டாகும் போது ஆவிக்குரிய வறட்சி நீங்கி மறுமலர்ச்சி உண்டாகும்.
19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தேவன் சபைகளில் பின்மாரியை அனுப்ப சித்தம் கொண்டார். உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் இம்மறுமலர்ச்சி உண்டாயிற்று.
இம்மறுமலர்ச்சியினால் அநேக தேவ ஊழியர்கள் எழும்பினர். அவர்கள் மற்றிடங்களில் போய் சத்தியங்களை சொன்னார்கள். 1915-ம் வருஷம் தென் இந்தியாவிலும் இந்த மறுமலர்ச்சி உண்டானது. ஆவிக்குரிய அனுபவங்கள் சபைகளுக்குள் உண்டாக ஆரம்பித்தது.
இக்காலத்தில் எனக்குள்ளும் இந்த நெருப்பு பற்றியது. 1926-ம் ஆண்டு நானும் இந்த அக்கினியால் தொடப்பட்டு வேதத்தை ஆராயத் தொடங்கினேன். பல அருமையான தேவ சத்தியங்களை கர்த்தர் எனக்குள்ளும் வெளிப்படுத்தினார்.
இரண்டு வருட வேத ஆராய்ச்சியால் ஒரு கிறிஸ்தவன் யார் என்றும் அவனுடைய நடக்கைகள் எவ்விதமாய் இருக்கவேண்டுமென்றும் அறிந்துகொண்டேன். அதோடு ஆவிக்குரிய உன்னத நிலைக்கு ஒரு விசுவாசியி நடத்த வேண்டிய ஊழியன் எவ்விதமாய் இருக்க வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டேன். இந்த வெளிப்பாடு கிடைத்த பொழுது என்னுள்ளம் எனக்குள்ளே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
“பூரண சுவிஷேச சபைகளை” 1932 ஆம் வருடம் தான் திருவிதாங்கூர் பிரதேசங்களில் ஆரம்பித்தேன்.
கர்த்தர் பரிசுத்த ஆவியின் அக்கினியை ஏராளமாய் அனுப்பி தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் சபைகளை எழுப்பினார். அதோடு நூற்றுக்கணக்கான சபைகள் பல்வேறு பெயர்களோடு தேசத்தின் பல பாகங்களிலும் எழும்பி செழித்து வளர்வதை பார்த்து கர்த்தருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறேடுக்கிறோம்.
கர்த்தர் இன்னும் ஆயிரக்கணக்கான சபைகளை எழுப்பி தேசத்தில் போட்ட அக்கினியை இன்னும் வளர செய்வாராக.
2 விதை விசுவாசிகளோடும் 3 ஊழியர்களோடும் ஆரம்பிக்கப்பட்ட பூரண சுவிஷேச பெந்தேகொஸ்தே சபை இன்று தேசமெங்கும் பரமபி பலன் செய்வதற்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்.
(ஐயா அவர்கள் 1977 ஆம் ஆண்டு கர்த்தரிடம் இளைப்பாரச் சென்று விட்டார்கள்.
ஐயா அவர்களுடைய படத்தை பகிர எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் கிடைக்கவில்லை. நண்பர்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum