யானை வணங்கியும், பூனை வணங்கியும்
Mon Jul 06, 2015 10:49 pm
யானை வணங்கியும், பூனை வணங்கியும்
நான் இப்போது சொல்லப் போவது இரண்டு மூலிகைகளைப் பற்றியது. முதலில் யானை வணங்கியைப் பற்றிப் பார்ப்போம். யானை வணங்கி என்பது யானை நெருஞ்சில் என்றழைக்கப்படும் பெருநெருஞ்சில்தான்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்பாடு,பெரும்பாடு என்னும் கடும் உதிரப்போக்கு,சிறுநீரகக் கல்(URINARY கோளாறுகள்(NEPHRITIS), சிறுநீரக வடிகட்டும் வலை அமைப்பு பூராவும் அடைத்துக் கொள்ளும் நிலையில் சிறுநீரகம் சுருங்கிவிடும், தண்ணீர் நிறைந்து கிடக்க வேண்டிய சிறுநீரகம் கருவாடு போல வற்றிச் சுருங்கும் நிலையே KIDNEY FAILURE, இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பால் மூட்டுகளில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், இவற்றை அடியோடு துடைத்தெரியும் வல்லமை உள்ளது.
யானைகள் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக் குறையால் சரியாகத் தண்ணீர் குடிக்க இயலாததால் யானைகளுக்கு கடும் நீரெரிச்சலும், கடும் நீர்க்கடுப்பும் வரும். அப்போது யானைகள் இந்த பெருநெரிஞ்சிலை தின்று தங்கள் நீர்க்கடுப்பும், நீரெரிச்சலும் நீங்கி இதை வணங்கிச் செல்வதால் இதற்கு யானை வணங்கி என்றும், யானை நெருஞ்சில் என்றும் பெயர். மிருகங்களுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லையே!
யானை நெருஞ்சிலை காலையில் பழைய சோற்று நீராகாரத்தில் போட்டு அசைத்துக் கொண்டிருந்தால், சற்று நேரத்தில் நீராகாரம் கஞ்சி போலாகும். யானை நெருஞ்சிலை எடுத்து வெளியே போட்டுவிட்டு வெறும் அந்த நீராகாரத்தை மட்டும் மூன்று நாள் மட்டும் பருகி வந்தால், மேலே சொன்ன பிணிகள் அகலும்.
அடுத்து பூனை வணங்கி என்பது குப்பை மேனி என்ற செடிதான். இதை கசக்கி பூனை அருகில் போட்டால், பூனை கண்ணை மூடிக் கொண்டு முன்கால்கள் இரண்டையும் கண்களின் மேல் வைத்துக் கொள்ளும்.
ஏனெனில் குப்பை மேனியில் உள்ள கந்தகச் சத்து பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால் இது அவ்வாறு செய்கிறது. மேலும் இதை எலி போன்ற ஆரோக்கிய குறைவான உணவை உண்டால் அதனால் உண்டாகின்ற நஞ்சு நீங்க பூனை இரவில் சென்று உண்ணும். அப்போதுதான் பனியால் குப்பை மேனியின் கந்தக வீரியம் குறைந்திருக்கும். பின் குப்பை மேனியை பூனை வணங்கிச் செல்லும். எனவேதான் இதற்கு பூனை வணங்கி என்று பெயரிடப்பட்டது.
இதன் வேறு பெயர்கள் அரிமஞ்சரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கோழிப் பூண்டு, சங்கர புஷ்பி.
உப்பையும் குப்பை மேனிச் சாற்றையும் கலந்து,சிறு குழந்தைகளுக்கு வரும் சிரங்கு முதலான வியாதிகளுக்கு மேற்பூச்சாக பூசி வெயிலில் நிற்க வைக்க கொஞ்சம் எரிச்சல் எடுக்கும்.மூன்று நாட்களில் அத்தனை சிரங்கும் கருகி உதிரும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum