இன்று மழை வருமா? - கதை
Sat Feb 01, 2014 12:03 am
சுட்டகதை:-
----------------
மன்னன் ஒருநாள் நகர்வலம் செல்ல நினைத்து அமைச்சரிடம் "இன்று மழை வருமா?" என்று கேட்டார். அதற்க்கு அமைச்சர் "இன்று மழை வராது மன்னா. உறுதியுடன் நீங்கள் நகர்வலம் செல்லலாம்" என்றார்.
ஆகையால் மன்னர் நகர்வலம் சென்றார், நகர்வலம் செல்லும் பாதை அருகே ஒரு குடிமகன் குடிசையில் தனக்கு சொந்தமான கழுதையுடன் தங்கி இருந்தான். அப்போது அந்த குடியானவன் மன்னனை பார்த்து "என்ன மன்னா? இன்று நகர்வலம் செல்லுகிரீர்கள், இன்று மழை வருமே!!" என்று கூறினான்.. உடனே மன்னன் "அமைச்சருக்கு தெரியாதது உனக்கு தெரிந்துவிட போகிறதா?" என நகர்வலத்தை தொடர்ந்தார்
ஆனால் குடியானவன் சொல்லியபடியே மழை பெய்தது, கொட்டும் மழையில் நகர்வலம் முடித்து திரும்பிய மன்னன் அந்த குடியனவனை பார்த்து "எப்படி மழை வரும் என்று சரியாக கணித்தாய்? அமைச்சரை விட நீ புத்திசாலியா?" என்றார். அதற்க்கு குடியானவன் "எனக்கு எதுவும் தெரியாது. எனது கழுதையின் காது நீட்டி கொண்டு இருந்தது, இது மழை வருவதற்கான அறிகுறி என்றார்". அன்றிலிருந்து அமைச்சர் பதவி நீக்கப்பட்டு "கழுதைக்கு" அந்த துறைக்கான பதவி கொடுக்கப்பட்டது.
கதையின் நீதி:
ஒவ்வொருவருக்கும் தனி திறமை உள்ளது, பெயர் பெற்றவர் அல்லது நெருங்கியவர் என்ற அடிப்படையில் பதவி கொடுக்கமால் அந்த அந்த திறமையின் அடிப்படையில் நாட்டை நிர்வகித்தால் நாடு சிறப்புடன் விளங்கும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum