கிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி?
Wed Nov 26, 2014 7:33 am
தேவையானவை:
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
- கிறிஸ்மஸ் க்ளாஸ் ஆர்ணமென்ட்ஸ்
- க்ளிட்டர் பவுடர்ஸ்/ பசை
- பெயிண்ட் டியூப்ஸ்
- சீக்குவின்ஸ்
- ரிப்பன்
விரும்பிய முத்துக்கள், கண்ணாடித்துண்டுகள் என உங்கள் விருப்பப்படி தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்.
[size][/size]
முதலில் க்ளாஸ் ஆர்ணமென்ட்டில் ரிப்பனை கோர்த்துக் கொள்ளவும். அலங்கரித்த பின் காயவிடுவதற்கு பின்பு தேவைப்படும்.
[size][/size]
பெயிண்ட் டியூப் கொண்டு இரண்டு வட்டங்கள் வரைந்து சுற்றிலும் புள்ளிகள் வைத்துக் கொள்ளவும்
[size][/size]
வரைந்திருக்கும் சிறிய வட்டத்தினுள் ஒரு பெரிய அளவிலான சீக்குவின்ஸை வைத்து ஒட்டவும். பெரிய வட்டத்தினுள் வைத்திருக்கும் புள்ளிகளில் சீக்குவின்ஸை வைத்து ஒட்டி அலங்கரிக்கவும். இந்த சீக்குவின்ஸ்களை ஒட்ட பசை அல்லது பெயிண்ட் உபயோகித்துக் கொள்ளலாம்.
[size][/size]
மீதமிருக்கும் வெற்றிடங்களில் மற்றொரு வரிசை சீக்குவின்ஸை ஒட்டி சுற்றிலும் பெயிண்டினால் அலங்கரித்துக் கொள்ளலாம்
[size][/size]
பெயிண்ட் காய்வதற்கு முன் க்ளிட்டர் தூள்கள் தூவிக் கொள்ளவும். இல்லையெனில், பசை தடவிக்கொண்டு, பின் தூள்களை தூவி விடவும்.
[size][/size]
மற்றொரு பாலில் பெயிண்ட் டியூபைக் கொண்டு அழகிய பூக்கள் வரைந்து நடுவில் சீக்குவின்ஸை ஒட்டி சுற்றிலும் க்ளிட்டர்ஸ் தூவி அலங்கரிக்கலாம்
[size][/size]
இதைப் போலவே எல்லா பால்களிலும் விருப்பத்திற்கு ஏற்றாற் போல பல விதமான டிசைன்களில் செய்துக் கொள்ளவும். கிறிஸ்மஸ் சமயங்களில் வீட்டை அலங்கரிக்க இதுப்போல் அழகிய அலங்கரித்த பால்களை உபயோகப்படுத்தலாம்.
நன்றி: அறுசுவை.காம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum