இன்று பிப்.11 : தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் 165வது பிறந்தநாள்
Mon Feb 11, 2013 10:55 am
வாசிக்க : பிலி 3: 12-14
டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின்
கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம். அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான்
நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.
தனது வாழ்நாளில் இயேசு-கிறிஸ்துவின் போதனைகளை கைகொண்டு வாழ்ந்தார்.
அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.
அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.
அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும்,
புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை
பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய
முடிந்தது என்று கூறினார்.
எனக்கு அருமையானவர்களே! நமக்கு ஆண்டவர்
நல்ல வாழ்வையே வைத்து இருக்கிறார். ஆகவே மற்றவர்களால் வரும் மட்டம்
தட்டுதல் அல்லது எதிர்மறையான வார்த்தைகளை நம்முடைய காதில் வாங்காதபடி நமது
இலட்சியங்களை மாத்திரம் குறிக்கோளாய் கொண்டு இறைவனுடைய வழிகாட்டுதலில்
நடப்போமானால் நாம் வெற்றி வாகை சூடுவது எளிது.
பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது:
பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும்
தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற
இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே
ஓடக்கடவோம்;(எபி 12:1)
நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின்
வார்த்தைகளை விட, நம்மை அழைத்த தேவனின் வார்த்தைகள் ஜீவனுள்ளது. இதை இன்றே
விசுவாசித்து உங்கள் வெற்றியை தேவன் மூலம் பெற்று மகிழ்ந்திடுங்கள்.
ஜெபிக்க :
"இறைவா! என்னை சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் என்னை குறித்து
பேசும் வார்த்தைகளை இனி நான் கவனிக்கபோவதில்லை. உம்முடைய வார்த்தைகள் தான்
ஜீவனுள்ளது. உமது வார்த்தைகளை கவனமாய் கேட்டு அதன் படி நடக்க என்னை
அர்பணிக்கிறேன். எனது வாழ்வை நீர் உயர்த்துவீராக!" ஆமென்!
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum