இரண்டாவது பூனை..! (நகைச்சுவை)
Sun Mar 10, 2013 10:09 pm
மெல்வின் அப்பாவித்தனமானவர். ஆனால் தன்னைத் தானே கெட்டிக்காரனென
நினைத்துக் கொள்வார். மெல்வின் ஒரு தவறு செய்ததற்காக சிறையில்
அடைக்கப்பட்டார்.
அதே அறையில் ஒரு திருடனும்
அடைக்கப்பட்டிருந்தான். திருடன் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டான்.
இதை அறிந்த மெல்வின் தன்னையும் சேர்த்துக் கொள்ள சொன்னார். சிறிது
தயக்கத்துடன் அவன் ஒத்துக் கொண்டான்.
நள்ளிரவில் திருடன் மெதுவாக சிறையின் பின்புறம் இருளான ஒரு பகுதிக்கு
சென்று ஒரு பெரிய கயிறை சுவரின் மீது போட்டு அதன் மீது ஏறலானான்.
மெல்வினும் பின் தொடர்ந்தார்.
அப்போது அந்தப் பக்கம் வந்த வார்டன் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று உஷாராகி,
"யாரது அங்கே?"என்று சப்தம் கொடுத்தார்.
திருடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,
"மியாவ்" என்று கத்தியவாறு சுவற்றிலிருந்து வெளியே குதித்து விட்டான்.
வார்டனும் பூனை தான் திரிகிறது என்று எண்ணி திரும்ப நடந்தார். இப்போது
மெல்வின் கயிற்றின் மீது ஏறவே மீண்டும் சப்தம் கேட்கிறதே என்று உணர்ந்து
வார்டன் திரும்ப வந்து,
"என்ன சப்தம்? யாரது?" என்று கத்தினார்.
மெல்வின் புத்திசாலித்தனமாக குரல் கொடுத்தார்,
"இது இரண்டாவது பூனை!"
நன்றி: நகைச்சுவை

Re: இரண்டாவது பூனை..! (நகைச்சுவை)
Sun Mar 10, 2013 10:11 pm
நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.
அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது
வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில்
நின்று கொண்டிருக்கிறது.
அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை
அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக்
கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில்
ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று
பூனையை விட்டு வந்தார்.
சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார்,
"உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?"
"ஆம்" என்று மனைவி சொல்ல
நாராயணசாமி சொன்னார்,
"போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை".

Sun Mar 10, 2013 10:12 pm
ஒபாமா இந்தியா வந்திருந்தப்போ நம்ம நாராயணசாமிய சந்தித்தார்.
இருவரும் பேசுக்கொண்டிருக்கும் போது, பேச்சு விளையாட்டு பக்கம் போனது.
நாராயணசாமி சொன்னார்,
"கபடியில எங்க ஆளுங்க அடிக்கிறதுக்கு உலகத்துல எவனுமே பொறக்கல.. உங்களுக்கு கபடி பற்றி என்ன வேணும்னாலும் என்னை கேளுங்க சொல்றேன்"
" நாங்க மட்டும் என்ன குறைச்சலா....எங்கள மாதிரி உலகத்துல எவனாலயும்
டென்னிஸ் விளையாட முடியாது. டென்னிஸ் பத்தி என்ன வேணும்னாலும் கேளு பதில்
சொல்கிறோம் "
உடனே நாராயணசாமி ஒபாமாவை கேட்டார்,
"டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கு, சொல்லுங்க பாப்போம்"
இருவரும் பேசுக்கொண்டிருக்கும் போது, பேச்சு விளையாட்டு பக்கம் போனது.
நாராயணசாமி சொன்னார்,
"கபடியில எங்க ஆளுங்க அடிக்கிறதுக்கு உலகத்துல எவனுமே பொறக்கல.. உங்களுக்கு கபடி பற்றி என்ன வேணும்னாலும் என்னை கேளுங்க சொல்றேன்"
" நாங்க மட்டும் என்ன குறைச்சலா....எங்கள மாதிரி உலகத்துல எவனாலயும்
டென்னிஸ் விளையாட முடியாது. டென்னிஸ் பத்தி என்ன வேணும்னாலும் கேளு பதில்
சொல்கிறோம் "
உடனே நாராயணசாமி ஒபாமாவை கேட்டார்,
"டென்னிஸ் நெட்ல எத்தனை ஓட்டை இருக்கு, சொல்லுங்க பாப்போம்"
Re: இரண்டாவது பூனை..! (நகைச்சுவை)
Sun Mar 10, 2013 10:12 pm
இரயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார் நாராயணசாமி.
"சார்! ட்ரெயின்ல இருந்து நீங்க இறங்கி ரொம்ப நேரம்
ஆச்சே...பிளாட்பாரத்துல தனியா நின்னுட்டு என்ன யோசிக்கிறீங்க? பெட்டிய நான்
தூக்கறேன். 5 ரூபா கொடுங்க போதும்!" என்றான் போர்டர்.
"வேணாம்பா!"
"என்ன சார் நீங்க...பெட்டி பெருசா இருக்கு. எப்படி தூக்குவீங்க? கூலி கொஞ்சம் குறைச்சிக்கறேன் சார்"
"இல்லை வேணாம்பா"
"ஒருவேளை என்னால தூக்க முடியாதுன்னு யோசிக்கிறீங்களோ... நான் இதையெல்லாம்
ரொம்ப சுலபமா தூக்குவேன் சார். 5 ரூபாய்க்கு இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
"காசுக்காக நான் யோசிக்கல"
"பின்னே"
"பெட்டியை நீ தூக்கிட்டு வெளியே போறப்போ, இதோட சொந்தக்காரங்க பாத்துட்டா என்ன பண்றது. அதான் தயங்குறேன்!"

Sun Mar 10, 2013 10:13 pm
ஒருமுறை நாராயணாசாமி தனது மனைவியுடன் ஒரு டெல்லிக்கு சென்றார்.
ஒரு இடத்தில் டெல்லியை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.
நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.நாராயணாசாமிக்கும் அவர் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.
அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர்.அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர்
அவர்களை அழைக்க, அவர்கள் "வேண்டாம்" என்றனர்.
அவரும் விடாமல்,
"நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு
நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம்
போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால்
உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,''என்றார்.
உடனே
மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர்
இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.
குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.
கீழே இறக்கியதும் விமானி அந்தக் நாராயணாசாமியிடம்,
"எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.
அதற்கு நாராயணசாமி பெருமையாக,
"எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன்" என்றார்.
"எந்த தருணத்தில்...?" என்று விமானி கேட்க,
நாராயணாசாமி சொன்னார்,
"என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது"

Sun Mar 10, 2013 10:24 pm
நாராயணசாமி ஒரு பேஸ்புக் போராளி. நிறைய நண்பர்கள் அவருக்கு உண்டு.
ஒரு நாள் சாயங்காலம் அவசரமாக வீட்டுக்கு வந்த நாராயணசாமி மனைவியிடம்,
"இன்னைக்கு இரவு என் நண்பன் ஒருவனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றார்.
அதற்கு அவரது மனைவி அவசரமாக,
"என்ன விளையாடுறீங்களா? அறிவில்லை உங்களுக்கு...வீடு குப்பையாட்டம்
கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல...ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல...
அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல,
இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்பிட்டீங்க?"
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்பிட்டேன்"
"தெரிஞ்சும் எதுக்கு கூப்பிடீங்க?"
நாராயணசாமி சொன்னார்,
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

Permissions in this forum:
You cannot reply to topics in this forum