சட்டத்துக்கு சவால் விடும் சாமியார்கள்
Fri Nov 21, 2014 8:58 am
Hajji Mohamed ஆசாராம் பாபு,நித்தியானந்தா, பிரேமானந்தா, ராம் பால், சாமியாரினி பிரக்யா சிங், சுவாமி அசிமானந்தா, ஜெயேந்திரர் உள்ளிட்ட ஏராளமான சாமியார்கள்..
பாலியல், வன்முறை, ஆயுதக்கடத்தல், குண்டுவெடிப்பு, சொத்துக்குவிப்பு உள்ளிட்ட ஏராளமான கிரிமினல் குற்றங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர பாபா ராம்தேவ் போன்ற இன்னும் ஏராளமான சாமியார்கள் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளது .பாபா ராம்தேவிற்கு சொந்தமாக தனி தீவே உள்ளதாக கூட செய்திகள் வந்துள்ளன.
நாட்டில் உள்ள எல்லா ஆசிரமங்களையும், மடங்களையும் சோதனையிட்டால் இன்னும் ஏராளமான சாமியார்கள் மாட்டுவார்கள்.
எங்களுக்கு எந்த சொத்தும் சுகமும் வேண்டாம்.. நாங்கள் துறவிகள் என்று கூறும் சாமியார்களுக்கு, எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் வந்தன ? ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன ? போலீசாரையே எதிர்த்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு துப்பாக்கிகளும்,ஆயுதங்களும் ஆசிரமத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதென்றால்..
காவல் துறையும் , அரசாங்கமும் எங்களை ஒன்றும் செய்யாது, செய்ய முடியாது என்ற எண்ணமும், இவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்ற அரசியல்வாதிகளின் சப்போர்ட்டும் தான் இவர்களின் சமூக விரோத செயல்களுக்கு முக்கிய காரணம்.
மக்களின் மூட நம்பிக்கைகளும், அரசியல்வாதிகளின் ஆதரவும் இருக்கிறவரை சாமியார்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.
சாமியார்களின் ஆசியோடு நடைப்பெறும் ஆட்சியில், சாமியார்களின் சேட்டைகளும், சாமியார்களின் சமூக விரோத செயல்களும் இன்னும் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை !
மனிதன் ஒருக்காலும் கடவுளாக ஆகமுடியாது என்ற சாதாரண அறிவை மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அன்றைக்குத்தான் இதுபோன்ற எமாற்றுப்பேர்வழிகள் ஒழிவார்கள் !
*************************************************************
Shahul Hameed Hameed ஆனான பட்ட படித்த அக்கினியே தலைவணங்கும் போது சாதரண பாமர மக்கள் எம்மாத்திரம் ?
மனிதன் ஒருக்காலும் கடவுளாக ஆகமுடியாது என்ற சாதாரண அறிவை படித்தவர்கள் பாமர மக்கள்களுக்கு என்றைக்கு அறிஉறுத்துகிரார்களோ அன்றைக்குத்தான் இதுபோன்ற எமாற்றுப்பேர்வழிகள் ஒழிவார்கள் !
***************************************************************************************************************************
*****************************************************************************************************************
நன்றி: விடுதலை - ஈ பேப்பர் - முகநூலில் வந்த கருத்துக்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum