தாழ்வு மனப்பான்மையை போக்க...
Fri Sep 26, 2014 8:41 am
தாழ்வு மனப்பான்மை என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மையாகும். பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
இத்தகைய மனப்பான்மையை போக்க...
*நாம் எப்போதும் நம்மைப்பற்றி உயர்வாக மதிப்பிட வேண்டும்.
*மனதில் நல்ல சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் எப்போதும் தாழ்வாக நினைக்க கூடாது.
*மனதில் தோன்றும் எண்ணங்களில் தடைகளைப்பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கக்கூடாது.
*நம்மிடம் தன்னம்பிக்கை ஏராளமாக இருக்கிறது. அதனால் எதிலும் வெற்றி கொள்வேன் என்று நினையுங்கள்.
*பிறர் சொல்லும் நல்ல ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டு நடப்பது முன்னேற்றத்துக்கான சிறந்த வழிமுறைகளுள் ஒன்று.
*தாழ்வு மனப்பான்மைக்கு எந்த காலகட்டத்திலும் இடமளிக்கக்கூடாது. நம்மால் முடியும் என்பதே தாழ்வு மனப்பான்மையை விரட்டும் முதல் ஆயுதம்.
* தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். இந்த உலகில் தன்னம்பிக்கையினால் உயர்ந்தவர்கள் ஏராளம். அவர்களைக் குறித்தும், வளர்ந்த விதத்தை குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஏணியில் எப்படி ஏறி, உச்சிக்குச் சென்றார்கள் என்று அறிந்து, அவர்கள் பின்பற்றிய வழிகளில் சிறந்தவற்றைப் பின்பற்றுங்கள்.
* எக்காரணத்தைக் கொண்டும் ஆணவத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
* பணிவு, துணிவு, கனிவு என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum