கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் கொள்கை
Tue Oct 14, 2014 9:25 pm
1.பிதாவாகிய தேவனே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஸ்தாபகர். வேறு ஸ்தாபர்கள் கிடையாது. (எபேசியர் 5:27. கொலோசெயர் 1:18, அப்போஸ்தலர் 20:20)
2.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சரீரமாகிய சபையின் தலை. நாம் அனைவரும் சரீரமாகிய சபையின் அவயவங்கள். (எபேசியர் 1:23. 1கொரிந்தியர் 12:27)
3.கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஊழியர், விசுவாசி, பகுதி நேர ஊழியர், முழுநேர ஊழியர் என்ற வித்தியாசம் கிடையாது. தேவப்பிள்ளைகள் அனைவரும் தேவனின் சித்ததை பூமியில் செய்யும் அவருடைய ஊழியர்கள் ( லேவியராகமம் 20;42. 55, ஏசாயா 61;6, எபேசியர் 6:5-
4. ஒரு தனி மனிதனே தேவனுடைய ஆலயம், தேவனின் ஆலயமாகிய இரட்சிக்கப்பட்ட தேவப்பிள்ளைகளின் கூடுகையே வீட்டு சபைகள். வீட்டு சபைகள் கூடிவரும் இடம் தேவனின் வீடாகிய ஜெபவீடு எனப்படும்.
கட்டிடடங்கள் சபையாகவும், ஆலயமாகவும், முடியாது. கட்டிடங்கள் ஜெப வீடு மட்டுமே. ( 1கொரிந்தியர் 3:16, 6:19, அப்போஸ்தலர் 2:46, ஏசாயா 56:7)
5.ஜெப வீட்டில் கூடிவருகிறவர்களுக்கு அப்போஸ்தல, தீர்க்கதரிசன, சுவிசேசக, போதக, மேய்ப்பர் ஊழியம் கிடைக்கும்.
தேவப்பிள்ளைகளை தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமைப்படுத்துவார்கள்.
சபையாரை கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருசராக்குவார்கள்.
பரிசுத்தவான்களை சீர்பொருந்தப்பண்ணுவார்கள்.
சுவிசேச ஊழியத்தில் பயிற்றுவிப்பார்கள், சுவிசேசம் அறிவிப்பார்கள்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை பக்திவிருத்தியடைய பண்ணுவார்கள்.
மனுசருடைய சூதும், வஞ்சகமுமான தந்திரமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல் அடிபட்டு அலையாதவர்களாய் சபையாரை மாற்றுவார்கள்.
சபையாரை அன்புடன் சத்தியத்தைக்கைக்கொள்ள நடத்துவார்கள்
சபையாரை கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலும் வளர்ப்பார்கள்.
மேற்கூறியவைகளே சபை ஊழியர்களின் வேலையாயிருக்கும்
(எபேசியர் 4:32-37, அப்போஸ்தலர் 13:1)
6. தேவப்பிள்ளைகள் வீடுகள்தோறும் கூடி ஆராதிப்பார்கள், சுவிசேசம் அறிவிப்பார்கள், வேதத்தைக் கற்றுக் கொள்வார்கள், பிசாசுகளைத் துரத்துவார்கள், குணமாக்கும் ஊழியம் செய்வார்கள். தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், திருவிருந்து ஆராதனை நடத்துவார்கள், சீசராகிறவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்கள்.
குழந்தை பிரதிஸ்டை, கட்டிட அடிக்கல் நாட்டுவிழா, கட்டிட பிரதிஸ்டை. திருமணம், அடக்க ஆராதனை போன்றவைகளை சபையாரே நடத்துவார்கள்.
