OHP ஷீட்டை கொண்டு கிறிஸ்துமஸ் அலங்கார வளையம் செய்வது எப்படி?
Wed Nov 26, 2014 7:29 am
தேவையானவை
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
[/size]
நன்றி: அறுசுவை.காம்
[/size]
- OHP ஷீட் - 1
- பழைய கனமான அட்டை
- சாட் பேப்பர்
- ஃபேப்பரிக் பெயிண்ட்
- கத்தரிக்கோல்
- பெவிக்கால்
- ப்ரஷ்
- பெரிய பெல் - 1
பழைய கனமான அட்டையை படத்தில் உள்ளது போல் உங்களுக்கு தேவையான அளவிற்கு வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
[size][/size]
வெட்டிய வட்டமான அட்டை முழுவதும் சில்வர்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
[size][/size]
OHP ஷீட்டில் நடுத்தர அளவில் சிறிய பூக்களை வரைந்து அவற்றை தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு அதன் மீது ஆரஞ்ச்நிற பெயிண்டை அடிக்கவும்.
[size][/size]
இதேப் போல் மற்றொரு பூ வரைந்து வெட்டி எடுத்துக் கொண்டு அதில் ஃபிங்க்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
[size][/size]
இதுப்போல் OHP ஷீட்டில் ஒரே அளவிலான நான்கு பூக்கள் ஆரஞ்ச் நிறத்திலும், மீதி நான்கு பூக்கள் பிங்க் நிறத்திலும் மொத்தம் எட்டு பூக்கள் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும். அந்த பூக்களின் நடுவில் ப்ரவுன் நிற பெயிண்டால் வட்டம் போல் இட்டுக் கொள்ளவும்.
[size][/size]
பிறகு சிறிய இலை வடிவத்தை கனமான அட்டையில் வரைந்து கத்திரிக்கோலால் தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதை OHP ஷீட்டின் மீது வைத்து வரையவும். இதுப்போன்று எட்டு இலைகளை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
[size][/size]
வெட்டி வைத்திருக்கும் இலைகளில் பச்சைநிற பெயிண்டை அடித்து காயவிடவும்.
[size][/size]
பெயிண்ட் செய்திருக்கும் வட்டமான அட்டையில் ஏதாவது ஒரு இடத்தில் பெவிக்கால் வைத்து அதில் பிங்க்நிற பூவை வைக்கவும். சிறிது இடைவெளி விட்டு ஆரஞ்ச்நிற பூவை வைக்கவும். இதுப்போல் மாறி மாறி பூக்களை வைத்துக் கொள்ளவும். ஒவ்வொருமுறை வைக்கும்பொழுது பெவிக்கால் தடவி வைக்கவும்.
[size][/size]
பூக்கள் வைத்த பிறகு அதன் இடைவெளியில் பெவிக்கால் தடவி இலைகளை சாய்வாக இருக்கும்படி வைத்துக் ஒட்டி விடவும்.
[size][/size]
பிறகு ஒரு சாட் அட்டையில் மூன்று சிறிய ஸ்டார் வடிவத்தை வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு வெவ்வேறான மூன்று கலர் பேப்பரில் இந்த ஸ்டார் வடிவத்தை வைத்து வரைந்து தனித்தனி துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு ஸ்டார் அட்டையிலும் பெவிக்கால் தடவி இந்த பேப்பரை ஒட்டி கொள்ளவும். இதுப்போல் மூன்று ஸ்டார், ஒரு பெரிய பெல் மற்றும் இரண்டு க்ளாஸ் ஸ்ட்ரா ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
[size][/size]
பெரிய பெல்லின் மேலுள்ள துளையில் தேவையான அளவிற்கு கனமான நூலை எடுத்து ஒற்றையாக கோர்த்துக் முடிச்சு போட்டு கொண்டு அதில் ஒரு க்ளாஸ் ஸ்ட்ராவை கோர்க்கவும். அதன் நடுவில் சாட் அட்டையில் செய்திருக்கும் ஒரு ஸ்டாரை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். பிறகு மற்ற இரண்டு ஸ்டாரின் பின்பக்கத்தில் ஏதாவது ஒரு கூர்மையான வடிவத்தில் பெவிக்கால் வைத்து நூலின் முனையை முடிச்சுப்போட்டு கொண்டு ஒட்டிக் கொள்ளவும். அவை காய்ந்ததும் க்ளாஸ் ஸ்ட்ராவை இரண்டாக உடைத்து அதில் கோர்த்து வைக்கவும்.
[size][/size]
இப்பொழுது வளையத்தின் உள்ளே பெல் கோர்த்த ஸ்ட்ராவை வைத்து அட்டையில் நூலை இரண்டு முறை சுற்றி முடிச்சு போட்டுக் கொண்டு மீதி நூலை சுவரில் மாட்டுவதற்கு வளையம் போல் செய்துக் கொள்ளவும்.
[size][/size]
மற்ற இரண்டு ஸ்டாரையும் அட்டையின் பின்பக்கத்தில் படத்தில் உள்ளதுப் போல் பெவிக்கால் வைத்து ஒட்டி விடவும்.
[size]நன்றி: அறுசுவை.காம்
[/size]
Permissions in this forum:
You cannot reply to topics in this forum