'காபின்னா... அது பூனை காபிதான் பேஷ்...பேஷ்!'
Thu Nov 06, 2014 11:22 am
காபி என்றால் நம்மை பொறுத்தவரை டிகிரி காபி, சிக்கரி கலந்த காபி, பில்டர் காபி, கோல்டு காபி போன்ற சுவைகளில்தான் நாம் சுவைப்போம். அப்படித்தான் நமது ரோட்டோர காபி கடைகள் தொடங்கி, காபி ஷாப் வரை நமக்கு தருகிறார்கள். காபியை இவ்வாறு எந்த சுவையில் தந்தாலும் காபி கொட்டையை வறுத்து, சிக்கரி கலந்தது அல்லது சிக்கரி கலக்காதது என வகைப்படுத்துவதோடு இந்த வகையான காபி பொடி தயாரிப்பு முடிவடைந்துவிடும்.
ஆனால் பாலி, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஒருவகை பூனையைபயன்படுத்தி 'லூவாக் காபி' என்ற ஒரு வகை காபி பொடியை புதிய சுவையுடன் தயாரிக்கிறார்கள். விலையும் 100 கிராம் 3,000 ரூபாய் என்ற தகவல் நம்மை வாய் பிளக்க வைக்கிறது. "கோபி லூவாக்" என்றழைக்கப்படும் இந்த காபிதான் உலகிலேயே விலை உயர்ந்த காபியாம். உலகிலேயே சுமத்ரா தீவில்தான் இந்த காபி அதிகமாக்க தயாரிக்கப்படுகிறது.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காபியில் உள்ளது என்று கேட்டால், கிடைக்கும் தகவல் பலருக்கு வியப்பை தருகிறது...சிலரை 'உவ்வே' சொல்ல வைக்கிறது.
இந்த 'கோபி லூவாக்' சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த முறையில் உருவாகும் காபி மிகுந்த சுவையுடன் இருப்பதாக கூறுகின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். "ஏசியன் பாம் சிவெட்" என்ப்படும் சிறிய பூனை போன்ற விலங்கினம் நல்ல தரமான, பழுத்த 'கோபி லூவாக்' பழங்களை உண்டு, கொட்டைகளை கழிவுப் பொருட்களுடன் வெளியேற்றும். ஆனால் அவைகள் கழிவுப் பொருளுடன் வருவதால் சில கிருமிகளும் சேர்ந்து வரும். இதனால் அவைகள் பல கட்டமாக கழுவப்படுகிறது.
இந்த கழிவுப் பொருளுடன் வரும் கொட்டைகள் சேகரிக்கப்பட்டு, நன்றாக கழுவப்பட்டு, வறுத்து, அரைத்து, பொடியாக்கப்பட்டு காபியாக வழங்ககப்படுகிறது. இதற்காகவே இந்த 'சிவெட்' விலங்கினம் பிரத்யேகமாக வளர்க்கப்படுகிறதாம். காபி கொட்டைகளின் தரத்திற்கேற்ப சுவையும் மாறுபடும்.
டோனி வைல்டு என்னும் காபி எக்ஸிகியூடிவ் அதிகாரி, இதை தடை செய்ய குரல் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக மேலும் பலர் அணி திரண்டுள்ளனர்.
நாக்கு ருசி மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?!
-மு.கோதாஸ்ரீ
(மாணவப் பத்திரிகையாளர்)

இந்த முறை மூலம் காபி கொட்டையில் சிறிய அளவு பெப்டைட், ஃப்ரீ அமினோ அமிலங்கள் கிடைக்கிறது. இதனால் சுவையில் மாற்றம் ஏற்பட்டு, மற்ற வழக்கமான காபியுடன் ஒப்பிடுகையில் மணமும் சுவையும் மாறுபடும். அதாவது மிகுந்த சுவை, மணத்துடன் இருக்கும். சில நிறுவனங்கள், இந்த முறையை பின்பற்றி காபி தயாரிப்பதால் ஃப்ளோரிடா பல்கலைகழகம் இதற்கு , 'காபி ப்ரைமரோ' என்ற பெயரில் காப்புரிமை அளித்துள்ளது.
அதே சமயம் இதில் வருத்தம் தரும் ஒரு விஷயம் இந்த 'சிவெட்' விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான். அவைகளை சுதந்திரமாக திரிய விடாமல் கூண்டுக்குள் வளர்ப்பதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
டோனி வைல்டு என்னும் காபி எக்ஸிகியூடிவ் அதிகாரி, இதை தடை செய்ய குரல் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக மேலும் பலர் அணி திரண்டுள்ளனர்.
நாக்கு ருசி மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?!
-மு.கோதாஸ்ரீ
(மாணவப் பத்திரிகையாளர்)
Permissions in this forum:
You cannot reply to topics in this forum