(ரோமர் 16:5, 1கொரிந்தியர் 16:19, கொலோசெயர் 4:15, பிலேமோன் 1:12, அப்போஸ்தலர் 2:46, 5:42, 12:12, 16:32, 17;5. 20’20, 5:6, 10;48, மாற்கு 16:17.18)
7.தேவப்பிள்ளைகள் தேவன் கொடுத்த தாலந்துகளை, வரங்களை பயன்படுத்தி எந்த ஊழியத்தையும் தங்கள் வீடுகளில் செய்யலாம், தேவ பிள்ளைகள் தன்னுடைய ஆசாரிய , ராஜரீக அழைப்பை நிறைவேற்றுவார்கள். ( 1பேதுரு 2:9, வெளிப்படுத்தல் 1:6)
8. காணிக்கைகள், தசம பாகங்கள் ஜெபவீடுயிருந்தால் அங்கு செலுத்தப்படும். ஜெபவீட்டின் சொத்துக்கள் பொதுவாக நிர்வாகிக்கப்பட்டு வெளியரங்கமான கணக்குகள் காட்டப்படும். சபை காரியங்கள் மூப்பர்களால் கூட்டாக நிர்வாகிக்கப்படும்.
(அப்போஸ்தலர் 4:32-37, 6: 1-5)
9.ஜெபவீட்டில் வரும் பணம்
சுவிசேச ஊழியத்தில் மூப்பர்களால் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு சம்பளமாய் வழங்கப்படும்.
தேவையுள்ள விதவைகள், திக்கிற்றப்பிள்ளைகளுக்கு உதவியாக வழங்கப்படும், ஏழைகளுக்கு ஜெபவீட்டில் உணவு கிடைக்கும்.
சுவிசேசம் அறிவிக்க உள்ளூரிலும், வெளியூரிலும் செலவிடப்படும்.
ஊழிய வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படும்.
தங்களை ஒருமுகப்படுத்தி, ஒழுக்குப்படுத்தி நடத்த தாங்கள் ஏற்றுக்கொண்ட மேல்நிர்வாகத்திற்கு ( தாலுக்கா நிலை நிர்வாக அமைப்பிற்கு ) தங்கள் வருவாயில் ஒருபாகத்தை கொடுப்பார்கள். (1கொரிந்தியர் 9;14, 2கொரிந்தியர் 11:6, 1தீமோத்தேயு 5:16, யாக்கோபு 1:27)
10.ஜெபவீட்டில் கூடிவரும் தேவப்பிள்ளைகள்
பிதாவாகிய தேவனைப்போல் குணத்தில் மாறுவார்கள் ( மத்தேயு 5:46. ரோமர் 8:29)
குமாரனாகிய இயேசுவைப்போல தங்களின் வேலையை உண்மையாய் செய்து முடிப்பார்கள் ( எபிரெயர் 3:4-5, யோவான் 14:12)
பரிசுத்தாவியானவருடைய உதவியுடன் நற்கிரியைகள் செய்து கொண்டிருப்பார்கள். (அப்போஸ்தலர் 10:38. எபேசியர் 2:10, மத்தேயு 25: 35-45)
11.ஜெபவீட்டில் கூடிவரும் அனைவருக்கும்
அடிப்படைக் கல்வி, பொதுக் கல்வி, சமூகக் கல்வி, தொழிற் கல்வி கிடைக்க வழி செய்யப்படும்.
அவரவர் அழைப்பை நிறைவேற்ற பயிற்சியும் வாய்ப்பும் வழங்கப்படும்.
பொருளாதார முன்னேற்றம் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்படும்.
12. சபையார் ஆவிக்குரிய 9 கனிகளும், 9 வரங்களும் உடையவர்களாய், சர்வாயுதவர்க்கத்தை தரித்தவர்களாய் பூரணராகி தேவ ராஜ்யத்தின் வல்லமையை வெளிப்படுத்தி, சாட்சியாய் கற்புள்ள கன்னிகையாய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து ஜீவிப்பார்கள். ( கலாத்தியர் 5:22,23, 1கொரிந்தியர் 1:4-8 12:1-12,. 2கொரிந்தியர் 11:2)
முதலாம் நூற்றாண்டு சபை இரட்டிப்பான மகிமையுடன் இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் காணப்படும்.
நன்றி: ஜான்சன்துரை - முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum