உயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்
Sat Feb 03, 2018 9:23 pm
காற்று எப்போதும் பூமியில் வீசிக்கொண்டே இருக்கிறது. பறவை இறகு போன்ற இலகுவான பொருட்கள் அந்தக் காற்றடிக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன, இரும்பு மற்றும் கற்கள் போன்ற பாரமான பொருட்களோ அசையாது கிடந்த இடத்திலேயே கிடக்கின்றன.
விண்ணகக் காற்றாகிய ஆவியானவர் முதல் நூற்றாண்டிலிருந்து இந்த பூமியில் அசைவாடிக் கொண்டேதான் இருக்கிறார். ஆனால் அவருடன் இணைந்து உன்னத அனுபவங்களில் மிதப்பவர் வெகுசிலர். ஆவிக்குரிய வாழ்வில் அங்குலம் கூட முன்னோக்கி நகராமல் கிடந்த இடத்திலேயே கிடப்போர் பலர். காரணம் என்ன?
ஆண்டவர் எளிமையானதாகவும், இனிமையானதாகவும் படைத்து வைத்திருந்த ஏதேன் வாழ்வு, மனிதனின் மீறுதலால் இவ்வுலகத்தின் சிஸ்டத்துக்குள் சிக்கி இடியாப்பச் சிக்கலாகிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் நம்மை அழுத்தும் பாரங்கள் அநேகம். அந்த பாரங்கள்தான் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற விடாமல் அழுத்தி கிடந்த இடத்திலேயே கிடக்க வைக்கிறது. இது சந்தேகமே இல்லாமல் சாத்தானின் கண்ணிதான்.
ஆனால் அதிலிருந்து மீளவும் அவர் நமக்கு நமக்கு ஒரு வழியை வைத்திருக்கிறார்.வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் (இயேசு) வாருங்கள; என்று இயேசு அழைக்கின்றார். உலகத்தின் பாரங்களிலிருந்து தேவன் நமக்கு விடுதலையை தருவது மீண்டும் புதுபெலத்துடன் உலகத்தை நோக்கி ஓடுவதற்காக அல்ல, நமது பார்வையை உன்னதங்களை நோக்கி திருப்ப… கர்த்தர்வசம் பாரங்களை ஒப்புவித்தால் எல்லாம் இலகுவாகிவிடும். பின்னர் உன்னதக் காற்றாகிய ஆவியானவருடன் இணைந்து ஆவிக்குரிய வாழ்வின் உயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகிவிடும்.

Re: உயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்
Sat Feb 03, 2018 9:24 pm
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். (சங்கீதம் 90:10)
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக எபிரேயர் 9:27 சொல்லுகிறது. அந்த மரணம் வரை காலத்தை வீணடிக்க வைப்பது எப்படி என்ற கலையில் நம்முடைய சத்துருவுக்கு 6000 வருட அனுபவம் இருக்கிறது. பல இன, மொழி கலாச்சாரத்தைச் சேர்ந்த ட்ரில்லியன்கணக்கான மனிதர்களிடம் அவன் அதை பயிற்சித்துப் பார்த்தும் இருக்கிறான். எனவே என்னையும், உங்களையும் அதே வழியில் ஏமாற்றுவது அவனுக்கு ஒன்றும் கடினமல்ல.
எனவே நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் இன்றே நமது முழு focus-ஐயும் ஆவிக்குரிய வாழ்வின் பக்கம் திருப்புவோம். கர்த்தரோடு ஒப்புவாகுவோம். பாழடைந்து கிடக்கும் நமது ஜெபவாழ்வாகிய பலிபீடத்தை சீரமைப்போம். பிரச்சனைகள் சூரியனைக் கண்ட பனிபோல தானாக விலகும்! உலகப் பிரச்சனைகளை சரிசெய்வதிலேயே காலத்தை வீணடித்துக் கொண்டிருப்போமானால் திடீரென்று மரணத்தை சந்திக்கும் நிலையில் நித்தியத்தை இழப்பது உறுதி…எனவே உணர்வுள்ளவர்களாக எச்சரிக்கையுடன் இருப்போம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum