சவால்களை எதிர் கொள்ளுங்கள்
Sat Mar 02, 2013 7:31 pm
கடவுளிடம்
விவசாயி ஒருவன் கடுமையான சண்டைக்குப் போனான். கடவுளே உங்களுக்கு
பயிர்களை பற்றி என்ன தெரியும்? நீங்கள் நினைத்தபோது மழையை
அனுப்புகிறீர்கள், தப்பான சமயத்தில் காற்றை வீசசெய்கிறீர்கள். உங்களால்
பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல் நீங்கள் இந்த வேலையை விவசாயி
ஒருவனிடம் கொடுத்துவிடுங்கள் என்றான்.
உடனே கடவுள் அப்படியா?
இன்று முதல் மழை, காற்று, வெளிச்சம் இந்த மூன்றும் உன் கட்டுப்பாட்டிலே
இருக்கட்டும், என்று வரம் அருளி விட்டு கடந்து சென்றார். விவசாயிக்கு தாங்க
முடியாத சந்தோஷம். அடுத்த பருவம் வந்தது.விவசாயி மழையே பெய் என்றான், மழை
பெய்தது. அதுபோலவே காற்று, வெயில் எல்லாமே அவன் பேச்சுக்கு கீழ்ப்படிந்தது.
விதைகளை தூவினான், பயிர்கள் செழித்து வளர்ந்தது, வயல்வெளியை பார்க்கவே
படுரம்மியமாக இருந்தது.
அறுவடை
காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். திறந்து பார்த்தான், அவன்
அதிர்ந்து போனான். காரணம் உள்ளே தானியத்தை காணவில்லை. அடுத்து ஒன்று,
வேறொன்று என்று ஒவ்வொரு கதிராக அறுவடை செய்து, ஒவ்வொன்றாக திறந்து
பார்த்தான். ஒன்றிலுமே தானியம் இல்லை. ஆண்டவரே என்று கோபத்தோடு
கூப்பிட்டான். மழை, காற்று, வெயில் எல்லாவற்றையும் சரி விகிதத்தில் தானே
பயன்படுத்தினேன். ஏன்? பயிர்கள் பாழாகி விட்டது என்று கேள்வி எழுப்பினான்.
கடவுள் அவனைப்பார்த்து புன்னகைத்தார். என்கட்டுப்பாட்டிலிருந்த போது
காற்று வேகமாய் வீசும்படி செய்வேன். அப்போது தாயை இறுகப்பிடித்துக்கொள்ளும்
குழந்தையை போல, பயிர்கள் தங்களுடைய வேர்களை ஆழமாய் அனுப்பி வேர்
பிடித்துக்கொள்ளும். மழை குறையும் போது, தண்ணீரை தேடி வேர்களை ஆழாமாய்
அனுப்பும் போராட்டம் இருந்தால் தான் தாவரங்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு
வலுவாக வளரும். எல்லாவற்றையும் வசதியாக அமைத்துக்கொடுத்ததில் உன்
பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்து விட்டது. தள, தளவென வளர்ந்ததே தவிர
அவற்றால் ஆரோக்கியமான தானியத்தை கொடுக்க முடியவில்லை. விவசாயிக்கு போதும்,
போதுமென்று ஆகிவிட்டது. இந்த மழையும், காற்றும், வெயிலும். நீங்களே
எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று திரும்ப கடவுளிடமே
ஒப்படைத்துவிட்டான்.
ஆம் நண்பர்களே, வாழ்க்கை எல்லாவிதத்திலும்
சௌகர்யமாய் அமைந்து விட்டால், அதைபோன்றதொரு வெறுமை வேறெதுவும் இல்லை.
பிரச்சனைகள் நம்மை போட்டு அழுத்தும் போது தான் நம் திறமை அதிகரிக்கும்.
சவால்கள் தான் நம்மை முழுமனிதனாக மாற்றும்.
."அதுமாத்திரமல்ல,
உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும்
உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும்
மேன்மைபாராட்டுகிறோம்." ரோமர் 5:3,4
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum