காட்டாத்துறை பாஸ்டர் என். தாமஸ் அவர்கள்
Thu Nov 27, 2014 8:39 pm
துடிப்புள்ள இளைஞனாய் காட்டாத்துறை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராய் வேலை செய்து கொண்டிருந்தார். அச்சமயம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆவல்மிகு தலைவராயும் தோழராயும் சேவை புரிந்தார்.
தக்க சமயத்தில் ஆணடவர் இயேசுவை ஏற்றுக் கொண்டபின் ஆண்டவருக்கென்று தீவிரமாய் வைராக்கியமாய் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
அவர்தான் காட்டாத்துறை பாஸ்டர் என். தாமஸ் அவர்கள். 1964 ஆம் ஆண்டு காட்டாத்துறை ஜெப வீட்டில் ஊழியத்தை ஆரம்பித்தார்கள்.
38 ஆண்டு கால ஊழியத்தில் அவர்கள் செய்த பிரசங்கங்கள் நடத்திய கன்வென்ஷன்கள், எழுப்புதல் கூட்டங்கள், மற்றும் ஆரம்பித்த சபைகள் ஏராளம்.
சிறந்த ஒரு அப்போஸ்தலனாகவும், பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபையின் தலைவராகவும் 25 ஆண்டுகள் பணியாற்றினார்.
அனைவரும் விரும்பி வாசிக்கும் 'நேசரின் தோட்டம்' எனும் ஆவிக்குரிய மாதாந்திர பத்திரிக்கையின் ஸ்தாபகராய், ஆசிரியராய் 17 ஆண்டுகள் பணியாற்றினார்.
பாஸ்டர் அவர்கள் 16-03-02 அன்று கர்த்தரிடம் இளைப்பாற இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றார்கள்.
பாஸ்டர் என். தாமஸ் அவர்கள் இக்கால தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரி.
இளம் சந்ததியினர் பாஸ்டர் தாமஸ் போன்றோரின் சாட்சிகளை அறிந்து , பிரதிஷ்டை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தால் கிறிஸ்துவின் சுவிஷேசம் இன்னும் பலமாய் முழங்குவது உறுதி.
நன்றி: கதம்பம் [இ-இதழ்]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum